இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, July 8, 2012

தேங்காய் விளைச்சல், பயன்பாட்டில் இந்தியா முதலிடம்

தமிழகத்தில், தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தேங்காய் விளைச்சலில் சர்வதேச அளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், தேங்காய் உற்பத்தியில் இந்தோனேஷியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தோனேஷியா : இது குறித்து ஆசிய பசிபிக் தேங்காய் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:இந்தோனேஷியா ஆண்டுக்கு 1,650 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1,573 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன.அதிக அளவில் தென்னந்தோப்பு களை கொண்ட நாடுகள் வரிசையிலும் இந்தோனேஷியா முதலிடத்தில் உள்ளது. இங்கு 38.50 கோடி ஹெக்டேரில் தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இரண்டாவது இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் தென்னந் தோப்புகளின் பரப்பளவு 19 கோடி ஹெக்டேராக உள்ளது.
பரப்பளவு குறைந்துள்ள போதிலும், உலகளவில் தேங்காய் விளைச்சலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒரு ஹெக்டேரில் 8,303 தேங்காய்கள் விளைகின்றன. இரண்டாவது இடத்தில் உள்ள இலங்கையில் ஒரு ஹெக்டேரில் 7,223 தேங்காய்கள் விளைகின்றன.உலகளவில், தேங்காய் பயன்பாட்டிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஆண்டுக்கு 1,495 கோடி தேங்காய்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, மொத்த தேங்காய் உற்பத்தியில் 95 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
மலேசியா:உலகளவில், தேங்காய் இறக்குமதியில் மலேசியா முதலிடத்தில் உள்ளது.இந்நாடு 1 கோடி ஹெக்டேர் தென்னந்தோப்பின் மூலம் 38 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்கிறது. இங்கு தேங்காய் பயன்பாடு, 113 சதவீதமாக உள்ளது. அதனால் இந்நாடு, ஆண்டுக்கு சராசரியாக 140 கோடி தேங்காய்களை இறக்குமதி செய்கிறது.இந்தியா தேங்காயை பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியில் மிகவும் பின் தங்கி உள்ளது. இலங்கையில் தேங்காய் உற்பத்தி, தமிழ்நாட்டை விட, குறைவாகவே உள்ளது. எனினும், இந்தியாவை விட, இலங்கை மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை ஏற்றுமதி செய்து அதிக வருவாயை ஈட்டி வருகிறது.
தமிழகம்:இந்தியாவில், 18 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் வர்த்தக ரீதியில் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. விளைச்சலைப் பொருத்தவரை, லட்சத் தீவில் தான் ஒரு ஹெக்டேருக்கு மிக அதிகமாக, அதாவது 19 ஆயிரத்து 630 தேங்காய்கள் விளைகின்றன. இது, தமிழகத்தில் ஒரு ஹெக்டேரில் 13 ஆயிரத்து 771 ஆகவும், ஆந்திராவில் 9,327 ஆகவும், கேரளா மற்றும் கர்நாடகாவில், முறையே 7,365 மற்றும் 5,193 ஆகவும் உள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites