இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, September 24, 2012

கொட்டாங்குச்சி தொழில்

பிள்ளையார், மனித உருவங்கள், கோமாளி, பேனா ஸ்டாண்டு, பூக்கூடை... இன்னும் இப்படி எத்தனையோ இருக்கின்றன அங்கு! அத்தனை பொருட்களும் கொட்டாங்குச்சியில் செய்யப்பட்டவை என்றால் நம்ப முடியவில்லை. சென்னையிலுள்ள பள்ளி ஒன்றில் கைவினைக் கலை ஆசிரியராக வேலை பார்க்கிற லட்சுமியின் கைவண்ணத்தில் சாதாரண கொட்டாங்குச்சி கூட கலைப் பொருளாகிறது.

‘‘32 வருஷங்களா கைவினைப் பொருட்கள் பண்ணிட்டிருக்கேன். புதுசா எதையாவது வாங்கி, ஒரு கலைப் பொருளை உருவாக்கிறதைவிட... தேவையில்லைன்னு ஒதுக்கித் தள்ற பல பொருட்களை, அழகான கலைப் பொருளாக்கிக் காட்டறதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதுல ஒண்ணுதான் இந்தக் கொட்டாங்குச்சி டிசைன்கள்’’ என்கிற லட்சுமி, கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘உபயோகமில்லாத கொட்டாங்குச்சி, ஃபேப்ரிக் கலர், எம் சீல், வார்னிஷ், அலங்காரப் பொருட்கள்... வெறும் 75 ரூபாய் முதல் 100 ரூபாய் வரைதான் முதலீடு.’’

என்னென்ன உருவங்கள்? என்ன ஸ்பெஷல்?
‘‘சாமி உருவங்கள், கார்ட்டூன், பூத்தொட்டி, பேனா ஸ்டாண்டு, விலங்குகள், பேப்பர் வெயிட், செல்போன் ஸ்டாண்டு என கற்பனைக்கேற்றபடி எதையும் உருவாக்கலாம். எம் சீல் உபயோகித்துச் செய்வதால், எத்தனை வருடங்களானாலும் உடையாது. எடை குறைவான அலங்காரப் பொருள். சின்னச் சின்ன விசேஷங்களுக்கு அன்பளிப்புகள் கொடுக்க ஏற்றது. ஆணி அடிக்காமல், அப்படியே வீட்டில் அலங்காரமாக வைக்கலாம்.

தேங்காய் வேறு வேறு அளவுகளில் கிடைப்பதால், நமக்குத் தேவையான அளவு கொட்டாங்குச்சியைத் தேர்ந்தெடுக்கலாம். தேங்காயை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு உடைத் தால், சரி பாதியாக உடையும். பிறகு அதை மிருதுவாக்கி, டிசைன் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 6 உருவங்கள் வரை செய்யலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கைவினைப் பொருள்கள் விற்பனையாகிற கடைகளில் கொடுக்கலாம். பிறந்த நாள் மாதிரியான விசேஷங்களில் ஒரே மாதிரியான ரிட்டர்ன் கிஃப்ட் கேட்பவர்களுக்கு மொத்தமாக ஆர்டர் எடுத்துச் செய்து தரலாம்.

ஒன்று செய்ய 2 மணி நேரமாகும். ஒரு டிசைனை 200 முதல் 250 ரூபாய் வரை விற்கலாம். 100 சதவீதம் லாபம்
நிச்சயம்.’’

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites