மூங்கில் என்றால் புல்லாங்குழலைத் தவிர நமக்கெல்லாம் வேறு ஒன்றும் நினைவுக்கு வராது. சென்னை, ஆவடியைச் சேர்ந்த பவானியின் கைகளில் மூங்கில் சொன்னபடியெல்லாம் கேட்டு, அழகழகான கலைப் பொருட்களாக வடிவம் பெறுகிறது!
‘‘மாஸ்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் படிச்சிருக்கேன். படிக்கும் போது டெக்ஸ்டைல் டிசைனிங்தான் என்னோட பிரதான பாடம். என்னோட படிப்பு சம்பந்தப்பட்ட பிரஷ், டூல்ஸை எல்லாம் வச்சுக்க, சும்மா நானாகவே மூங்கில்ல ஒரு பாக்ஸ் டிசைன் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் விசாரிக்கவே, எனக்கும் அதுல ஆர்வம் அதிகமானது.
அப்படியே மூங்கில்ல ஒவ்வொரு பொருளா பண்ண ஆரம்பிச்சேன். இன்னிக்கு அதுதான் என்னோட முதல் விருப்பம்னு சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கு...’’ என்கிற பவானி, மூங்கிலில் பேனா ஸ்டாண்டு, மொபைல் ஸ்டான்டு, வால் ஹேங்கிங், கொட்டாங்குச்சி ஸ்டாண்டு, லேம்ப் ஷேடு, நகைப்பெட்டி, பிளவர் வேஸ் என விதம்விதமான பொருட்களைச் செய்கிறார்.
‘‘மரச்சாமான்கள் விற்கற கடைகள்ல மூங்கில் குச்சிகள் கிடைக்கும். அடிக் கணக்குல வாங்கணும். அது தவிர, கட்டிங் டூல்ஸ், பிரம்பு, கலர், ஸ்க்ரூ, அலங்காரப் பொருட்கள்னு 1,000 ரூபாய் முதலீடு போதும். ஒரு அடி மூங்கில் குச்சியோட விலை 50 ரூபாய். ஒரு பொருள் பண்ண குறைஞ்ச பட்சம் ஒரு அடி தேவை. 50 சதவிகித லாபம் உறுதி.
கட்டிங் டூல்ஸ் வச்சு நாமளே மூங்கிலைக் குடைஞ்சு, வெட்டி, நமக்கேத்த டிசைனை கொண்டு வரலாம். ஒரு பொருள் பண்ண வெறும் 45 நிமிடங்கள் போதும். ஆடம்பரமான அன்பளிப்புகள் கொடுக்கணும், அதே நேரம் பட்ஜெட்டும் இடிக்கக் கூடாதுன்னு நினைக்கிறவங்க, மூங்கில் பொருட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இன்னும் சொல்லப் போனா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, டிசைனர் பீஸாகவும் செய்து தரலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எத்தனை காலத்துக்கும் அப்படியே இருக்கும்’’ என்கிறவரிடம், 2 நாள் பயிற்சியில் 5 விதமான மூங்கில் கலைப் பொருட்களை தேவையான பொருட்களுக்கான செலவுடன் சேர்த்து 1,000 ரூபாயில் கற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு 97892 99716

0 comments:
Post a Comment