இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, July 2, 2012

சணல் பை

''எந்த பிஸினஸ்னாலும், எல்லாரும் பண்ணுற வேலையை நாமளும் செய்யாம... மாத்தி யோசிச்சா, வெற்றியைக் கொண் டாடலாம். அதேபோல எந்தத் தொழில்லயும் இடையில் குறுக்கிடும் 'கறுப்பு நாட்களை' கடந்தே ஆகணும். கொஞ்சம் நிதானிச்சு, அதுக்கான காரணத்தைக் கண்டு பிடிச்சு சரிபடுத்திட்டா, வெற்றி நம்ம கையைவிட்டு நகராது!''
- சிம்பிள் லாஜிக் சொல்கிறார் சுசிலா. வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் மாதம் 25 ஆயிரம் லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரைப் பெண்!
''எனக்கு ஓரளவு தைக்கத் தெரியும். மகளிர் குழுக்களுக்கு மதுரையில டெய்லரிங் கோச்சிங் கொடுத்தாங்க. அதுல கலந்துகிட்டப்போதான் தைக்கறதுல கிரியேட்டிவிட்டியைப் புகுத்தினா... வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிஞ்சுது. பயிற்சி முடிஞ்சதும் எல்லாரும் ஆடைகள் தைக்கத்தான் களம் இறங்கினாங்க. நானும் அதே பாதையில போனா... பந்தயத்துல முந்த முடியாதுனு புரிஞ்சுது. மாற்றுப் பாதையை யோசிச்சு தேர்ந்தெடுத்தேன். அதுதான் வெல்வெட், சணல் பைகள் மற்றும் பர்ஸ் தயாரிப்பு!'' என்று சொல்லி பெருமிதமாகப் பார்த்தவர், தொடர்ந்தார்...

''வெல்வெட் துணி, நூல், லேஸ், ஜிப், மேல கவர் பண்ணுற ரன்னர், அலங்காரத்துக்குக் கண்ணாடி, பாசி ரகங்கள்... இவ்வளவுதான் பேக் செய்றதுக்குத் தேவையான மெட்டீரியல். மதுரையில இருக்கற துணிக்கடை பஜாருக்கு போனீங்கனா... வெல்வெட் துணி ஒரு மீட்டர் 150 - 200 ரூபாய், ஜிப் 3 ரூபாய் 50 காசு, ரன்னர் 15 பைசாவிலிருந்து ஒரு ரூபாய்... இந்த விலைகள்ல கிடைக்கும். ஆகக்கூடி ஒரு பேக் தைக்கறதுக்கு 60 - 80 ரூபாய் செலவாகும். அதை மார்க்கெட்ல 120 - 150 ரூபாய் வரை விற்கலாம். ஒரு பைக்கு மினிமம் 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.
பைக்காக வெட்டும்போது, மிச்சமாகி விழற வெல்வெட் துண்டு துணிகளை குப்பையில போடாம, அதை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமானு யோசிச்சேன். குழந்தைகள் விளையாடுறதுக்கு குட்டி குட்டி ஹேண்ட் பேக், கிஃப்ட் அயிட்டம், செல்போன் பவுச்னு சின்ன சின்னப் பொருட்களை தயார் பண்ணி வித்தேன். அதன் மூலமாவும் உபரி லாபம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்துல மகளிர் குழு கண்காட்சிகள், ரீடெய்ல் கடைகள் இதெல்லாம்தான் என்னோட மார்க்கெட்டிங் ஏரியா.

இந்தத் தொழில், ஓரளவுக்கு நிலையான வருமானம் கொடுக்கவே, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். சணல் பைகளுக்கு மார்க்கெட்ல நல்ல வரவேற்பு இருக்கிறது புரிஞ்சுது. 'நமக்கு... தையல், மார்க்கெட்டிங் எல்லாம் ஏற்கெனவே தெரியும். மெட்டீரியலை மட்டும் மாத்தினா, இன்னொரு தொழிலும் கைவசம் வந்துடுமே!'னு யோசிச்சு, சணல் பை தயாரிப்புலயும் இறங்கினேன்.
சணல் பைக்கான மூலப்பொருள் பெரும்பாலும் சென்னையில மட்டும்தான் கிடைக்கறதாலா... போக்குவரத்துக்கே நிறைய செலவாகி, லாபம் ரொம்பவும் குறைவாத்தான் கிடைச்சுது. அதனால, பேங்க்ல லோன் வாங்கி மொத்தமா சணல் வாங்கிப் போட்டேன். மீட்டர் 80 - 140 ரூபாய் வரையில விலையிலயே சணல் கிடைச்சுது. இதை வெச்சு ஜவுளிக்கடை பைகள் உட்பட நிறைய பைகள் தயாரிச்சேன். ஒரு சணல் பை, 50 ரூபாய் முதலீட்டுக்கு... 30 ரூபாய் லாபம் தந்துச்சு.
பர்ஸ்களை செய்ய பெரிய முதலீடு தேவை இல்லை. சாதாரண துணி, ஜிப், ரன்னர், நூல்... அவ்வளவுதான்! சின்ன பர்ஸ் செய்ய முதலீடு 10 ரூபாய்தான். அதை மார்க்கெட்டுல 30 ரூபாய்க்கு விக்கலாம். பெரிய பர்ஸை 30 - 40 ரூபாயில தயாரிக்கலாம். அதை 65 - 70 ரூபாய்க்கு விற்கலாம். கண்ணாடி, பட்டன், பாசினு அழகுபடுத்தினா இரட்டிப்பு லாபம் கிடைக்கும்'' என்ற சுசிலா, ஓர் உழைப்பாளியாகத் தொழிலைத் தொடங்கி, இன்று முதலாளியாக மாறியிருக்கும் கதையைத் தொடர்ந்தார்.

