இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 18, 2014

கோதுமை பரோட்டா...


Wheat Parotta ...



சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரது விருப்பமான உணவிலும் பரோட்டாவுக்கு முக்கிய இடமுண்டு. எந்த நேரமும், எந்த இடத்திலும் கிடைக்கிற அந்த உணவு, ஆரோக்கியமற்றது எனத் தெரிந்தாலுமே அதற்கான ஆதரவு குறைந்தபாடாக இல்லை. பரோட்டா நல்லதல்ல என ஊடகங்களில் கூவிக்கூவி பிரசாரம் செய்தாலும் கேட்க ஆளில்லை. தொடர்ந்து பரோட்டா சாப்பிடுகிறவர்களுக்கு பருமன், நீரிழிவு உள்ளிட்ட பல பயங்கர பிரச்னைகள் வரும் என எச்சரிக்கிறது உணவியல் துறை. ஆரோக்கியக் கேட்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிற மக்களை எப்படித்தான் மீட்பது?

சென்னையைச் சேர்ந்த பத்மாவதி சொல்கிற தீர்வு ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது.மைதாவில் மட்டுமே சாத்தியம் என சொல்லப்படுகிற, நம்பப்படுகிற பரோட்டாவை, இவர் கோதுமை மாவில் செய்து அசத்துகிறார். வடிவத்திலோ, ருசியிலோ எந்த
வித்தியாசமும் இல்லை. ‘‘கிட்டத்தட்ட 21 வருஷங்கள் மும்பையில இருந்தேன். நார்த்ல வீட்டுக்கு வீடு விதம் விதமான சப்பாத்தி, பரோட்டா செய்வாங்க. அங்கதான் கோதுமையில பரோட்டா செய்யவும் கத்துக்கிட்டேன்.

முதல்ல எங்க வீட்டு நபர்களுக்கு மட்டும் பண்ணிட்டிருந்தேன். எனக்கு ரெண்டு பெண், ஒரு பையன். நீரிழிவு அதிகமாகி கணவர் தவறிட்டார். 97ல வந்த வெள்ளத்துல சிக்கி ஒரே மகனும் இறந்துட்டான். சென்னையில பிழைப்பு நடத்தறதே பெரிய சவாலா இருந்தது. தையலைத் தவிர எனக்கு வேற கைத்தொழில் தெரியாது. அப்ப தான் சென்னை மக்களுக்கு பரோட்டா மேல இருக்கிற ஆர்வம் பத்தித் தெரிய வந்தது. எப்பவோ நான் கத்துக்கிட்ட கோதுமை பரோட்டா நினைவுக்கு வந்து, அதைச் செய்யத் தொடங்கினேன்.

கோதுமையில பரோட்டாவானு ஆச்சரியமா கேட்டாங்க. ‘மைதா கலக்காம எப்படி சுருள் சுருளா வரும்’னு கேள்வி கேட்டவங்களுக்கு கண் எதிர்லயே செய்து காட்டி நம்ப வச்சேன். வெறும் கோதுமை பரோட்டா ஆரம்பிச்சது, அடுத்தடுத்து ஆலு பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, மேத்தி பரோட்டா, பாலக் பரோட்டா, பனீர் பரோட்டா, வெஜிடபிள் பரோட்டா, காலிஃபிளவர் பரோட்டானு நிறைய வெரைட்டிகள் பண்ற அளவுக்கு வளர்ந்திருக்கு. இது தவிர ரோல் சப்பாத்தியும், புல்காவும் கூட பண்றேன்.

இன்னிக்கு பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டல்கள்ல கோதுமை பரோட்டா பரிமாறப்படுது. அதைப் பார்த்துட்டு சின்னச் சின்ன பார்ட்டி, விசேஷங்களுக்குக் கூட கோதுமை பரோட்டா பரிமாற விரும்பறாங்க. வேலைக்குப் போறவங்க, பேச்சிலர்ஸ் எல்லாம் சமைக்க நேரமில்லாதப்ப ஹோட்டல்ல வாங்கறதையோ, ரெடிமேட் உணவுகளை வாங்கி சாப்பிடறதையோ விரும்பாம, இப்படி ஃப்ரெஷ்ஷா சமைச்சுக் கொடுக்கிறவங்களை நம்பத் தொடங்கியிருக்கிறது நல்ல மாற்றம்’’ என்கிறார் பத்மாவதி.

வெறும் 1,000 ரூபாய் முதலீட்டில் பரோட்டா பிசினஸை தொடங்க முடியுமாம். கோதுமை மாவு, வெண்ணெய், பனீர், காய்கறிகள் மட்டுமே தேவை. 1 கிலோ மாவில் 25 முதல் 30 பரோட்டா செய்யலாம். பனீர் சற்று விலை அதிகம் என்பதால் பனீர் பரோட்டா மட்டும் 2 பீஸ் 30 ரூபாய்க்கும், மற்றதை 2 பீஸ் 25 ரூபாய்க்கும் விற்கலாம். புல்கா என்றால் 15 ரூபாய்க்கு 2. சுலபமாக 50 சதவிகித லாபம் பார்க்கலாம் என உறுதியாகச் சொல்கிறவரிடம், ஒரே நாளில் 9 வகையான கோதுமை பரோட்டா மற்றும் அனைத்துக்கும் பொருத்தமான சைட் டிஷ் பைங்கன் பர்தாவையும் 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (93807 49528 / 044-2433 6063)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites