இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

காபி பருகுவதால் பலன் ஏதும் இல்லை

சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம்கெட்டுவிடும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.


இதே காபீன் சாக்லெட்டிலும் உள்ளதுசாதாரண சாக்லெட்டில் 9 மில்லி கிராம் வரை காபீன்இருக்கிறதாம்சில உயர் ரக சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் 30 மில்லிகிராம்வரையில் காபீன் இருக்கிறதாம்இது தூக்கத்தை விரட்டி விடும்.

 ஏதாவது ஒரு வேலையில் இருக்கும்போது தூக்கம் எட்டிப்பார்த்தால் டீ அல்லது காபி    குடிக்கிறோம்அதில் உள்ள காபீன் என்ற ரசாயனப்பொருள் நம் முளையின் செயல்பாட்டை    தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.
 

து சுறுசுறுப்புக்கு காரணம் காபியல்லமனம்!

பலருக்கு காபி குடிக்காவிட்டால் பொழுதே விடியாது. அதிகாலையில் ஆவி பறக்க காபி    பருகியதும்தான் உடம்புக்குள் ஒரு சுறுசுறுப்புப் பிறப்பதாக உணர்வார்கள்.
காபியில் உள்ள `காபீன்’, உடம்புக்குச் சுறுசுறுப்பு அளிப்பதாகத்தான் இதுவரை கருதப்பட்டு  வந்தது. ஆனால் காபியில் உள்ள `காபீன் அல்ல, காபியை பற்றி மனதில் தோன்றும்  எண்ணம்தான் சுறுசுறுப்புக்கு காரணம் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு கெட்ட செய்தியையும் கூறுகிறார்கள். அதாவது, `காபீன்’,  உஷார்தன்மையை ஏற்படுத்துவதற்குப் பதிலாகப் படபடப்பையும், உயர் ரத்த     அழுத்தத்தையும் உண்டாக்குகிறது என்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான பீட்டர் ரோஜர்ஸ், வழக்கமாகக் காலையில் காபி பருகும் பழக்கம் உள்ளவர்கள், அது இல்லாமலே சுறுசுறுப்பாக இருக்க முடியும்    என்கிறார்.
எங்கள் ஆய்வின்படி, காபி பருகுவதால் பலன் ஏதும் இல்லை. அதனால் நாம் உஷார்தன்மை பெற்றதைப் போல உணர்ந்தாலும்,`காபீன் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுகிறது.  அதேநேரம் அது படபடப்பைக் கூட்டுகிறது என்று ரோஜர்ஸ் தெரிவிக்கிறார்.




2 comments:

காப்பியை தயாரிப்பது எப்படி என்பதையும் பதிவிட்டு இருக்கலாமே ....

தாங்கள் வருகைக்கு நன்றி திரு MNR அவர்கள்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites