மலேசியாவின் வருமானம் தரும் பயிரான எண்ணெய் பனைக்குப் பல்வேறு சிறப்பம்சங்கள் உண்டு. காப்பி, தேயிலை போன்ற பயிர்கள் வளம் தரும் மேற்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகளை மொட்டை அடித்ததுதான் மிச்சம். அவற்றால் ஒரு சொட்டு மழையைக் கூட தர இயலாது. வெறும் பணத்திற்காக அவற்றைப் பயிரிட்டு இலாபமடைந்து வருகிறார்கள் நம் முதலாளிகள். ஆனால் எண்ணைய் பனை மழைக் காடுகளாகவும் இருப்பதால் வருமானத்திற்கு வருமானம். சுற்றுச்சூழலுக்கும் நன்மை. இதை நம்மவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இனி செய்திக்கு வருவோம்
விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணெய் பனை பயிர் கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 2,500 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எண்ணெய் பனை பயிரிடும் விவசாயிக்கு அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது.
இது தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்பும் விவசாயிகள். தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது 04146-222291 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தினமணி செய்திக்காக – விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன்

- ஒரு எக்டேருக்குத் தேவையான எண்ணெய் பனை கன்றுகள் வாங்க ரூ.9,998,
- பயிரிடும் வயலுக்குச் சொட்டு நீர் பாசனக் கருவிகள் அமைக்க ரூ.15,000 மானியம்.
- எண்ணெய் பனையுடன் மணிலா, பயறு, கரும்பு போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடத் தேவையான இடுபொருள்களுக்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.
- பயிர் பதுகாப்பு மருந்துகள் நுண்ணுரம் முதலியவற்றுக்கு ரூ.5,000,
- எண்ணெய் பனை பயிரிட்ட வயலுக்கு பாசன வசதி அளித்திட புதிதாகக் குழாய் கிணறு அமைக்க விரும்பினால் ரூ.50,000 மானியம்
- சிறிய அளவில் மண்புழு உரத்தொட்டி அமைக்க ரூ.15,000 மானியமாக ஒரே விவசாயிக்குக் கிடைக்கும்.
இது தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்பும் விவசாயிகள். தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது 04146-222291 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தினமணி செய்திக்காக – விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன்
0 comments:
Post a Comment