இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 18, 2014

அலங்கார 3டி பெல்

Decorative 3-D Bell




அழைப்பு மணி இருக்கும். ஆனால், அதற்கான ஸ்விட்ச் எங்கே என்பது தெரியாது. பல வீடுகளின் நிலை இப்படித்தான். அழைப்பு மணிக்கான ஸ்விட்ச் இருக்கும் இடத்தில் ஒரு அடையாளம் இருந்தால்? அடையாளமாக மட்டுமின்றி, வீட்டையே அழகாக்கும் விதத்திலும் அதை அமைக்க முடியும் என்கிறார் கைவினைக் கலைஞர் மீனாட்சி. முப்பரிமாண பெல் செய்வதில் நிபுணி.

‘‘வீட்டு வாசல்ல காலிங் பெல் ஸ்விட்ச் இருக்கிற இடத்துல இந்த 3டி பெல்லை பொருத்தி வைக்கலாம். வாசல்படியில அழகுக்காக மாட்டலாம். பூஜையறையில பொருத்தி, பூஜையின் போது அடிக்க வசதியா, அதுலயே  நிஜமான மணியையும் மாட்டி வைக்கலாம்.  அது மட்டுமில்லாம, மாடிப்படிகள்ல சின்னதுலேருந்து பெரிசு வரைக்கும் வேற வேற அளவுகள்ல வரிசையா மாட்டி வைக்கலாம். வரவேற்பறையில மெகா சைஸ் பெல்லை அலங்காரமா மாட்டி வைக்கலாம்.

இன்னும் கல்யாணம், கிரஹப்ரவேசம்னு எல்லா நல்ல நிகழ்வுகளுக்கும் பாரம்பரியமான அன்பளிப்பா கொடுக்க இது பொருத்தமானது’’ என்கிற மீனாட்சி, என்.ஆர்.ஐ. மக்களின் விருப்பமான அன்பளிப்புப் பொருளாக இது இருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.‘‘கோயில் மணியோசையை கேட்கறதுக்கு மட்டுமில்லை, பார்க்கிறதுக்கும் அழகு. இந்த 3டி பெல் சத்தம் எழுப்பாது. தேவைப்பட்டா நாமதான் மணியைப் பொருத்தணும். இதை வீட்ல மாட்டி வச்சா சுபிட்சமா இருக்கும்னு ஒரு நம்பிக்கை.

எந்த அளவுலயும் பண்ண முடியும். ரொம்ப சுலபமா சுவர்ல மாட்டிடலாம். மரம், க்ளே, பசை, அலங்கரிக்க குந்தன் ஸ்டோன்ஸ்னு இதுக்கு 2 ஆயிரம் முதலீடு தேவைப்படும். அது 50 சதவிகித லாபமா திரும்பக் கிடைக்கும். பூஜை பொருட்கள் விற்கற கடைகள்லயும், இன்டீரியர் அழகுசாதனங்கள் விற்கற கடைகள்லயும் விற்பனைக்கு வைக்கலாம். கொலு சீசன்ல விற்பனை அள்ளும்’’ என நம்பிக்கைத் தருகிற மீனாட்சியிடம் ஒரே நாள் பயிற்சியில்  தேவையான பொருட்களுடன் சேர்த்து 1,500 ரூபாய் கட்டணத்தில் 3டி பெல் செய்யக் கற்றுக் கொள்ளலாம். (98410 19293)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites