இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, June 22, 2014

சிங்கார செயற்கை நீரூற்று!


Singara Water Fountain!

David Villa to retire after 2014 Wo...

சலசலக்கும் நீரோடையின் சத்தமும் அருவி நீரின் குளிர்ச்சியும் யாருக்குத்தான் பிடிக்காது? அழகான அந்த அருவியின் நீரோட்டத்தையும் அமைதி  கலந்த அதன் சத்தத்தையும் எப்போதாவது மட்டுமே ரசிக்கிற வாய்ப்பு கிடைக்கிறது. எப்போதும் ரசிக்க முடிந்தால்? செயற்கை நீரூற்று அமைத்து,  அழகு பார்க்கலாமே...

வீட்டுக்குள்ளேயே அழகுக்காகவும் வாஸ்து நம்பிக்கைக்காகவும் செயற்கை நீரூற்று வைக்கிற வழக்கம் பரவலாகி வருகிறது. தண்ணீர் கொட்டும் ஓசை  வீட்டுக்கு நல்லது என்றொரு நம்பிக்கை. வீட்டையே அழகாக்கக் கூடியது இந்த நீரூற்று என்பது நிஜம். செய்யவும் விற்கவும் கற்றுக் கொண்டால்,  லாபம் கொழிக்கும் என்பது முக்கியச் செய்தி!

சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ, விதம் விதமான நீரூற்றுகள் செய்வதில் நிபுணி. அவரது வீட்டினுள் நுழைந்தால் முதலில் வரவேற்பது சலசலக்கும்  தண்ணீர் சத்தம்தான். பூஜையறைக்குப் பக்கத்தில், வரவேற்பறையில், சுவரில்... இப்படி எங்கெங்கு திரும்பினும் நீரூற்றுதான்! செயற்கை நீரூற்று  செய்வதைத் தொழிலாகத் தொடங்க நினைக்கிறவர்களுக்கு வழிகளைக் காட்டுகிறார் அவர்.

இது இப்படித்தான்...

• மூலப்பொருட்கள்

ஒயிட் சிமென்ட், செராமிக் பொம்மைகள், பிளாஸ்டிக் பறவைகள், பூக்கள், செடிகள், கொடிகள், புல் வகையறா, பிளாஸ்டிக் டப் (வட்டம், செவ்வகம் எனக்  கிடைக்கிற வடிவங்களில் எல்லாம்), பசை, அக்ரிலிக் மற்றும் எனாமல் பெயின்ட், ஃபவுன்டன் மோட்டார்.

• எங்கே வாங்கலாம்? முதலீடு?

ஒயிட் சிமென்ட், பெயின்ட் இரண்டும் ஹார்டுவேர் கடைகளிலும், மோட்டாரை அக்வேரியத்திலும், மற்ற பொருட்களை ஃபேன்சி ஸ்டோர்களிலும்  வாங்கலாம். ஒரு நீரூற்று செய்ய 800 முதல் 1,000 ரூபாய் வரை முதலீடு தேவைப்படும்.

 என்னென்ன மாடல்?
தெப்பக்குளம், கோயில் கோபுரம், ஸ்பைரல் வடிவம், மலை, பூங்கா, சுவரில் மாட்டக்கூடிய 3டி மாடல் என கற்பனைக்கெட்டும் எந்த  மாடலும்சாத்தியம்.

• எதில் கவனம் தேவை?

ஒயிட் சிமென்ட்டை சரியான பக்குவத்தில் பிசைய வேண்டும். பதம் சற்று மாறினாலும், செய்து முடித்த நீரூற்று உடைந்து போகவோ, விரிசல்  விட்டுக் கொள்ளவோ கூடும். பிறகு அதை ஒட்ட வைப்பதோ, சீர் செய்வதோ சாத்தியமின்றிப் போகும். மொத்த வேலையும் வீணாகும்.

 வருமானம்?

சிம்பிளான மாடல் நீரூற்றையே குறைந்தது 1,500 முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அளவு, வடிவம், அதில் பொருத்துகிற அலங்கார  பொம்மைகள், விளக்குகள் போன்றவற்றைப் பொறுத்து விலை அதிகரிக்கும். ஒரு நீரூற்றை முழுமையாக முடிக்க 2 முதல் 3 நாள் ஆகும். செய்து  முடித்ததும், அது முழுக்க காய்ந்த பிறகுதான் பெயின்ட் அடிக்க வேண்டும். நவராத்திரி, புத்தாண்டு, பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும்.  திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட எந்த விசேஷத்துக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கலாம் என்பதால் மற்ற நாட்களிலும் தொய்வில்லாத விற்பனை  சாத்தியம்.

• பயிற்சி?

2 நாள் பயிற்சி. தேவையான பொருட்களுடன் ஒரு மாடல் நீரூற்று செய்யக் கற்றுக்கொள்ளக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்  (95001 38796)

thanks:

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites