அன்பளிப்பு கொடுப்பது என்பது ஒரு கலை. அன்பளிப்பு கொடுக்கப் போகிற நபர், அவரது வயது, தேவை, விருப்பம் என எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி தேர்ந்தெடுப்பதில் மெனக்கெடும் பலரும், இன்று அதை பேக் செய்து கொடுக்கிற விதத்துக்கும் அதிகம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அன்பளிப்பை வாங்கினோமா, அதை அப்படியே கிஃப்ட் ரேப்பர் சுற்றிக் கட்டினோமா, வாழ்த்து அட்டையில் பெயர் எழுதி ஒட்டிக் கொடுத்தோமா என்கிற மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக எதையும் புதுமையாகச் செய்ய நினைக்கும் இளைய தலைமுறையினர், அன்பளிப்புகளை அலங்காரப் பெட்டிகளில் வைத்துக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
விதம்விதமான வடிவங்களில், விதம்விதமான அளவுகளில் அலங்கார அன்பளிப்புப் பெட்டிகள் செய்கிறார் சென்னை, மந்தவெளியைச் சேர்ந்த மகாலட்சுமி. சென்னையின் பிரபல அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடைகள், பொட்டிக் என பல இடங்களிலும் இவர் டிசைன் செய்கிற அலங்காரப் பெட்டிகளுக்கு அப்படி ஒரு வரவேற்பு.
‘‘அடிப்படையில நான் ஒரு கைவினைக் கலைஞர். யாருக்கு என்ன அன்பளிப்பு கொடுத்தாலும், அதை என் கைப்பட அழகா அலங்கரிச்சு, அட்டகாசமா 'பேக்’ செய்து கொடுக்கறது வழக்கம். அதைப் பார்த்துட்டு மத்தவங்களும் அதுமாதிரி கேட்டாங்க. அது அப்படியே வாய்வழி விளம்பரமாகி, இப்போ கடைகளுக்கு சப்ளை பண்ற அளவுக்கு இதுல நான் பிசியா இருக்கேன்’’ என்கிறார் மகாலட்சுமி.
‘‘பிளாஸ்டிக் பெட்டிகள், எல்லா ஷேப்லயும், சின்னதுலேருந்து, பெரிசு வரைக்கும் கிடைக்குது. அதை வாங்கி, அதுக்கு மேல டிசைன் பண்ண வேண்டியதுதான். ஸ்வீட் பாக்ஸா, கிஃப்ட் வச்சுக் கொடுக்கப் போற பாக்ஸா, புடவைப் பெட்டியாங்கிற மாதிரி தேவை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கேத்தபடி டிசைன் பண்றதுதான் இதுல ஹைலைட்டான விஷயமே. பிளாஸ்டிக் பெட்டி வேணாம்னு நினைக்கிறவங்க, ஸ்டீல், செராமிக் பெட்டிகள்லயும் பண்ணலாம். பெட்டிகள், அலங்காரத்துக்குத் தேவையான கல், மணிகள், கிளே உள்பட எல்லாத்தையும் மொத்த விலைக் கடைகள்ல வாங்கினா செலவு குறையும். 3 மணி நேரத்துல 10 பெட்டிகள் செய்யலாம்.
ஸ்வீட் ஸ்டால், பொட்டிக், அன்பளிப்புப் பொருள் விற்பனைக் கடைகள், புடவைக் கடைகள், நகைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்னு இந்தப் பெட்டிகளுக்கான ஆர்டர் பிடிக்க நிறைய இடங்கள் உண்டு. உங்க கற்பனையை சேர்த்து, வித்தியாசமா செய்யக் கத்துக்கிட்டீங்கன்னா, உங்க கல்லாப் பெட்டி நிரம்பி வழியும்’’ என்கிறார் மகாலட்சுமி.
முதலீடு: 175 ரூபாய் (1 பெட்டிக்கு)
லாபம்: 50 சதவீதம்
பயிற்சிக்கு: 500 ரூபாய்
(3 நாட்களில் 6 மாடல்களுக்கு)
தொடர்புக்கு: 99625 00430
(நன்றி குங்குமம்)

0 comments:
Post a Comment