‘அதிகம் படிக்கலை. பொழுதுபோக்கா ஆரி ஒர்க் கத்துக்கிட்டேன். 15 வயசுலேருந்து பண்ணிட்டிருக்கேன். பிசினஸா எடுத்துப் பண்ண ஆரம்பிச்ச பிறகு கல்பனாவும் என்கூட சேர்ந்தாங்க. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முழு நேரத் தொழிலே இதுதான்’’ என்கிறார் பவானி. ‘‘எம்பிராய்டரில எத்தனையோ வகை உண்டு. அதுல ஆரி ரொம்பவே ஸ்பெஷல். சில்க் காட்டன், சிந்தெடிக், நெட் துணினு எல்லா மெட்டீரியல்லயும் இந்த ஒர்க்கை பண்ண முடியும். பிளவுஸ், சுடிதார், லெஹங்கா, சேலைனு எதுல வேணாலும் போடலாம். இதுல 21 வகை தையல் இருக்கு.
அவங்கவங்க தேவைக்கேத்தபடி காம்பினேஷனை மாத்திப் பண்ணலாம். அடிப்படை தையலோ,எம்பிராய்டரியோ தெரிஞ்சிருக்கணும்னு
அவசியமில்லை. ஆர்வமும் உழைக்கிற தைரியமும் இருந்தால் போதும்...’’ என்கிறவர்கள், இந்தத் தொழிலைத் தொடங்க வெறும் 300 ரூபாய் முதலீடு போதும் என ஆர்வம் கிளப்புகிறார்கள். ‘‘ஆரி ஸ்டாண்டு, துணி, நூல், நாலு வகையான ஊசினு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. ஒரு ஜாக்கெட்டுக்கு ஆரி ஒர்க் பண்ண 1 நாள் போதும். கலர் காம்பினேஷன், கிரியேட்டிவிட்டியை பொறுத்துதான் உங்களுக்கு ஆர்டர் வரும்.
உங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள பொட்டிக், தையல் கடைகளோட பேசி, ஆரி ஒர்க் மட்டும் பண்ணிக் கொடுக்க ஆர்டர் வாங்கலாம். கல்யாணப் பெண்ணுக்கான பிரைடல் பிளவுஸுக்கெல்லாம் 5 ஆயிரம் கூட வாங்கலாம். உழைப்பு எவ்வளவு அதிகமோ, அதே மாதிரி இதுல லாபமும் அதிகம்...’’ என்கிற பவானி மற்றும் கல்பனாவிடம் 2 நாள் பயிற்சியில் ஆரி ஒர்க் செய்வதற்கான பயிற்சி களைக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்.( 97898 90446)

0 comments:
Post a Comment