இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, July 8, 2012

பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி


ராஜ்கோட்:இந்தியாவில், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் பயன்பாடு, சென்ற, 2011-12ம் நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் ஒப்பிடும் போது, இதில், நம்நாடு மிகவும் பின்தங்கியுள்ளது என, ஐகான் சந்தை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த, 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 16.20 லிட்டர் என்றளவில் இருந்தது. இது, சென்ற நிதியாண்டில், 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 19.60 லிட்டராக அதிகரித்துள்ளது. இருப்பினும், உலக சராசரி பயன்பாட்டுடன் (30 லிட்டர்) ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவான அளவாகும்.நாட்டின் ஒட்டு மொத்த பாட்டில் குடிநீர் விற்பனையில், தென்னிந்தியாவின் பங்களிப்பு, 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதையடுத்து, மேற்கு மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பை கொண்டுள்ளன.
பாட்டில் குடிநீர் பயன்பாட்டில், மேற்கத்திய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, மெக்சிக்கோவில், தனி நபரின் பாட்டில் குடிநீர் பயன்பாடு, சராசரியாக, 250 லிட்டர் என்றளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு, 190 லிட்டர் என்றளவுடன் இத்தாலி, இரண்டாம் இடம் வகிக்கிறது. உலகளவில், தனிநபர், பாட்டில் குடிநீர் பயன்பாட்டில், முதல், 20 நாடுகளில், ஆசியாவை சேர்ந்த, தாய்லாந்து (115 லிட்டர்), சீனா-ஹாங்காங் (95 லிட்டர்), ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் நுகர்வோரின் செலவிடும் வருவாய் உயர்ந்து வருவது போன்றவற்றால், வரும், 2020ம் ஆண்டிற்குள், நாட்டின், தனி நபர், பாட்டில் குடிநீர் பயன்பாடு, 30 லிட்டராக அதிகரிக்கும். அதேசமயம், உலக நாடுகளின் சராசரி பயன்பாடு, 40 லிட்டர் என்றளவில் இருக்கும் என, ஐகான் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் அசாஜ் மோட்டிவாலா தெரிவித்தார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites