இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, November 3, 2013

கோரைப்புல் கட்டு ரூ.1,200-க்கு விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


கரூர் ,
கோரைப்புல் கட்டு ரூ.1,200 -க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோரைப்புல்
கரூர் மாவட்டத்தில் காவிரி படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்த படியாக விவசாயிகள் கோரைப்புல் பயிர் செய் கின்றனர். குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம், தவிட்டுபாளை யம், என்.புதூர், நடுப் பாளையம், நெரூர் வடபாகம், சோமூர், திருமக்கூடலூர், வாங்கல், கடமங்குறிச்சி ஆகிய பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் கோரைப் புல் பயிர் செய்யப்படுகிறது.

20 ஆண்டுகள் பயன் தரும்
ஒரு விவசாயி ஒரு முறை கோரை பயிர் செய்தால் அது 20 ஆண்டுகள் பயன் தரும். மேலும் கோரை 6 மாதத்திற்கு ஒரு முறை அறுவடை செய்யும் பணப்பயிர். நன்றாக கோரையில் மகசூல் பெற தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ப்பதுடன், உரம் போட்டு கோரைப்புல் பயிறில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண் டும்.
தரம் பிரித்தல்
கோரைப்புல்லின் தரம் அதன் உயரத்தையும், பருமனையும் பொருத்து அமையும் கோரைப்புல் ஒரு கட்டு ரூ.1,100 முதல் ரூ. 1,200 வரை விற்பனை செய்யப் படு கிறது. கோரைப்புல் கூடுதலாக இருந் தால் ஒரு கட்டு ரூ.1,200 முதல் 1,300 வரை விற்பனை ஆகிறது.
கழிவுக்கோரை
கழிவுக்கோரை 6 முடி கொண்ட ஒரு கட்டு ரூ. 200-க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப் படுகிறது. 36 இன்ச் மாறு கொண்ட 8 முடி கொண்ட ஒரு கட்டு ரூ. 450 முதல் ரூ. 500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
வயலில் உள்ள கோரையை அறுத்து முடி மற்றும் கட்டாக கட்டித்தர கூலி ரூ. 400 வரை வழங்கப் படுகிறது. ஒரு முடி என்பது 3 ஆயிரம் முதல் சுமார் 4 ஆயிரம் வரை உள்ள கோரையை கொண்டது.
விலை ஏற்றம்
கோரைப்புல் எப்போதும் ஒரு கட்டு ரூ. 500 முதல் ரூ. 700 வரை தான் விற்பனையாகும். ஆனால் தற்போது வறட்சி காரணமாக குறைவான அளவில் மட்டுமே மகசூல் கிடைத்தமையால் ஒரு கட்டு தற்போது ரூ.1,200 வரை விற்பனையாகிறது. தற்போது கிடைக்கும் இந்த நல்ல விலை இன்னும் 40 நாட்கள் வரை கிடைக்கும். அதன் பின்னர் விலை குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. ஒரு ஏக்கரில் 80 கட்டு முதல் 100 கட்டு வரை மகசூல் கிடைக்கும்.
பிற பகுதிகள்
கரூர் மாவட்டத்தில் விளை யும் கோரை திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சேலம் மாவட்டம் ஓமலூர் ஆகிய பகுதிகளுக்கு லாரி மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கோரைப்புல் விவசாயம் செய்ய முக்கிய காரணம், நெல் பயிருக்கு கூலி வேலைக்கு ஆட்கள் சரிவர கிடைப்பது இல்லை. கோரை பயிர் செய்ய அதிக தொழில் நுட்ப அறிவு தேவை இல்லை.ஒரு காலத்தில் உள்ளூர் பகுதியில் மட்டும் பயன் படுத்தப்பட்ட கோரை பாய் இன்று உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக கோரைபாய் விரிப் பாக பயன் படுத்தப்படுகிறது.
கோரை பாய் தயாரிப்பில் முத்திரை பதித்துள்ள பத்தமடைக்கு கரூர் பகுதியில் இருந்து தான் கோரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites