இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 18, 2014

செட்டிநாடு இட்லி, ஆப்பம்

Chettinad idli, appamஎல்லோருக்கும் ஏற்ற எளிமையான உணவு இட்லி. இல்லத்தரசிகளின் பார்வையில் இம்சையான உணவும் அதுதான். இட்லி என்பது எப்போதாவது  தான் அதன் லட்சணங்களுடன் வந்து அசத்தும். பல நேரங்களில் அது பந்து மாதிரி, கல் மாதிரி, இன்னும் ஏதேதோ மாதிரியெல்லாம் தன் அடையாளம்  இழந்து எரிச்சலைக் கிளப்பும். வெள்ளை வெளேர் நிறத்தில், பஞ்சு மாதிரியான, மெத்தென்ற இட்லி வீடுகளில் சாத்தியப்படாதா என்கிற பலரின்  ஆதங்கத்துக்குப் பதில் வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பார்வதி.

‘‘தரமான அரிசி, உளுந்தைத் தேர்ந்தெடுக்கிறதுலேர்ந்து, அரைக்கிறது, கரைக்கிறது வரைக்கும் இட்லி மிருதுவா வர பல விஷயங்கள் இருக்கு.  அதையெல்லாம் சரியா பண்ணினாலே, வீட்லயும் மெது மெது இட்லி வரும்’’ என்கிறார் பார்வதி. செட்டிநாட்டில் பிரபலமான பஞ்சு மாதிரியான இட்லி  செய்வதில் நிபுணியான இவர், ஓட்டல்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அலுவலகங்கள், விசேஷங்கள் என எல்லாவற்றுக்கும் சப்ளை செய்கிறார். இட்லி  மட்டுமின்றி, ஆப்பம், அடை, கந்தரப்பம், வெள்ளைப் பணியாரம், மிளகாய் சட்னி போன்றவற்றையும் ஆர்டரின் பேரில் சப்ளை செய்கிறார்.

‘‘பூர்வீகம் செட்டிநாடு. எங்க வீட்ல எப்போதும் அந்தப் பக்கத்து சாப்பாடு பிரதானமா இருக்கும். அதுல முக்கியமானது இட்லி. எங்க வீட்ல இட்லி  சாப்பிடற யாரும், அதோட செய்முறை ரகசியம் கேட்காமப் போக மாட்டாங்க. அக்கம் பக்கத்து வீடுங்களுக்குத் தெரிய வந்து, அப்படியே அவங்கவங்க  வேலை பார்க்கிற ஆபீஸ், கம்பெனிகளுக்கு சப்ளை பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. இட்லின்னா செய்த உடனே, சூடா சாப்பிடணும். கொஞ்சம்  ஆறினாலும் அதுல மிருதுத் தன்மை போயிடும். ஆனா, செட்டிநாட்டு இட்லியை ராத்திரி வரைக்கும் வச்சிருந்து சாப்பிட்டாலும் ருசியோ, மென்மையோ  மாறாது. அதுதான் இதுல ஸ்பெஷல்’’ என்கிறவர், இந்த பிசினஸுக்கான வழிகளையும் சொல்கிறார்.

அரிசி, உளுந்து, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களுக்கான முதலீடு மட்டும்தான். 1,000 ரூபாய் இருந்தாலே போதுமானது. மாவாகக்  கேட்பவர்களுக்கு கிலோ கணக்கில் அளந்து கொடுக்கலாம். சமைத்த உணவாகக் கேட்பவர்களுக்கு அப்படியும் தரலாம்.

‘‘ஒரு கிலோ இட்லி மாவும், ஆப்ப மாவும் 26 ரூபாய், அடை மாவு 40 ரூபாய், கந்தரப்பம், வெள்ளைப் பணியார மாவு 50 ரூபாய்க்குத் தரலாம்.  சமைச்சுக் கொடுக்கறதானால், இட்லி, ஆப்பம், கந்தரப்பம், வெள்ளைப் பணியாரமெல்லாம் 1 பீஸ் தலா 5 ரூபாய், அடை 7 ரூபாய்னு கொடுக்கலாம்.  பொருத்தமான சைட் டிஷ் அவசியம். சுத்தமாகவும், சுவையாகவும் செய்தால், 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிற பார்வதியிடம், ஒரே நாள்  பயிற்சியில் 5 விதமான செட்டிநாடு உணவுகளை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு: (95660 03699)

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites