இது நம்ம ஊரு ஸ்பெஷல் - விழுப்புரம்
முறுக்கு, வடகம், ஊறுகாய், தேன், தேனில் ஊறவைக்கப்பட்ட அத்திப் பழம், உடம்பு வலி போக்கும் தைலம், சந்தனம், வாசனைத் திரவி யம், அவரைக்காய் வத்தல், மோர் வத்தல், சிறுவர்களுக்கான உடைகள், நைட்டிகள், கைக்குட்டைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், மூங்கில் கூடைகள், துணியால் ஆன ஃபைல்கள், கைக்குத்தல் அரிசி, காபித் தூள் என விதவிதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். இவை எல்லாம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகள்.
அத்திப் பழத்தையும் முறுக்கையும் சுவைத்துக்கொண்டு இருந்த கலெக்டர் சம்பத், ''விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஆயிரத்துக்கும் அதிகமானமக ளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. இதில் விழுப்புரத்தைச் சுற்றிலும் சுமார் 40 கி.மீ. தூரத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களைக் கண்டறிந்து, வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று குழுவினரை இங்கு விற்பனை செய்யச் சொல்லி இருக்கிறோம். அவர்களுக்கு லாபம் கிடைப்பதோடு, பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் பொருட் கள் கிடைப்பதால் அவர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதில் முக்கிய விஷயம் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் இந்தக் கடைகளால் பயன்பெறுவதுதான்'' என்றவர்,
- அற்புதராஜ்,
படம்: ஆ.நந்தகுமார்
படம்: ஆ.நந்தகுமார்
0 comments:
Post a Comment