இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, May 20, 2012

அட்டைப் பெட்டிகள் தொழில்

டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மருந்துப் பொருட்கள், ஜவுளிகள், கண்ணாடிப் பொருட்கள், பிஸ்கெட், சோப் என பல வகையான பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுபவை அட்டைப் பெட்டிகள். அட்டைப் பெட்டிகளை நமக்குத் தேவையான அளவில் உருவாக்கிக் கொள்வதோடு, அதை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால் இதற்கிருக்கும் வர்த்தகப் பயன்பாடு மிக அதிகம்.

சந்தை வாய்ப்பு!

அட்டைப் பெட்டியின் பயன்பாடு ஆண்டுக்கு 10% வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், புது யூனிட்கள் தொடங்குவதன் மூலம் இந்தத் தொழிலில் இருக்கும் தேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்ற தொழிலில் இல்லாத ஒரு வசதி இதில் இருக்கிறது. அட்டைப் பெட்டிகளைத் தயாரித்து அதை நல்ல விலைக்கு விற்பது ஒருபுறமிருக்க, தயாரிப்பின் போது பெட்டிகள் கிழிந்து போனாலோ டேமேஜ் ஆனாலோகூட பதறாமல் அவற்றையும் விற்றுவிடமுடியும். இவற்றை வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கான டிமாண்டும் இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத இந்தத் தொழிலுக்கு இருக்கும் மரியாதை அதிகம்தான்.

உற்பத்தித் திறன்!

நாம் இங்கே பார்க்க இருப்பது ஆண்டுக்கு 400 டன் உற்பத்தித் திறனுக்கானது.

நிலம் மற்றும் கட்டடம்!

மொத்தமாக இந்த உற்பத்தித் திறனுக்கு 2,000 சதுர அடி இடம் தேவைப்படும். இதில் 1,500 சதுர அடியில் கட்டடம் இருக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் தண்ணீர்!

நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் தண்ணீர் மற்றும் 50 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.

மூலப் பொருட்கள்!

அட்டைப் பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருள் கிராப்ட் பேப்பர் எனப்படும் பேப்பர் ரோல். பேப்பர் ரோலின் அடர்த்திக்கு ஏற்றவாறு அட்டையின் தன்மை மாறும். 100 எம்.எம். முதல் 200 எம்.எம். வரையிலான பேப்பர் ரோல்கள் உள்ளன. இந்த அடர்த்தியைப் பொறுத்தே அட்டைப் பெட்டியின் கனமும், உழைப்பும் இருக்கும். இதன் விலை கிலோவுக்கு 22 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இயந்திரம்!

மூலப் பொருட்கள் தொடங்கி, கடைசியாக அட்டைப் பெட்டி உருவாகும்வரை மொத்தம் ஆறு இயந்திரங்கள் தேவை. இவற்றின் விலை எட்டு லட்சம் ரூபாய் வரை ஆகும். இந்த ஆறு இயந்திரங்களும்

பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கிறது. பிற மாநிலங்களில் தயாராகும் இயந்திரங்கள் தரத்தில் சிறந்ததாக இருப்பதில்லை. ஜப்பானில் இருந்து இறக்குமதி ஆகும் ஒரே ஒரு ஆட்டோமேட்டிக் இயந்திரம், இந்த ஆறு இயந்திரங்களின் வேலையைச் செய்துவிடும். ஆனால், இதன் விலை ஒரு கோடி ரூபாய். அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டுமெனில், இந்த இயந்திரத்தை வாங்கலாம்.

தயாரிப்பு முறை!

1. கார்கேஷன்: இந்த மெஷினில்தான் அட்டைப் பெட்டி செய்வதற்கான முதல் படி தொடங்கு கிறது. பேப்பர் வடிவிலான ஷீட் இந்த கார்கேஷன் மெஷினைக் கொண்டு ஸ்பிரிங் வடிவில் மடிக்கப் படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

2. பேப்பர் கட்டிங் மெஷின்: இந்த மெஷின் மூலம் பெட்டியின் அளவுக்கு ஏற்ப பேப்பரை வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

3. பேஸ்ட் மெஷின்: இந்த மெஷினில் ஸ்பிரிங் போன்ற வடிவிலான பேப்பரை நடுவில் வைத்து, அதன் இரு பக்கங்களிலும் பேஸ்ட் தடவி பேப்பர் ஒட்டப்படுகிறது. இப்படி செய்யப்படும் அட்டையானது மூன்று அடுக்குகளைக் கொண்டி ருக்கும். இந்த அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அட்டைப் பெட்டியின் தரம் கூடும். இப்படி ஒன்பது அடுக்கு வரை போடப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டிலிருந்து மூன்று ஆட்கள் வரை தேவை.

4. ரோட்டரி மெஷின்: தயாராகும் அட்டையை பெட்டிக்கேற்ப கட் செய்வது மற்றும் பெட்டி செய்ய ஏதுவாக ஓரங்களை மடக்க பயன்படும் மடிப்புகளைச் செய்து தருவது ஆகியவை இந்த மெஷினின் வேலை. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

5. ஸ்லாட்டிங் மெஷின்: மடிக்கப்பட்ட அட்டைகளில் பின் அடிப்பதற்கு தகுந்தவாறு ஆக்குவது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது ஒரு ஆள் போதும்.

6. டிச்சிங் மெஷின்: இந்த மெஷினின் வேலை, தயாரித்த பெட்டியின் நான்கு பக்கத்தினையும் மடக்கி பின் அடிப்பது. இந்த வேலையைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

இந்த அட்டைப் பெட்டி தயாரிக்க ஒருநாளில் சுமார் 12 பேர்கள் தேவைப்படுவார்கள். ஒரு ஷிப்ட்டில் பெரிய பெட்டி எனில் ஐந்நூறும் சின்ன பெட்டி என்றால் ஆயிரமும் தயார் செய்யலாம்.

பிளஸ்

அதிக பயன்பாடு இருக்கும் தொழில் என்பதால், தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

மைனஸ்

மூலப் பொருளான பேப்பர் ரோலின் விலை ஏற்ற இறக்கம் காண்பது.

பேக்கிங் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலுக்கு எக்காலத்திலும் டிமாண்ட் இருக்கும் என்பதால் புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் தாராளமாக இதில் இறங்கலாம்.

நான் இந்தத் தொழிலைத் தொடங்கி 12 வருஷம் ஆகிறது. இந்தத் தொழிலை பொறுத்தவரை, முதலீடுதான் முக்கியம். நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது என்னிடம் குறைந்த அளவு முதலீடே இருந்தது. அப்புறம் வங்கியில் கடன் வாங்கித்தான் தொழில் தொடங்கினேன். இப்போது நன்றாகத் தொழில் வளர்ந்திருக்கிறது. பலரும் இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதால் பலமான போட்டி இருக்கவே செய்கிறது. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பெட்டியின் தரம்தான் வாடிக்கையாளர்கள் சாய்ஸ். வாடிக்கையாளர்கள் என்ன அளவு மற்றும் தடிமனில் பெட்டி செய்து தரச் சொல்கிறார்களோ, அதனை சரியாகச் செய்து தர வேண்டும். தற்போது விற்பனையில் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது. பெட்டியின் தரம் உயர்ந்து, விலை சற்று குறைவாக இருந்தால் உங்களைவிட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் போக மாட்டார்கள்.
Thnxs:Company Name:PREMIUM INTERNATIONAL
Street Address: 65, PAVALIAN STREET
City: SIVAKASI
Province/State: Tamil Nadu
Country/Region: India
Zip:626123
Telephone:91-4562-277375
Mobile Phone: 09842927732
Fax: 91-4562-277357

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites