இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 2, 2013

வவுனியாவில் ஏற்றுமதி பயிராக மாறியுள்ள பப்பாசி

அமெரிக்­காவின் அய­ன­மண்­டல பிர­தே­சத்தில் உரு­வாக்கம் பெற்ற பப்­பாசி செய்கை இன்று பல்ே­வறு நாடு­க­ளிலும் பயிரி­டப்­பட்டு வரும் நிலையில் மருத்­துவ குணம் நிறைந்­த­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது.
அந்த வகையில் வவு­னியா மாவட்­டத்தில் தற்­போது பப்­பாசி செய்கை சிற­ப்பு பெற்று விளங்­கு­வ­துடன் மீள்­கு­டி­யே­றிய பிர­தேச மக்­களின் வாழ்­வா­தார தொழி­லா­கவும் காணப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட பிரதி விவ­சாய பணிப்­பாளர் ஏ.சகி­லா­பாணு தெரிவித்தார்.
வவு­னியா மாவட்­டதின் பப்­பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து ெதரி விக்­கையில்,
வவு­னியா மாவட்­டத்தில் மீள்­கு ­டியே­றிய பகு­தி­களை இலக்­காக கொண்டு நாம் பப்­பாசி செய்­கை யை மேற்­கொண்டு வரு­கின் றோம். அம் மக்­களின் அய­ராத உழைப்பும் ஆர்­வமும் இன்று வவு­னியா மாவட்­டத்தில் இருந்து பப்­பா­சியை ஏற்­று­மதி செய்யும் அள­விற்கு வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

ஆரம்ப கட்­ட­மாக வவு­னியா மாவ ட்­டத்தில் கன­க­ரா­யன்­குளம் நெடுங்­கேணி விவ­சாய போத­னா­சிரியர் பிரிவு­களில் 53 ஏக்கரில் 200 பய­னா­ளி­க­ளுக்கு ஐ.எல்.ஓ. நிறு­வ­னத்தின் நிதி­யு­த­வி­யுடன் விவ­சாய திணைக்­க­ளத்தின் தொழில்நுட்ப அனு­ச­ர­ணை­யுடன் ரெட்­லேடி எனப்­படும் கலப்­பின பப்பாசி வர்க்கம் வழங்­க ப்­பட்­டி­ருந்­தது. 2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இத் திட்­டமே இன்று வரு­மா­னம்­தரும் வழி­யாக மாறி­யுள்­ளது.
ஒரு விவ­சா­யி­க்கு 0.25 ஏக்­க­ருக்கு பப்­பாசி செய்­கைக்கு உதவி செய்­கின்றோம். அந்­த­வ­கையில் ஆரம்ப செல­வாக 800 00 ரூபா செல­வா­கின்­றது.
எனினும் நாம் முதல் கட்­டத்தில் உதவி பெற்­ற­வர்­க­ளுக்கு பல்­வேறு உத­விகள் மூலம் அதனை வழங்­கி­யி­ருந்தோம்.
இத­ன­டிப்­ப­டையில் முதல் வரு­ட த்­திற்­கான வரு­மா­னத்தை முதல் மூன்று மாதங்­களில் இருந்­து­பெற முடி­கின்­றது. அந்த வகையில் முதல் வருட வரு­மா­ன­மாக 75 ஆயிரம் ரூபா பெற முடியும். எனினும் இரண்­டா­வது வரு­டத்தில் 30 ஆயிரம் ரூபா செலவு செய்­யப்­படும் நிலையில் வரு­டாந்தம் 0.25 ஏக்கரில் மூன்று இலட்சம் ரூபா வரு­மா­ன­மாக பெற முடி­கின்­றது.
வவு­னியா மாவட்­டத்தில் பப்­பாசி செய்­கையில் ஈடு­படும் 200 பய­னா­ளி­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து வவு ­னியா வடக்கு பழச்­செய்­கை­யா­ளர்கள் கூட்­ டு­றவு சங்­க­மாக அமைக்­கப்­பட்­டுள் ­ளது.
இக் கூட்­டு­றவு அமைப்­பா­னது தங்கள் பிர­தே­சத்தில் உள்ள பழங்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்­காக சி. ஆர் எக்ஸ்போட் என­ப்படும் ஏற்­று­ மதி நிறு­வ­னத்­துடன் 49.51 வீத பங்­கு­தாரர் அடிப்­ப­டையில் வடக்கு தெற்கு பழ உற்பத்தியாளர் கம்ப னியை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகின்றது.
இதன் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விலையாக ஏற்றுமதிக்கு தகுதி யான பழங்களை கிலோ ஒன்று ரூபா 30 வீதம் வழங்கி பழ செய்கையாள ர்களை பாது காத்து வருகின்றது என வும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites