இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 6, 2011

பஞ்சாப் மாநிலம் - ராக் பார்க்கை


இந்தியாவின் பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தின் தலைநகர்  சண்டிகர் மாநிலம்.சண்டிகர் தனி யூனியன் பிரதேசமாக உள்ளது.ஆங்காங்கு ப்ளாண்ட்(planned)சிட்டி,பிரில்லியண்ட் சிட்டி எனவும் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.வியாபாரப் பகுதிகளும்,சாலை போக்குவரத்தும் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்பதை சந்தேகப்படுத்தியது.எங்கும் சுத்தம்,சீரான கட்டிட அமைப்புகள்,நெரிசல் இல்லாத கடைகளின் கட்டிட அமைப்புகள்,இயற்கை அமைப்புகளுடன் அமைதியான சாலை போக்குவரத்து் இவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நாங்கள் சென்றது ராக் பார்க்கை சுற்றி பார்ப்பதற்கு.எதோ ராக் பார்க்காம் என்றபடிதான் சென்றோம்.நுழைவுச் சீட்டு பெற்றோம்.



நுழைவுவாயில்
 உள்நுழைந்தபோது ரெட்டை மூக்குத்திகள் பளபளக்க நுழைவுச்சீட்டை கிழித்து தந்தார் நம்மூர் முக சாயலில் அமர்ந்திருந்த  ஒரு  தென்னகப் பாட்டி. ”நீங்கள் தமிழா” என்றதும்,ஆமாம்  விருத்தாச்சாலம்தான் எனக்கு சொந்த ஊரு,இங்கதான் 20 வருடங்களுக்கு மேலா இருக்கிறோம்னு சொன்னார்.வரிசையில் போகவேண்டியிருந்ததால் பாட்டியின் அறிமுகம் நுழைவாயிலிலே முடிந்துவிட்டது.குகைக்குள் போவதுபோல இருந்ததால் சற்று பயமாகத்தான் இருந்தது. வித்தியாசமான பாறை அமைப்புகளில்  பாறைகளை தொட்டுப்பார்க்க கூட கைகளை நகர்த்தமுடியாத ஒத்தையடிப்பாதை,மிகக் குனிந்து செல்லும்படியான குகைகள், நுழைவாயில்கள் வித்தியாசமான சிற்பங்கள்,திடிரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளுடன் இயற்கை காட்சிகள் மனதிற்கு அமைதி,ஆச்சர்யம்,குதுகளிப்பை தந்தது.ஆனால் இங்கு எதுவும் இயற்கையானதல்ல,இயற்கை அமைப்பில் அனைத்தும் செயற்கையாக செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டபோது நம்ப முடியவில்லை.





இவைகளை விட பிரமாதங்கள் என்னவென்றால் இங்கு பல விலங்குகளின் உருவங்கள்,மனித பொம்மைகள்,சிலையாக செதுக்காமல் இயற்கை உருவ  வடிவமைப்பு பெற்ற கற்களின் தொகுப்புகள்,  உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலான உருவங்கள்,பானைகள்,உடைந்த செராமிக் டைல்ஸ்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் பார்வையாளர்களை ஈர்த்தது.




 



 


இது மின்சார வாரியத்தினால உபயோகிக்கப்பட்டு
ஒதுக்கிவைத்தது சுவர்பதிப்பாக காட்சிதருகிறது.
  






உடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை

 நேக் சந்த் என்பவரின் முயற்சியிலும் ஆர்வத்திலும் உருவானதுதான் இந்த ராக் பார்க்.இவர் அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தவராம்.இந்தியா சுதந்திரம் பெற்றபோது பாக்கிஸ்தானிலிருந்து சண்டிகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.அப்போதே சண்டிகர் மாநிலம் சுவிச்சர்லாந்த் மற்றும் பிரான்சு கட்டிடக்கலைபடி வடிவமைக்கப்பட்டிருந்ததாம். அருகிலிருக்கும் மிகப்பெரிய ஏரிகளிலும்,நதிகளிலும் காணப்பட்ட அழகிய இயற்கையாகவே உருவம் பெற்றுள்ள கற்கள் நேக் சந்தை ஈர்த்துள்ளது.அவைகளை ஆர்வத்துடன் சேகரித்து காட்சிக்கு வைத்திருந்துருக்கிறார்.இங்குள்ள நீர்வீழ்ச்சிகளும் இவராலே வடிவமைக்கப்பட்டதாம்.

ஐம்பது வேலை  ஆட்களுடன் சுக்னா   ஏரிக்கு பக்கத்தில் இந்த ராக் பார்க்கை  வடிவமைத்துள்ளார். இந்த  காட்சியிடம் 30 ஏக்கர்   பரப்பளவு கொண்டதாம்.சண்டிகரின் மருத்துவமனை, உணவகம், மின்சாரவாரியம், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின்   நல்ல முழுமையான கழிவுப்பொருட்களை சேகரித்து விலங்கு மற்றும் மனித உருவ பொம்மைகள்  செய்ய பயன்படுத்தியிருக்கிறார்.சைக்கிளின் உதிரிபாகங்களாலான பொம்மைகள்  கூட சில இடங்களில் பார்த்த நினைவு உள்ளது.தாஜ்மகாலை அடுத்து இங்குதான் மக்களின் வருகை அதிகம் என  சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நாள்  ஒன்றுக்கு  தோராயமாக  ஐந்தாயிரம்  பேர் வருகைபுரிவதாக  கணக்கீடு உள்ளதாம். பஞ்சாப்  மாநிலம்  வந்தால்  இந்த ராக் பார்க்கை பார்க்க மறந்திட வேண்டாம்.


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites