இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, September 3, 2015

பெர்ஃபெக்ட் பிளவுஸ்

Perfect blouse
காஸ்ட்லியான சேலையின் அழகையும் சுமாராக தைக்கப்பட்ட பிளவுஸ் கெடுத்துவிடும். அதுவே கரெக்ட் ஃபிட்டிங்கில்  தைக்கப்பட்ட சாதாரண மெட்டீரியல் பிளவுஸ், சுமாரான சேலையையும் சூப்பராகக் காட்டும். அது மட்டுமல்ல... அதை அணிந்திருப்பவருக்கு ஒரு தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

அளவு ஜாக்கெட்டை டெய்லர்கிட்ட கொடுத்து தைக்கிற போது அளவு மாறாம தச்சுக் கொடுப்பாங்களே தவிர, உங்க உடம்பு  வாகுக்கு ஏத்தபடி நிறை, குறைகளைப் பார்த்து கரெக்ட் பண்ணித் தர மாட்டாங்க. ரெடிமேட் பிளவுஸ் வாங்கும்போதும் இதுதான்  பிரச்னை. எல்லாரோட உடல்வாகும் ஒரே மாதிரி இருக்கிறதில்லை. இதையெல்லாம் யோசிச்சுதான் ஒவ்வொருத்தருக்கும்  கரெக்ட் ஃபிட்டிங்ல பிளவுஸ் தச்சுக் கொடுக்கிறதுல ஸ்பெஷலைஸ் பண்ணினேன்’’ என்கிறார் சென்னை, சைதாப்பேட்டையைச்  சேர்ந்த லதா. 

கட்டோரி, பிரின்சஸ், கிராஸ் கட் என இவர் தைக்கிற ஒவ்வொரு மாடல் பிளவுஸும் வேறு வேறு மாதிரியான உடல்வாகு  உடையவர்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துமாம். குண்டானவங்களுக்கு கட்டோரி மாடல் சரியா இருக்கும். ரொம்ப  குண்டானவங்களுக்கு துணி பத்தாம, முன்பக்கம் இழுக்கிற மாதிரி இருக்கும். அவங்களுக்கு கிராஸ் கட்டிங் மாடல் தைக்கலாம்.  ஃபேன்சி புடவைகளுக்கு பிரின்சஸ் மாடல் போடலாம். 

இப்படி ஒருத்தரோட உடலமைப்பைப் பார்த்துத் தைக்கணும். இது தவிர சாதாரண பிளவுஸ், பேக் ஓப்பன் வச்ச பிளவுஸ்,  லைனிங் பிளவுஸும் தைக்கிறேன்’’ என்கிற லதா, ஒரே ஒரு தையல் மெஷினை மட்டும் மூலதனமாக வைத்து இந்த  பிசினஸில் இறங்க தைரியம் தருகிறார். குறைஞ்சது ஒரு ஜாக்கெட்டுக்கு 80 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 200 ரூபாய்  வரைக்கும் கூலி வாங்கலாம். ஒரு நாளைக்கு 3 பிளவுஸ் தைக்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம். ஒருநாள்கூட  தொய்வில்லாம, வருஷம் முழுக்க பிஸியா வச்சிருக்கிற ஒரே பிசினஸும் கூட’’ என்பவரிடம் 2 நாள் பயிற்சியில் 5 மாடல்  பிளவுஸ் தைக்க கற்றுக் கொள்ள கட்டணம் 1,000 ரூபாய்.

நன்றி குங்குமம் தோழி

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites