சில வருடங்களுக்கு முன் உடைகள் வாங்கும் போது கூடவே அந்த கடையின் விளம்பரத்தோடு ஒரு மஞ்சள் பை கிடைக்கும்.அதிகமானோர் வீட்டில் உயர் கூடை சில அளவுகளில் டிசைன்களில் இருக்கும்.இப்போ இது இரண்டுமே உபயோகத்தில் குறைந்து விட்டது.வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க,நாகரீகமும் அதிகரித்து மக்களின் தேவைகளிலும்,உபயோகத்திலும் மாற்றங்கள்,முன்னேற்றங்கள். உபயோகிக்கும் பைகளிலும் மாற்றங்கள். பல வண்ணங்களிலும்,வடிவங்களிலும்,பைகள் வரத்தொடங்கி மக்களால் உபயோகிக்கப்படுகின்றன.தற்போது சாமானியர்கள் அதிகம் உபயோகிப்பது இரண்டு மரப்பிடிகள் கொண்ட’ கட்ட பை’ என பேச்சு வழக்கில் சொல்லப்படும் பைகள்.இந்த பைகள் தனியாக விற்கப்படுவதல்லாமல்,மஞ்சள் பை கொடுத்த துணிக் கடைகள்,மளிகை சாமான் மற்றும் சில கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும் தரப்படுபவது அனைவருக்கும் தெரிந்ததே.
வீட்டில் அன்றாடத் தேவைகளுக்கு பைகள் தேவைப்படின் தையல் கலையில் ஆர்வம் உள்ளவர்கள்,பொறுமை உள்ளவர்கள் நாம் உபயோகித்த ஆடைகள் சேலை,சுடிதார்,குறிப்பாக பேண்ட் இவற்றைக் கொண்டு வீட்டிலே பைகள் தயார் செய்யலாம்.புதிய துணிகள் கொண்டும் பைகள் செய்யலாம்.சிலருக்கு பை தைக்கும் முறைகள் தெரிந்திருக்கலாம்.
சில டிப்ஸ் பாருங்கள்
ஜீன்ஸ் பேண்ட் இல்லாத வீடுகள் இருக்காது, பழைய/பத்தாமல் போன ஜீன்ஸ் பேண்ட்டை எடுத்து தையலை
ஒரு கால் பகுதியைப் படத்தில் உள்ளவாறு பிரித்து மடித்துக் கொள்ளவும்.
பிரித்த கால் பகுதியை சரி சமமாக கத்தரித்துக் கொள்ளவும்.
பிறகு படத்தில் உள்ளவாறு துணியை பின் புறமாக திருப்பி இரு பக்க திறப்பு பகுதிகளை தைத்துக் கொள்ளவும்.குறிப்பாக நீங்கள் பைகள் தைப்பதற்கு ஜீன்ஸ்,சாதாரண பேண்ட் துணி,சேலை,சுடிதார், ஸ்க்ரீன் துணி இப்படி எந்த விதத் துணிகளாக இருந்தாலும் உடைகள் தைப்பது போல பையின் வெளிப்புறப் பிடிகள் வெளிப்புற பாக்கெட் தவிர ,உள் பாக்கெட் வைப்பது எல்லாம் துணியின் பின் புறத்தில்தான் செய்தாக வேண்டும்.அப்போதுதான் வெளிப் பக்கம் நல்லத் தோற்றம் கிடைக்கும்.
படத்தின் படி இரு பக்க வட்டிலும் தைத்த பிறகு இப்போது உங்களுக்கு
ஒரு பக்கம்(பையின் வாய்ப் பகுதி/மேல் பகுதி) திறப்பாகவும்,இதற்கு கீழ்ப் பகுதி பையின் அடிப் பகுதியாகவும் கிடைக்கும். அடிப் பகுதியின் இரு மூலையிலும் சிறிய இரு கிராஸ் தையல் போட்டுக் கொள்ளவும்
சில டிசைன்களைப் பாருங்கள்:.
ஜீன்ஸ் துணியாக இருப்பதால் பையின் வலுவிற்கு இந்த ஒரு துணியே போதும்,மற்ற துணிகளாயின் வலுவிற்காக எந்த வடிவத்தில் பை தேவையோ அதே வடிவத்திற்கு இரண்டு அல்லது மூன்று துணிகளை அதே வடிவில் கத்தரித்து ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து தையல் இடவும்.
இல்லையெனில் கடைகளில் மீட்டர் கணக்கில் போம்கள் விற்கப்படும் அதை பை வடிவத்திற்கு கட் செய்து பைத்துணி வெளியில்,நடுவில் போம்,இதற்கு மேல் ஒரு சதா துணி வைத்து தைத்து விட்டால் பையின் உள்புறம் போம் தெரியாது.
இல்லையெனில் எங்கள் பகுதி பெண்கள் சிலர் கோதுமை மாவு வாங்கும் பாலியஸ்டர் சாக்குப் பைகளை போம்கு பதிலாக கட் செய்து உள்ளே வைத்து தைத்து விடுகிறார்கள்.
