இது நானேயல்ல!….(சுயசரிதை)
20FEB
ஒர் ஆங்கில தம்பதியினர் ஒரு முறை பொருட்க்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். இவர்களுக்கு பழங்காலத்து அழகிய பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் அழகு தேனீர் குவளை (tea cup) ஒன்றை பார்த்தார்கள்.“ இந்த குவளை மிகவும் அழகாக இருக்கிறதே. இதையே நாம் வாங்கி விடலாமே! இதைப்போன்ற ஓர் அழகான குவளையை நான் இது வரை பார்த்ததில்லை” என்றாள் மனைவி.குவளையை கைகளில் வாங்கிய அந்த மனைவி அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த குவளை பேசத் துவங்கியது:“நான் எப்படி இவ்வளவு அழகான குவளையாக மாறினேன். தெரியுமா?” என்றது.
இப்படி அழகான குவளையாக ஆகும் முன் நான் ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு களிமண்ணாயிருந்தேன். என்னுடைய முதலாளியான குயவன் அழுக்கான என்னை எடுத்து என்னை தட்டி ஒரு உருண்டையாக மாற்றினார். அவர் என்னை தட்டி உருண்டையாக அழுத்தியபோது “ஜயா வேண்டாம்.. வேண்டாம்” என்று கதறி அழுதேன்.
“என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன். ஆனால் அவரோ “உன்னை விட்டுவிடும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
அதற்கு பின் உருண்டையான என்னை ஒரு சக்கரத்தின் மீது வைத்தார். திடீரென்று என்னை அவர் சுற்றிவிட நான் சுற்றி சுற்றி வந்தேன். “ஜயோ! நிறுத்துங்கள்! எனக்கு மயக்கமாக வருகிறது. என்னை விட்டுவிடுங்கள். என்று கதறினேன்.
ஆனால் என் குயவனோ “உன்னை விட்டுவிடும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார். அதற்கு பின் என்னை ஒரு சூளையில் போடட்டார். அப்பப்பா! அதைப் போல் வேதனையை என் வாழ் நாளில் எப்பொழுதும் நான் அனுபவிக்கப்போவதும் கிடையாது. “எதற்க்காக இந்த கொடிய குயவன் இப்படி என்னை வேதனைப்படுத்துகிறான்?” என்று புலம்பினேன்.
கதறினேன்! அழுதேன்! சூளையின் சுவர்களை உதைத்தேன். சூளையின் வாய் வழியாக அவர் முகம் தெரிந்தது. கைகளை கூப்பி “தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினேன்! அதற்கு அவர் உன்னை விட்டுவிட நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
ஒரு வழியாக சூளையின் கதவை திறந்தார். அந்த குயவன். என்னை ஒரு பரண் மேல் வைத்து ஆற விட்டார். அப்பா! சொஞ்சம் இன்பமாக இருந்தது. பின்பு தன் கரங்களால் அழகான வர்ணத்தை என் மீது திட்டினார். ஜயா! அந்த வண்ண பிரஷை என் மீது தடவ தடவ எனக்கு மறுபடியும் வெதனை உண்டாயிற்று “நிறுத்து! நிறுத்து” என்றேன்.
நிறுத்தும் நேரம் இன்னும் வரவில்லை” என்றார். தீடிர்ரென்று என்னை மறுபடியும் ஒரு சூழையில் போட்டார். இது இதற்கு முன் இருந்த சூழையைப்போல் இல்லை அதைப்போல் இரண்டு மடங்கு சூடு எனக்கோ முச்சு திணறியது கெஞ்சினேன் மன்றாடினேன்.
கதறினேன். “இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா? உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா? என்னுடைய இடத்தில் கொஞ்சம் உங்களை வைத்துப் பாருங்களேன்?” என்றேன். கோபமாக அவரும் தலையசைத்துக்கொண்டே “உன் நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.
“இதற்கு மேல் எந்த நம்பிக்கையும் இல்லை” என்ற முடிவிற்க்கு வந்தேன். இவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று நினைத்தேன். முற்றிலும் சரணடைந்தேன். உடனே தீடிர் என்று கதவுகள் திறந்தன. என்னை அவர் கையில் ஏந்தினார். ஒரு அலங்கார இடத்தில் வைத்தார். சுமார். ஒரு மணிநேரம் அப்படியே நான் நின்ற பின் உள்ளே சென்று ஒரு கண்ணாடியை எடுத்துக்கொண்டு வந்து “இதோ! இதில் பார்” என்றார்.
பார்த்தவுடன் அதிர்சியுற்றேன். “இது நானல்ல!” என்று கதறினேன். நான் அவ்வளவு அழகாக காணப்பட்டேன்.
இப்பொழுது அவர் பேசினார் “மகனே! உன்னை உருட்டி சுற்றுவதால் உனக்கு எவ்வளவு துரம் வேதனையாய் இருக்கும் என்பதை நன்கு அறிவேன். ஆனால் நான் மட்டும் உன்னை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டிருந்தால் நீ காய்ந்து ஒரு மண்கட்டியாக போயிருப்பாய் நான் உன்னை வனையும் சக்கரத்தின் மீது போட்ட போதும் அந்த சக்கரத்தை சுற்றிவிடும் போதும் அது உனக்கு எவ்வளவு வேதனையை கொடுத்திருக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும் ஆனால் நான் மட்டும் அப்படி செய்யாதிருந்தால்நீ நொறுங்கி போயிருப்பாய். உன்னை சூளையில் போட்ட போது அது உன்னை சுட்டெரிக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும் ஆனால் அப்படி நான் செய்யாதிருந்தால் நீ இந்நேரம் வீறல் விட்டிருப்பாய்.
நான் உன்மேல் ஓவியம் தீட்டும்போது உன் கன்னங்கள் வலித்தது எனக்கு தெரியும் நான் அதை அறிவேன். நான் அப்படி செய்யாதிருந்தால் உன் வாழ்க்கையில் வண்ணமயமான அற்புதங்கள் நடந்திருக்காது.
இப்பொழுது என் கைவண்ணம் உன் மேல் பட்டு நீ ஒர் அழகான குவளையாய் மாறியிருக்கிறாய் நீ என்னவாக வேண்டும் என்று நான் என் மனதில் திட்டமிட்டிருந்தேனோ? அதேபொல் மாறியிருக்கிறாய்.
இதை வாசிக்கும் அன்பு நண்பர்களே! உன்னுடைய வாழ்கையிலும் இதையே தான் செய்கிறார். உன்னை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும் அவர் குயவன் நீ வெறும் களிமண். உன்னை அநேக வேதனைக்குள் வழிநடத்தக்கூடிய நிர்ப்பந்தங்கள் எற்ப்படலாம்.சுட்டெரிக்கும் தீயினால் உன் விசுவாசம் சோதிக்கப்படலாம் ஆனால் என்னதான் உன் சூழ்நிலைகள் உன் பெலத்தை மிஞ்சி போனாலும் சரி. உன் வாழ்க்கை அவரது கரங்களில் பத்திரமாக இருக்கிறது என்பதை மறவாதே.
நீ காண்கிற உன் சுழ்நிலைகளை வைத்து உன் எதிர்காலத்தையோ கர்த்தரையோ எடைபோட்டுவிடாதே. உன்னை அவரது உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். என்பதை மறவாதே. ஆகவே! உன் சூழ்நிலைகளின் மேல் அவரது வல்லமை விளங்கி கொண்டிருக்கிறது என்பதை மறவாதே.
Posted in: பானை ஓவியம்
0 comments:
Post a Comment