''ஆர்டர்களைப் பெருக்கறதுக்கு என்ன வழினு யோசிச்சேன். இந்த ஊர்லயே உட்கார்ந்து வியாபாரம் பண்ணினா படியேற முடியாதுனு புரிஞ்சது. விருதுநகர், கோயம்புத்தூர், டெல்லி, ஹரியானா, கோவா, ஹைதராபாத்னு ஊர் ஊரா கிளம்பிட்டேன். அங்க இருக்கிற கைவினைப் பொருட்கள் கண்காட்சியில, நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைக்கற அளவுக்கு என்னோட தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு. சில நிறுவனங்களும் விளம்பரத்துக்காக அவங்க லோகோ வெச்சு பைகள் தயாரிச்சு தரச்சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.
ஸ்கூல் ரீ-ஓபன், திருவிழா, பொங்கல், தீபாவளி நேரங்கள்ல வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு கட்டத்துல என்னால தனியாளா எல்லா வேலைகளையும் பார்க்க முடியல. 'சிலர், நம்மள முன்னேத்திவிட்ட மாதிரி... நாமும் சிலரை முன்னேத்திவிடுறது நல்ல விஷயம்தானே!'னு வெளி வேலைக்கு ஆள் வெச்சுக்கிட்டதோட, டெய்லரிங் தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு என்னோட ஆர்டர்களைப் பிரிச்சுக் கொடுத்து தைச்சு வாங்கினேன். இப்போ கிட்டத்தட்ட ஆறு ஊர்கள்ல வியாபாரம் பண்றேன். எட்டாவதுகூட தாண்டாத நான்... மாசம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறேன். என்னோட தொழில் முயற்சிகளைப் பாராட்டி பல விருதுகளும்கூட வாங்கியிருக்கேன்!'' என்று பெருமையோடு சொன்னார் சுசிலா. இவரின் கணவரும் தொழிலுக்குத் துணையாக இருக்கிறார். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
''தையலும், கொஞ்சம் கற்பனைத் திறனும் போதும்... ஆயிரம் ரூபாய் முதலீட்டில்கூட இந்த வெல்வெட், சணல் பைகள் தொழிலை ஆரம்பிச்சுடலாம். தண்ணியில தள்ளி விட்டா... தானா நீச்சல் பழகிற மாதிரி, மார்க்கெட்டிங், தொழில் போட்டி, லாபம், நஷ்டம்னு எல்லாம் கத்துக்கலாம்... முன்னேறணும்ங்கிற வெறி மனசுல இருந்தா!''
- வெற்றி சூத்திரம் சொல்லி முடிக்கிறார் சுசிலா!

5 comments:

நன்றி. பயனுள்ள தகவல். சுசிலா அவர்களை தொடர்பு கொள்ள முகவரி தந்தால் உதவியாக இருக்கும். உத்வுங்களேன்.

pls help me. i want suseela mam adress and phone no.

தாங்கள் வருகைக்கு நன்றி .மேல் கட்டுரை ஒரு மாத இதழில் வந்தது இதில் முகவரி இல்லை .

Mr.T. Ayyappan, MPO, National Jute Board
t_ayyappan@yahoo.com
Please send the email
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

PSG College of Technology
Post Box No. 1611
Peelamedu
Coimbatore - 641 004
Tamil Nadu
INDIA
Phone No: 422-2572177, 2572477, 2580455, 2578455, 4344777

Fax Number : 91-422-2573833
Grams : 'CHARITY'
Email: principal@psgtech.edu, principal@psgtech.ac.in


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
EDUCATR TRUST
2 / 5A, Mamarathupatti Road,
USILAMPATTI (P.O.) - 625 532.
Madurai (Dt.)
Tamilnadu, India
Tele : 04552 - 251406, 252522
Fax : 04552 - 252522
Mobile : 98421 06706
E-Mail : educatr_brindh@yahoo.com
Website : www.educatrindia.org

Chennai :

New No. 25 (Old No. 10),
First Floor, Kodambakkam,
High Road, Nungambakkam,
Chennai – 600 034
Tel. No. (044) 2822-4967 / 2822-4463
Fax No. (044) 2822-4462
Email : njbchennai@dataone.in
njbchennai@bsnl.in

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites