இந்தியாவில் தொன்மையாக பயிரிடப்பட்டு வரும் பயிர்வகைகளில் சிறுதானியப்பயிர் வகைகளும் ஒன்றாகும். நன்கு வரட்சியை தாங்கி வளரக்கூடிய சிறுதானியங்கள் தமிழ்நாட்டில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கம்பு, திணை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி முதலிய சிறுதானியங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளதால் நீரிழிவு, இரத்த கொதிப்பு போன்ற நோய்களுக்கு இத்தானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துகொள்ள மருத்துவர்களால் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டும் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இத்தானியங்களில் காணப்படும் 25-30% உமியை நீக்க சிறந்ததொரு கருவி இன்றுவரை இல்லாத காரணத்தால், நமது உணவு பண்பாட்டில் சிறுதானியங்களின் உபயோகம் சிறிது சிறிதாக விலகிக் கொண்டுவருகிறது
கோயமுத்தூரில்லுள்ள மத்திய வேளாண் பொறியியல் மண்டல ஆராய்ச்சி நிறுவனம் சிறுதானியப்பயிர்களில் மேற்கொண்ட நீண்ட கால ஆராய்ச்சியின் பலனாக சிறந்த முறையில் உமி அகற்ற CIAE-MILLET MILL உருவாக்கப்பட்டுள்ளது. இது திணை, சாமை, வரகு, பனிவரகு மற்றும் குதிரைவாலி முதலிய தானியங்களை சிறந்த முறையில் உமிநீக்கம் செய்யவல்லது. மேலும் கருவியினுள் தானியங்களை முதல் தடவை செலுத்தி உடைக்கும் போதே 95 சதவிகித தானியங்கள் உமிநீக்கமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது வீடுகளிலும் உபயோகப்படுத்தும் வகையில் குறைந்த அளவில் அதாவது 100 கிராம் முதல் இதில் உமி நீக்கம் செய்வது மட்டுமல்லாமல், இதன் எளிய வடிவமைப்பு பெண்களும் எளிதாக கையாளும் வகையில் உள்ளது இதன் சிறப்பம்சமாகும். இயந்திரம் வேலை செய்யும் பொழுது அதிகம் சப்தம் வராது. தானியங்களிலிருந்து பிரிக்கப்படும் உமி சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமலிருக்க சைக்ளோன் பிரிப்பான் பொருத்தப்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல் பத்து சதவிகிதம் ஈரப்பதமுடைய சிறுதானியங்களை ஒருமணிநேரத்திற்க்கு 100 கிலோ வரை உமி நீக்கம் செய்யும் CIAE-MILLET MILLலின் மொத்த எடை 120 கிலோ, இதன் விலை சுமார் ரூ. 50,000 ஆகும். சிறுதானியங்களிலிருந்து ரொட்டி, பிஸ்கட், முறுக்கு மற்றும் துரித வகை உணவுகள் தாயாரித்து விற்பனை செய்வோருக்கு CIAE-MILLET MILL ஒரு வரப்பிரசாதமாகும்.
சிறு மற்றும் குறு தொழில் புரிவோர் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட CIAE-MILLET MILLலை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
முதன்மை விஞ்ஞானி
மண்டல அலுவலகம்
மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்
கோயமுத்தூர். 641 003. தமிழ் நாடு.
முதன்மை விஞ்ஞானி
மண்டல அலுவலகம்
மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம்
கோயமுத்தூர். 641 003. தமிழ் நாடு.
0 comments:
Post a Comment