இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, November 3, 2013

கத்துக்கலாம் கட்டில் எம்பிராய்டரி!

Building learn embroidery!




சாதாரண சேலையை அல்லது சல்வாரை கூட ஆடம்பரமாக மாற்றக் கூடியது எம்பிராய்டரி வேலைப்பாடு. மாறுகிற ஃபேஷனுக்கு ஏற்றபடி,  எம்பிராய்டரியில் எப்படி வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டு வரலாம். எளிமையான வேலைப்பாடு வேண்டுவோருக்கு, எளிமையாகவும், ஆடம்பர  டிசைன் விரும்புவோருக்கு அதற்கேற்ற படியும் எம்பிராய்டரி செய்யலாம் என்பதே இதில் சிறப்பு. வெறும் தையல் மட்டுமே தெரிந்த பூரணிக்கு, அவர்  ஆர்வத்தின் பெயரில் கற்றுக்கொண்ட எம்பிராய்டரிதான், இன்று தொழிலதிபர் அந்தஸ்தை கொடுத்திருக்கிறது!
‘‘பத்தாவதுதான் படிச்சிருக்கேன். டெய்லரிங்ல டிப்ளமோ முடிச்சேன். கணவருக்கு ஏர்ஃபோர்ஸ் வேலை. ஏர்ஃபோர்ஸ் விமன் அசோசியேஷன்ல தீவிரமா  இயங்கிட்டிருந்தேன். எனக்குத் தெரிஞ்ச தையல் கலையை வச்சு, பழைய, உபயோகமில்லாத சல்வார்ல நான் தச்சுக் கொடுத்த பைகளுக்கு நல்ல  வரவேற்பு இருந்தது. ராஜஸ்தான்ல ரெண்டு வருஷ எம்பிராய்டரிங் பயிற்சி கத்துக்கிட்டு வந்தேன். சின்னச் சின்ன கடைகள், அவங்களோட  சேலைகளை மொத்தமா கொடுத்து எம்பிராய்டரிங் பண்ணித்தரச் சொல்லிக் கேட்டாங்க.

அதுல பெரிய வருமானமில்லை. தெரிஞ்ச பெண்மணி வந்து, தன்னோட பட்டுப் புடவை ரொம்ப ‘டல்’லா இருக்கிறதா சொல்லி, ஏதாவது செய்து தர  முடியுமான்னு கேட்டாங்க. அவங்களுக்கு ஆந்திராவுல பிரபலமான ‘மக்கம்’ ஒர்க் பண்ணி, புடவையை புதுசு மாதிரி அழகாக்கிக் கொடுத்தேன்.  அப்படியே வாய்வழியா என் திறமை பரவ ஆரம்பிச்சது. கல்யாணப் பெண்களுக்கான பட்டுச் சேலையில ஒர்க் பண்ணித்தரச் சொல்லிக் கேட்க  ஆரம்பிச்சாங்க. பட்டுப்புடவைகளோட சேர்த்து வரும் பிளவுஸ் பெரும்பாலும் பிளெயினா, சிம்பிளா இருக்கும். அதை புடவையோட பார்டருக்கு ஏத்தபடி  மேட்ச் பண்ணி, காஸ்ட்லி லுக் வர்ற மாதிரி பண்ணிக் கொடுக்கிறேன்.

வெளிநாடுகள்லேருந்து, லீவுல இந்தியா வர்றவங்கக்கிட்டருந்தும் நிறைய ஆர்டர் வந்தது. ஒரே ஒரு மெஷினோட, நான் ஒரு ஆள் தனியா  ஆரம்பிச்சது, இன்னிக்கு 11 பேர் வேலை பார்க்கிற பெரிய யூனிட்டா வளர்ந்திருக்கு...’’ என்கிற பூரணி, எம்பிராய்டரிங் கற்றுக் கொள்வோருக்கு கை  மேல் காசு நிச்சயம் என நம்பிக்கை தருகிறார். ‘‘பெரிய இட வசதி தேவையில்லை. தையல் மெஷினும் எம்பிராய்டரிங் கட்டிலும் முக்கியம். கட்டிலை,  தச்சுவேலை செய்யறவங்கக்கிட்ட சொல்லியோ, தையல் பொருள்களுக்கான கடைகள்லயோ வாங்கலாம்.

800 ரூபாய் செலவாகும். மத்தபடி ஊசி, நூல் வகையறாக்களுக்கான செலவு மட்டும்தான். மணமகள் ஜாக்கெட்டுக்கு எம்பிராய்டரி பண்ண, டிசைனை  பொறுத்து 800 ரூபாய்லேருந்து 5 ஆயிரம் வரை வாங்கலாம். புடவைக்கு 2 ஆயிரத்துலேருந்து ஆரம்பம். ஒரு நாளைக்கு ஒரு பிளவுசும், ரெண்டு  முதல் 5 நாள்ல ஒரு சேலைக்கும் டிசைன் பண்ணிடலாம். 100 சதவிகித லாபம் பார்க்க முடியும்’’ என்பவரிடம், 10 நாள் பயிற்சியில், 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில், அடிப்படை எம்பிராய்டரி நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம். (96599 42928)
Thanks!!!http://www.dinakaran.com

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites