
சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆண்களுக்கே அதிகம் உள்ள நிலையில், இந்த துறையில் பெண்களால் பிரகாசிக்க முடியாத அளவிற்கு பல தடைகள் ஏற்படுகின்றன. ஆனால், அதனையும் தாண்டி திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் சுயதொழில் தொடங்கி, பல பெண்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் இன்பவள்ளி. 55 வயதான இன்பவள்ளி என்ற பெண் கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக சுய தொழில் ஒன்றினை தொடங்கினார். ஆரம்பத்தில் ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்வதையே தொழிலாக செய்து வந்தார். பின்னர் பல வகை திண்பண்டங்களை தயாரித்து தொழிலை விரிவுபடுத்தத் தொடங்கினார். ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினரிடமே ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் இன்பவள்ளி.

வங்கிக் கடன் போன்ற வசதிகள் கிடைக்காத நிலையில் வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இன்பவள்ளியின் தொழில், இன்று 15பேருக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதுதான் அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
எந்த தொழிலை மேற்கொண்டாலும் முயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை, தேடல் ஆகியவை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு நடமாடும் உதாரணம் இந்த இன்பவள்ளி.
0 comments:
Post a Comment