வாசனை சூழ்ந்த வாழ்க்கைதான் அனைவரின் விருப்பமும். உடுத்துகிற உடை முதல் இருப்பிடம் வரை எல்லாவற்றிலும் நறுமணத்தை நாடுகிறோம். நல்ல வாசனை நமக்குள் ஒருவித தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்து வதை மறுப்பதற்கில்லை.எல்லாம் சரிதான்... பாடி ஸ்பிரேவும், ரூம் ஸ்பிரேவும் வசதி உள்ளவங்களுக்குத்தான்... மத்தவங்களுக்கு சாத்தியமா? என்பவர்களுக்கு பதில் வைத்திருக்கிறார் கலைச்செல்வி.பட்ஜெட்டுக்கு ஏற்றவகையில் நாமே பாடி ஸ்பிரே மற்றும் ரூம் ஸ்பிரே செய்து உபயோகிக்கவும், அதையே ஒரு பிசினஸாக செய்யவும் முடியும் என்று நம்பிக்கைத் தருகிறார் அவர்.
‘‘25 வருஷங்களுக்கு மேலா பினாயில், சோப் ஆயில், ஃப்ளோர் கிளீனர் பண்ற பிசினஸ்ல இருக்கேன். அந்த அனுபவத்தோட, கடந்த சில வருஷங்களா பாடி ஸ்பிரேவும், ரூம் ஸ்பிரேவும் பண்ணிட்டிருக்கேன். கடைகள்ல இந்த ரெண்டையும் வாங்கணும்னா ஒரு பெரிய தொகையை செலவழிக்கணும். தவிர நமக்குப் பிடிச்ச வாசனையில கிடைக்குமாங்கிறது சந்தேகம். ஆனா, நாமே தயாரிக்கிறப்ப, நமக்குப் பிடிச்ச மாதிரி ஸ்ட்ராங்கான வாசனையோடவோ, மைல்டாவோ எப்படி வேணா செய்யலாம். மல்லி, முல்லை, ரோஜா, செண்பகப்பூ, தாழம்பூ, மரிக்கொழுந்து, லேவண்டர், சந்தனம், பிஸ்கெட், மஸ்க், ஃப்ரூட் மஸ்க்னு 30க்கும் மேலான வாசனைகள்ல இந்த ரெண்டையும் தயாரிக்க முடியும்’’ என்கிற கலை, வெறும் 2 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம் என அழைப்பு விடுக்கிறார்.
‘‘அந்தந்த சீசனுக்கேத்த வாசனைப் பூக்கள், பூ ஆயில், சில கெமிக்கல்கள், ஸ்பிரேயர், பாட்டில், பெரிய பிளாஸ்டிக் பக்கெட், பிளாஸ்டிக் குச்சி... இவ்வளவுதான் தேவை. முழுக்க முழுக்க கைகளாலயே தயாரிக்கிறதுதான். கெமிக்கல்னு சொல்றீங்களே, அலர்ஜி வருமா, உடம்புக்கு ஒண்ணும் செய்யாதாங்கிற சந்தேகமே வேண்டாம். எல்லாமே பக்க விளைவுகள் இல்லாத, பாதுகாப்பான கெமிக்கல்கள். தேவையான பொருட்கள்ல சிலதை கெமிக்கல் கடைகள்லயும், ஒரு சிலதை மருந்துக் கடைகள்லயும் வாங்கலாம். தயாரிச்ச உடனேயே பாட்டில்கள்ல நிரப்பிடணும்.
இல்லைனா வாசனையும் போய், ஆவியாகிடும். இன்னிக்கு எல்லாரும் பாடி ஸ்பிரே விரும்பறாங்க. அதே போல ஏசி உள்ள எந்த இடங்கள்லயும் வீடு, வேலை பார்க்கிற இடம், தியேட்டர், கல்யாண மண்டபம், ஹோட்டல்னு ரூம் ஸ்பிரே அவசியமாயிடுச்சு. அதனால ஆர்டர் பிடிக்கிறதோ, பிசினஸ் பண்றதோ சிக்கலா இருக்காது. 100 மி.லி. அளவுள்ள பாடி ஸ்பிரே செய்ய நமக்கு 80 முதல் 100 ரூபாய் செலவாகும்.
அதை 150 ரூபாய்க்கு விற்கலாம். ஒரு லிட்டர் ரூம் ஸ்பிரே செய்ய 120 ரூபாய் செலவாகும். அதை 200 ரூபாய்க்கு விற்கலாம். வருஷத்துல எல்லா நாளும் தேவையிருக்கிறதால இந்த பிசினஸ்ல தொய்வே இருக்காது’’ என்கிற கலைச்செல்வி, ஒரே நாள் பயிற்சியில் பாடி ஸ்பிரே மற்றும் ரூம் ஸ்பிரே இரண்டையும் 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். ( 94441 74865)
Posted in: அலங்காரப் பொருட்கள்
4 comments:
gkk
தங்கள் வருகைக்கு நன்றி
nice
Nice post
Post a Comment