பைக்கு பிடி செய்வதற்காக பிரித்த பேன்ட்டின் மீதித் துணியிலிருந்து படத்தில் உள்ளவாறு கத்தரித்து அழகாக இரு பக்கங்களிலும் மடித்து தைத்துக் கொள்ளவும்.பிடியின் நீல அகலம் நமது விருப்பம்.
பையின் மேல்பகுதி/வாய்ப்பகுதிக்கு ஜிப் வைப்பதாக இருந்தால் உள்புறமாகவே வைத்து தைத்து விடவும் ,ஜிப்களும் சில டிசைன்&கலரில் கடைகளில் கிடைக்கிறது,பிடிகளும் அப்படியே மீட்டர் கணக்கில் கடையில் கிடைக்கும்.
ஒரு பாக்கெட்டையும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதை வெளிப்புறமாக தைத்துக் கொள்வோம்.
இப்போது அழகான சிறிய பை தயார்.
இதே பை பெரிய அளவில் வேண்டுமெனில் இது ஒரு கால் பகுதி ஒரு பக்கமும்,மற்றொரு கால் பகுதி மறு பக்கத்திற்கும் சம அளவாக வெட்டிக் கொண்டால் பெரிய பை கிடைத்து விடும்.
எங்கள் பகுதியில் இந்த மாதிரியான பைகள் தைக்க சில கடைகள் உள்ளன,சாதாரண நூலே போதும்,நைலான் நூல்களும் உபயோகிக்கலாம்.
சில டிசைன்களைப் பாருங்கள்:.
. முதல் மூன்று பைகளின் முறையே மூன்று சதா பேண்ட்டுகள்,கடையில் டிசைனுக்கு ஏற்றவாறு பணம் கொடுத்து தைக்கப்பட்டது. நான்காவது எனக்கு பத்தாமல் போன சுடிதாரில் நான் தைத்த முதல் பை(மாதிரி).வலுவிற்கு துணிகள் கொடுத்து தைத்துள்ளேன்.ப்ளைன் துணியில் தைக்கும் போது மேலே பென்சிலில் படம் வரைந்து அதன் மேலே தையல் விடலாம். முதல் மூன்று பையின் மேல் பாருங்கள்,பேப்ரிக் பெயிண்டிங்,செமிக்கி வேலைப்பாடுகள் செய்யலாம் .நமது விருப்பம் . வருடக் கணக்கில் உழைக்கும்.
இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட பைகள்.முதல் இரண்டு படங்களிலிருந்து பேண்ட்டின் சைடு பக்கெட்டுகள் கத்தரிக்கப்பட்டு தனியே எடுத்து உள்புறமாக தைக்கப்படுள்ளது,இதை சுவற்றில் ஆணியில் மாற்றிவிடலாம்,எதாவது வைத்துக்கொள்ள,அல்லது மேலே பிடி தைத்து சிறு பையாக வைத்துக்கொள்ளலாம்.குழந்தைகளுக்கு விளையாட்டுப் பையாக வைத்துக் கொள்ளலாம்.
அடுத்த பிங்க் கலர் பையை பார்த்தவுடனே தெரியும் இது பேண்டின் மேல் பகுதி,அலங்காரத்தை பாருங்கள்,பிடியாக இருப்பது பெல்ட்.கற்பனைக்கு ஏது எல்லை.உபயோகிக்க மனம்தான் வேண்டும்.
எங்கள் பகுதிக்கு வந்தபோது அனைவரும் இது போன்ற பைகளை உபயோகிப்பதைப் பார்த்து சில கடைகளில் விசாரித்த போது சரியான பதில் இல்லை.பிறகுதான் ஒருவரிடம் தெரிந்து கொண்டேன்.இவைகள் உபயோகப் படுத்தப்பட்ட துணிகளால் தைக்கப்படுகிறது,இதற்கென தனிக் கடைகள் உள்ளன என்று,பிறகு அந்த கடைகளுக்கு சென்று பார்த்தால் ( புதுத் துணிகளும் கொடுக்கலாம்) அம்மாடி எத்தனை டிசைன்கள், சூட்கேஸ்கள் வடிவிலும் தைக்கிறார்கள். அக்கம் பக்கத்து பெண்மணிகள் சிலர் வைத்திருப்பது தன் வீட்டு மெசினில் தானே தைக்கிறார்களேன்று பிறகுதான் தெரியவந்தது. பிறகு நானும் பார்த்து கேட்டு கற்றுக் கொண்டேன்.ஆனால் அவர்கள் அளவிற்கு கச்சிதமாக தைப்பது சிரமம்தான்.
தற்போது பரவலாக பாலித்தீன் பைகள் உபயோகிக்கக் கூடாது என்பதை பலரும் அறிவோம்.இந்த மாதிரி பைகள் எல்லோரும் பயன்படுத்தினால் நல்லது.
0 comments:
Post a Comment