தனக்குப் பிடித்த இன்னொருவராகத் தன்னைக் கற்பனை செய்து கொள்வதும், அப்படியொரு கற்பனை உலகில் சஞ்சரிப்பதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தனது ஆஸ்தான நட்சத்திரம் அல்லது விளையாட்டு வீரரின் மீதான அபிமானத்தின் காரணமாக, தன்னையும் அவராகவே நினைத்துக் கொண்டு, தனது நடை, உடை, பாவனைகளில் கூட அவரையே பின்பற்ற நினைப்பதும் இதன் காரணமாகத்தான்.
இன்னொருவராக மாற முடியாது எனத் தெரியாத குழந்தைகளின் உலகத்தில் அப்படி மாறி விட்டது போன்ற சின்ன சந்தோஷத்தைக் கொடுப்பவை முகமூடிகள். தனக்குப் பிடித்த நபராகவோ, கதாபாத்திரமாகவோ மாற, ஒரு சின்ன முகமூடி போதும் என்கிற குழந்தைகளின் கற்பனையில்தான் எத்தனை அழகு...
குழந்தைகளின் உள்ளம் கவரும் விதம் விதமான முகமூடிகள் செய்வதையே முழுநேரத் தொழிலாகச் செய்கிறார் சென்னையைச் சேர்ந்த கவிதா. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொண்டாட்டங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவிருக்காது. குழந்தைகளிடம் எப்போதும் வரவேற்பில் இருக்கும் முகமூடித் தயாரிப்பை நல்லதொரு வர்த்தக வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வழி காட்டுகிறார் கவிதா.
இது இப்படித்தான்...
மூலப்பொருட்கள்
பலூன், வண்ணக் காகிதங்கள், படம் வரைகிற அட்டை (சார்ட் பேப்பர்), எலாஸ்டிக் கயிறு, பசை, கத்தரிக்கோல், துளையிடும் கருவி, பழைய செய்தித்தாள்கள், போஸ்டர் கலர்...
எங்கே வாங்கலாம்? முதலீடு?
வண்ணக் காகிதங்கள், அட்டை, பசை, கத்தரிக்கோல், எலாஸ்டிக் கயிறு உள்ளிட்டவற்றை எழுது பொருட்கள் விற்பனைக் கடைகளில் வாங்கலாம். பலூன்கள் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். 100 முகமூடிகள் செய்ய 2 ஆயிரம் முதலீடு போதுமானது.
எத்தனை வகைகள்? என்னென்ன உருவங்கள்?
வண்ணக் காகிதங்களை மட்டும் வைத்துச் செய்கிற வகை, பலூன் உபயோகித்துச் செய்கிற வகை, அட்டை வைத்துச் செய்வது, வெறும் கண்களுக்கானது என 4 வகைகள் செய்யலாம். குழந்தைகளுக்கான பொருள் என்பதால் அவர்களைக் கவரும் எல்லா உருவங்களுக்குமே வரவேற்பு இருக்கும். உதாரணத்துக்கு டாம் மற்றும் ஜெர்ரி, சோட்டா பீம், பென் 10 உள்ளிட்ட கார்ட்டூன் உருவங்கள், வேடன், கோமாளி, சாமி உருவங்கள், தலைவர்கள் என எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவை அல்லாது, புதிதாக ஏதேனும் ஒரு உருவம் வேண்டுமென்றாலும் சாத்தியம்.
ஒரு நாளைக்கு எத்தனை செய்யலாம்?
பலூனில் செய்கிற முகமூடிக்கு 2 நாள் தேவை. ஒரு நாள் பலூனின் மேல் காகிதங்களை ஒட்டி, முகமூடி வடிவத்துக்குக் கொண்டு வரவும், அடுத்த நாள் வெட்டி, ஒட்டி, நிறம் பூசுகிற வேலைகளைப் பார்க்கவும் தேவைப்படும். இதில் ஒரு நாளைக்கு 8 வரை செய்யலாம். அட்டையில் செய்வதை ஒரே நாளில் முடிக்கலாம். இதில் 10 முதல் 15 வரை செய்யலாம்.
விற்பனை வாய்ப்பு? வருமானம்?
பிறந்த நாள் விழாக்களுக்கு மொத்தமாக வாங்குவார்கள். வழக்கமாக கடைகளில் கிடைக்கிற உருவங்கள் தவிர்த்து, அந்தந்த காலத்துக்கேற்ற உருவங்களைச் செய்து விற்பதன் மூலம் வியாபாரத்தைப் பெருக்கலாம். கண்காட்சிகள் நடக்கும் இடங்களில் விற்கலாம். அழகிப் போட்டிகள், ஆடையணிக் காட்சி (ஃபேஷன் ஷோ) அரங்குகளிலும் தேவையிருக்கும். வெறும் கண்களுக்கான முகமூடியை 25 ரூபாய்க்கும், முகம் முழுவதற்குமானதை 35 முதல் 40 ரூபாய்க்கும் கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.
பயிற்சி?
பலூன் மற்றும் அட்டையில் 5 வகையான முகமூடிகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய். (தொடர்புக்கு : 90031 62726)

0 comments:
Post a Comment