பயன் | : | தென்னை நார்க்கழிவு துகளட்டை தயாரிக்க பயன்படுகிறது. |
திறன் | : | அமையவிருக்கும் ஆலையைப் பொறுத்தது. |
விலை | : | ரூ. 2 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும் |
அமைப்பு | : | நார்த்தொழிற்சாலைகளிலிருந்து கிடைக்கும் தென்னை நார்க்கழிவு சுற்றுப்புறம் மாசுபடுதலுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ளஊறுவிளைவிக்கும். இது லிக்னோ செல்லுலோஸ் அதிகம் உள்ள பொருளாக இருப்பதால் இதிலிருந்து துகளட்டை தயாரிக்கப்படுகிறது. துகளட்டை தயாரிக்க பீனால் பார்மால்டிஹைடு (16%) அல்லர் யூரியா பார்மால்டிஹைடு (20%) பசையாக ள பயன்படுகிறது. நார்க் கழிவும் பசையும் நன்கு கலந்து விரும்பிய ளதடிமன் அளவிற்கு 120 செல்சியஸ் 15 முதல் 20 நிமிடத்திற்கு வெப்பத்தில், அழுத்தப்படுகிறது. அட்டையில் உருவாக்கப்பட்ட முனை மற்றும் வேண்டாத பகுதிகள் வெட்டிவிடப்படுகிறது. இந்த அட்டை மேஜையின் மேல் பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடு ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். இந்த நார்க்கழிவு அட்டைக்கு நீர் உறிஞ்சும் மற்றும் விரிவடையும் திறன் அதிகமாகும். |
சிறப்பு அம்சங்கள் | : | தென்னை நார்க்கழிவிற்கு தகுந்த பயன்பாடு மேஜையின் மேற்பகுதி மற்றும் கட்டிடங்களின் உட்புற வேலைப்பாடுகளுக்கு அட்டை மிகவும் பயன்படுகிறது. |
பயன் | : | தென்னை நார்க்கழிவிலிருந்து எரிகட்டி தயாரித்தல் |
திறன் | : | மணிக்கு 125 கிலோ |
விலை | : | ரூ. 45,000 /- |
அமைப்பு | : | இந்த இயந்திரம் உட்செலுத்துவான், ஒருமுனையில் தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு, பீப்பாய் அமைப்பு. அச்சு பிழியும் குழுல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இத்திருகுத்தண்டு பால் பேரிங்கால் ஒருமுனையிலும், மற்றொரு முனை தாங்கப்படாமலும் உள்ளது. பீப்பாய் அமைப்பானது திருகுத்தண்டினால் மூடப்படும். தாங்கியின் மேல் நிலைநிறுத்தப்பட்டிருக்கும். ஒரு முனை தாங்கப்படாமல் இருக்கும் திருகுத்தண்டு இதன் நீளவாக்கிலும், அச்சு பிழியும் குழலும், 30 செ.மீ நீளமாக இருக்கும். திருகுத்தண்டானது நேரடியாக குறைக்கும் கியரில் இணைக்கப்பட்டிருக்கும். இது 5 குதிரைத்திறன் கொண்ட மோட்டாரினால் இயக்கப்படுகிறது. தென்னை நாாக்கழிவும் சாணமும் போன்ற விகிதத்தில் தேவையான அளவு நீருடன் கலந்து கட்டியாக வெளியெடுத்து உலர வைத்து எரிகட்டியாக உபயோகப்படுத்தப்படுகிறது. |
சிறப்பு அம்சங்கள் | : | தொடர்ச்சியாக எரிகட்டி பிழியும் இயந்திரம். எரிகட்டியின் எரி திறன் கிலோவிற்கு 3000 கிலோ காலரி ஆகும். தொழிற்சாலைகளுக்கு மிகவும் ஏற்றது. |
0 comments:
Post a Comment