இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 4, 2013

இன்ஸ்டன் சப்பாத்தி – உடனடி சப்பாத்தி உற்பத்தி தொழில்

நல்ல லாபம் தரும் வியாபரத்தை துவங்க இருப்பவர்கள் அனைவருக்கும் தொழிற்களத்தின் வியாபார வாய்ப்பு ஆலோசனைகள் பலனளிக்கும் என்றே நம்புகிறோம்.

     அந்த வகையில் பொருளாதார அடிப்படையில் நல்ல லாபம் தரக்கூடிய தொழில்களில் முதன்மையானவை உணவு, உடைகள் சார்ந்த தொழில்களே!! கடின உழைப்புடன் சாமார்த்தியமான சந்தை வாய்ப்பையும் கவனத்தில் கொண்டு உங்கள் தொழிலை கவனித்து வந்தால் நிச்சயமாக அதிக லாபத்தை எந்த ஒரு தொழிலானாலும் உங்களுக்கு தரும்.
இன்ஸ்டன் சப்பாத்தி – உடனடி சப்பாத்தி உற்பத்தி தொழில்


வேலைக்கு பெண்கள் செல்ல தயாரனவுடனே இன்ஸ்டன்ட் உணவு வகையில் பெரும் புரட்சிகள் ஏற்பட்டு விட்டன. தோசை மாவு, சாத வகைகள் வரிசையில் சப்பாத்திக்கும் இன்றைய இந்திய குடும்பங்களில் நல்ல வரவேற்பு  இருக்கின்றது.

நல்ல தரமான கோதுமை மாவை  சப்பாத்தி தட்டுகளாக மாற்றி அழகான பேக்குகளில் விற்பனைக்கு கொண்டு சென்று உங்கள் இலாபத்தை பெருக்குங்கள். 

பல விதமான சப்பாத்தி  மேக்கிங் மெசின்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக தொழில் முறையில் நீங்கள் உடனடி சப்பாத்தி  செய்ய ஆயத்தமாகிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு உதவகோயம்புத்தூர் மாவட்டதில் அமைந்துள்ள ஆர்.பி. இஞ்ஜினியரிங் கம்பெனி இருக்கிறது.
பலவிதமான தொழில் சார் மெசின்களை இந்நிறுவனம் சந்தைக்கு  கொண்டு வந்திருக்கிறது.


சப்பாத்தி மேக்கிங் தொடர்பாக உங்களுக்கு அடிப்படை அறிவு இருந்தாலே போதும். உடனடி சப்பாத்தி விற்பனையை துவங்க.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் மாவை  கொட்டி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி விட்டு  மெசினை ஆன் செய்தால் போதும், சில நிமிடத்தில் நன்றாக மசிந்து போதுமான பதத்தில் சப்பாத்திக்கு தேவையான மாவு பசையை கொடுத்துவிடுகிறது இந்த செமி ஆட்டோமெடிக் மெசின். பின்பு ஒரு  கன்வேயரில் போடப்படும் இந்த மாவுபசை சரியான அளவில் துண்டுகளாக்கப்பட்டு, மற்றுமொரு பிரசர் மெசினில் அழகிய வட்ட வடிவிலான சப்பாத்தி தட்டுகளை உருவாக்கி தருகிறது.
இந்த சப்பாத்தி தட்டுக்கள்  மிதமான சூட்டில் கொஞ்சம் பதப்படுத்துவதற்காக புதிய ரோலர் கன்வெயரில் சென்று பேக்கிங்கிற்கு தயாராக வெளிவருகிறது. இதை அப்படியே உங்கள்  பிரான்ட் நேம் அச்சடிக்கப்பட்ட கவரில் போட்டு பேக்கிங் மெசின் உதவியுடன் மூடி விடலாம்.
இப்பொழுது சந்தைக்கு கொண்டு செல்ல உங்கள் இன்ஸ்டன்ட் சப்பாத்தி ரெடி!


     டிபார்மென்ட் ஸ்டோர், ஏரியா வாரியான  மளிகை கடைகள் என்று உங்கள் சந்தையை  பிடிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும் இந்திய உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி, உங்களின் நல்ல தரமான உற்பத்தியை  பதிவு செய்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய இந்தஉடனடி சப்பாத்தி தயாரிப்பு  நிச்சயமான வழி.
   நேரில்   சென்று மெசின்  பற்றிய சோதனைகளை பார்த்து உங்கள் நிறுவனத்திற்கான  தயாரிப்பு இயந்திரங்களை வாங்குங்கள்.
 ஆர்.பி. என்ஜினியரிங் தொடர்பு எண் : 98948 45585


Master Crafts

Address :
Plot no. 21, Industrial Area, Phase IX,
Mohali - 160066 (Punjab) India
Phone :
+91 - 172 - 2211397,
+91 - 172 - 5092921
Fax :+91 - 172 - 2230921
Mobile :+91 - 9872095554

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites