மனிதனின் ஆரம்பக்காலப் பொருளாதாரமே, ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள்தான். இவற்றைப் பெருக்கித்தான் காலகாலமாக தங்களின் பொருளாதாரத்தை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கின்றனர் கிராமப் புற மக்கள். இதை உணர்ந்தே கால்நடைகள்தான் கிராமப்புறப் பொருளாதாரத்தின் காவலன் என்று நீண்ட நெடுங்காலமாக விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை சொல்லி வருகின்றனர்.
இது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம், சுல்தான்பேட்டை அடுத்துள்ள நகரகளந்தை பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி- செல்லம்மாள் தம்பதி!
சொந்தமாக நிலம் ஏதும் இல்லாத வயது முதிர்ந்த இந்தத் தம்பதியர், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையிலும் தளர்ந்து விடாமல் ஆடு, கோழி, புறா ஆகியவற்றை வளர்த்து தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
இவருக்கு 71 வயதாகிறது. பூர்வீகம் பாலக்கரை கிராமம். தோட்ட வேலை செய்துதான் பிழைப்பை ஓட்டுகிறார். இவருக்கு புறா வளர்ப்பில் ஆர்வம். நாற்பத்தைந்து வருடமாக புறா வளர்ப்பதாகக் கூறுகிறார். எந்தத் தோட்டத்தில் வேலைக்காக தங்கியிருந்தாலும் புறாவை மட்டும் விடுவதில்லை. கூடவே கூட்டிக் கொண்டு போவதாக கூறுகிறார்.
நான்கு வருடமகத்தான் இந்த தென்னந்தோப்பில் வேலை செய்கிறார்கள். தண்ணிர் பாய்ச்சுவதில், கீழே விழுகிற தேங்காய்களை எடுத்து குவிப்பது போன்ற வேலைகளை முடித்த பிறகு, மீதியிருக்கற நேரத்தில் புறாவைத்தான் கவனிப்பதாக கூறுகிறார்கள். கூடவே ஆடு, கோழிகளையும் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். பிள்ளைங்களையெல்லாம் கட்டிக் கொடுத்த பிறகு, இப்பவும், பிள்ளைகள் தயவில்லாமல் தாங்களே ஜீவனம் செய்வதற்கு புறா, ஆடு, கோழிகள் தான் உதவிக் கொண்டிருகிறது என்று வேலுச்சாமி, இடைவெளிவிட
இப்பொழுது, இவர்களிடம் 25 ஜோடி புறா, 15 பெட்டை ஆடு, 3 கிடா ஆடு, 6 நாட்டுக்கோழி, 3 சேவல் இருக்கிறது. வயதான காலத்தில் இந்த அளவுக்கு மட்டும்தான் இவர்களால் பராமரிக்க முடியும் என்று கூறுகின்றனர். அதனால் எண்ணிக்கையைக் கூட்டுவதில்லை. அவ்வப்போது விற்று பணமாக்குகிறார்கள். விற்பதற்கும் அலைய வேண்டியதில்லை. இங்கேயே வந்து வாங்குகிறார்கள். சமையல் வேலையை முடிச்சுட்டு பக்கத்தில் இருக்கும் காலி நிலத்திற்கு ஆடுகளை ஓட்டிட்டுப் போயி மேய்ச்சுட்டு வந்துவிடுவதாக தன் பங்கை சொன்னார் செல்லம்மாள்.
புறாக்களின் பங்கு 25 ஆயிரம்
தொடர்ந்த வேலுச்சாமி, கால்நடைகளை வளர்த்து வரும் விதம் மற்றும் வருமானம் பற்றி, பேச ஆரம்பித்தார்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு, ரேவல்ஸ், ரோஸ், ரோமர், சங்கிலி என்று நிறைய வகை புறாக்கள் இருக்கிறது. அதை வளர்ப்பது பெரிய வேலையே இல்லை. காலையில் கூண்டைத் திறந்து விட்டால் பறந்து போய் தீவனம் எடுத்துக்கும். சாயங்காலம் வந்து அடையும். அந்த நேரத்தில் ஏதாவது தானியத்தை விசிறி விட்டால் போதும். ஒரு ஜோடிக்கு தினமும் 150 கிராம் தானியம் தேவைப்படும். ராகி, சோளம் என்று எதையாவது கொடுப்போம். இதுங்களால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லை.
45 நாட்களுக்கு ஒரு முறை புறா அடைக்கு காக்கும். ஒரு முறை அடை இருந்தால் 2 முட்டை. வருடத்துக்கு 16 முட்டை. அதாவது ஒரு ஜோடி மூலமாக வருடத்துக்கு 16 குஞ்சுகள் கிடைக்கும். 25 ஜோடி மூலமாக, வருடத்துக்கு 400 குஞ்சு கிடைக்கும். அவைகளை ஒரு மாதம் வரைக்கும் வளர்த்து விற்றுவிடுவதாக கூறுகிறார். பெரும்பாலும் சாப்பிடத்தான் வாங்கிக் கொண்டு போவார்கள். வளர்ப்புக்கும் கொஞ்ச பேரு வாங்கிகக் கொண்டு போவதாக கூறுகிறார். ஒரு மாத வயதில் ஒரு புறா குஞ்சை 100 ரூபாய்க்கு விக்கிறார்கள். தனாகவே இறந்துபோனது சமைக்கறதுக்காக இவர்கள் அடுத்துக் கொண்டு இதையெல்லாம் கழித்துவிட்டால் வருடத்துற்கு 250 குஞ்சுகள் விற்க முடியும். இதன் மூலமாக 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கோழிகளின் கொடை 27 ஆயிரம்
ஒரு கோழியிலிருந்து வருடத்துக்கு 40 முட்டை என்று ஆறு கோழியிலிருந்து மொத்தம் 240 முட்டை கிடைக்கிறது. அதில் இவர்கள் சாப்பிட்டது போக, மீதம் உள்ளதை அடைக்கு வெக்கிறார்கள் . சேதாரமெல்லாம் போக, வருடத்துக்கு 180 குஞ்சு கிடைக்கும். 2 மாதம் வரை வளர்த்து, ஒரு குஞ்சு 150 ரூபாய் என்று விற்கிறார்கள் . நல்ல சேவல் குஞ்சு கிடைத்து, அதை இரண்டு வருடம் வளர்த்து விற்றால் ஒரு சேவல் 4 ஆயிரம் ரூபாய்க்குக் கூடப் போகும். எப்படிப் பாத்தாலும் கோழி மூலமாக வருஷத்துக்கு 27 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் வருமானம் கிடைக்கிறது. தீவனச்செலவும் பெரிதாக கிடையாது. தோட்டத்திலேயே மேய்ந்து புழு, பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்ட்டுக் கொள்ளும் . சாயங்காலம் அடையும்பொழுது மட்டும் கொஞ்சம் தானியம் போடுவதாக கூறுகிறார்.
ஆடுகளின் அன்பளிப்பு 90 ஆயிரம்
அதே மாதிரிதான் நாட்டு ஆடுகளும். அவற்றிற்குத் தனியாக தீவனச் செலவே கிடையாது. மேய்ந்துவிட்டு வரும்பொழுது பக்கத்தில் இருக்குற செடி, கொடிகளில் இருந்து தழை ஒடிச்சுட்டு வந்து போட்டுவிடுகிறார்கள். 15 பெட்டை மூலமாக, வருடத்துக்கு 45 குட்டி கிடைக்கும். குட்டிகளை இரண்டு மாதம் வளர்த்து, ஒரு குட்டி 2 ஆயிரம் ரூபாய் என்று விற்கிறார்கள். ஆடுகள் மூலமாக வருடத்திக்கு 90 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆடு, கோழி, புறா என்று எல்லாம் சேர்த்து வருடத்திற்கு 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். தீவனச் செலவெல்லாம் போக எப்படியும் வருடத்துக்கு 1 லட்ச ரூபாய்க்குக் குறையாமல் லாபம் கிடைக்கும் என்ற வேலுச்சாமி,
ஆடு, புறா, கோழி இவற்றையெல்லாம் தனி வேலையாக எடுத்துச் செய்யாமல், தோட்டத்து வேலை போக கிடைக்கிற இடைவெளியிலதான் செய்வதாக கூறுகிறார். அதனால், இந்த வருமானமே தங்களுக்கு பெரிய வருமானம்தான்- அதுவும் இந்த 71 வயதில் என்று மன நிறைவோடு கூறுகிறார்.

தொடர்புக்கு
044-42890002 என்ற எண்ணுக்கு போன் செய்து பதிவு செய்யுங்கள்
ஆதாரம் : பசுமை விகடன் 10.01.2012

0 comments:
Post a Comment