ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்.
1. சந்தன வத்தி.
உலர வைக்கும் இயந்திரம்
சுமார் 15 செ.மீ முதல் 25
செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள்
விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும்
அடிப்படைத் தேவையாகும்
இதற்கு பெரிய
மூலதனம் தெவையில்ல. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும்
உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சுறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள
நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம்
கிடைக்கும்.
ஊதுவத்தி வகைகள்
ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்தி, மட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்தி, தாழம்பூ வத்தி, ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள்
இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும்
பொருள்கள் தான் வேறு.
1. சந்தன வத்தி.
தேவையான பொருள்கள்
சந்தன பவுடர் -500கிராம்
சாம்பிராணி -500கிரம்
வெட்டிவேர் - 200 கிராம்
கிச்சிலிக் கிழங்குப் பொடி -100 கிராம்
புனுகு -2 கிராம்
கஸாதூரி -2 கிராம்
பன்னீர் -100 மில்லி இவைகளை அறைக்க பயன்படும் இயந்திரம்
ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்
ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்தி, மட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்தி, தாழம்பூ வத்தி, ரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள்
இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும்
பொருள்கள் தான் வேறு.
அடிப்படையான பொருள்
வழவழப்பான பலகை
ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சிமார் 60 செ.மீ
நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள்
தயரிக்கப்படுகின்றன.
மூங்கில் குச்சிகள்
செயல் முறை
வெட்டிவேர் கிச்சிலிக் கிழங்குப் பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய
துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக்கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில்
சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு
அதனுடன் சந்தனப் பவுடர், வெட்டிவேர், கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப்
பிசையவும். கடைசியில் புனுகு, கஸ்தூரி இரண்டையும்
சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி
வைக்கவும்.
மூங்கில் குச்சிகளை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட
கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடிப்
பாகத்தில் இரண்டு செ.மீ விட்டு தள்ளி மணைமீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக்
கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது
போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில்
கடினமாகத் தோன்றினாலும் ஒருநாளில் பழகிவிட்டால் ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக
வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால்
தேய்த்து விடவேண்டும்.
பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை ந்ழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தோய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தோய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியேக் காட்டும்.
பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை ந்ழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தோய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தோய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியேக் காட்டும்.
வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள், அட்டைக் குழாய்கள் தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும்
10, 50, 100 வத்திகளை
மெல்லிய எண்னெய்க் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை
எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே
நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.
2. கதம்ப சந்தன வத்தி.
தேவையான பொருட்கள்
சந்தனப் பவுடர் -300 கிராம்
சாம்பிராணி -100 கிராம்
மட்டிப்பால் -75 கிராம்
மைனாலக்கிடிப் பட்டை -150 கிராம்
கிச்சிலிக்கிழங்கு -75 கிராம்
கோரைக் கிழங்கு -75 கிராம்
வெட்டிவேர் -30 கிராம்
விளாமிச்சம்வேர் -30 கிராம்
அன்னசிப் பூ -30 கிராம்
ரோஜாப் பூ -30 கிராம்
இலவங்கப்படை -30 கிராம்
இலவங்கம் -10 கிராம்
கார்போக அரிசி -30 கிராம்
ஜாதிப் பத்திரி -10 கிராம்
கிளியூரல்பட்டை -30 கிராம்
ஏலக்காய் -30 கிராம்
மரிக்கொழுந்து -30 கிராம்
தவனம் -30 கிராம்
ஜாதிக்காய் -இரண்டு
செய்முறை
சந்தனப் பவுடர், சாம்பிராணி, மட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு
வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணி, மட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன்
போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள்.
எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும் மூடி ஒரு இரவு முழுதும்
வைத்திருங்கள். மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன
மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்
மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்
U.K. Industries
Mr. Abdul Khuddus (Managing Director)
No. 3, Survey No. 55/25, Bellahalli Cross, Yelahanka Hobli
Bengaluru - 560064, Karnataka, India
Mr. Abdul Khuddus (Managing Director)
No. 3, Survey No. 55/25, Bellahalli Cross, Yelahanka Hobli
Bengaluru - 560064, Karnataka, India
0 comments:
Post a Comment