லாரேசியே
இரகங்கள் : ஏற்காடு 1, பி பி ஐ - 1, நித்தியஸ்ரீ, நவஸ்ரீ, கொங்கன் தேஜ், சுகந்தினி
ஏற்காடு 1 |
மண் மற்றும் தட்பவெப்பநிலை : இயற்கை வளமாக, ஆழமான மணல் கலந்த வடிகால் வசதியுடைய நிலம் ஏற்றது. பயிரிட அதிக அளவு வெப்பமும், காற்றில் ஈரப்பதமும் இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800-1000 மீட்டர் உயரம் வரை இவற்றை பயிர் செய்யலாம். வருடத்திற்கு 150 முதல் 250 செ.மீ மழைப்பொழிவு உள்ள இடங்கள் ஏற்றது. தமிழ்நாட்டில் நீலகிரி, குற்றாலம், கன்னியாகுமரி மற்றும் கீழ்பழனி மலைப்பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இலவங்கத்தை தனிப் பயிராகவோ, காப்பித் தோட்டத்தில் ஊடுபயிராகவோ பயிர் செய்யலாம்.
பருவம் : ஜுன் - டிசம்பர்
இனப்பெருக்கம் : விதை, வேர்விட்ட தண்டுக்குச்சிகள் மற்றும் பதியன்பள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யலாம்.
நாற்றங்கால்: தேர்ந்தெடுக்கப்பட்ட நோய் மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட விதைகளை நாற்றங்கால் படுக்கையில் 12 செ.மீ தூரத்தில் உள்ள வரிசைகளில் விதைக்க வேண்டும். ஜுன் – ஆகஸ்ட் மாதம் வரை விதைப்பிற்கு ஏற்ற பருவமாகும். நாற்றுகள் 15 செ.மீ உயரம் அடையும் போது அவற்றினை படுக்கையிலிருந்து பாலித்தீன் பைகளுக்கு மாற்ற வேண்டும்.
விதையும் விதைப்பும்
நன்றாக பழுத்த பழங்களை சேகரித்து, அவற்றின் மேல் சகையை பிரித்துவிட்ட தண்ணீரில் கழுவி விதைகளை சேகரிதது நிழலில் உலர்த்த வேண்டும். இவ்வாறு உலர்த்திய கழுவி உடனே விதைக்கவேண்டும். தாமதித்தால் முளைப்புத் தன்மை பாதிக்கப்படும். மேடைப் பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் விதைக்கு 1 செ.மீ இடைவெளி விட்டு விதைகளை விதைக்கவேண்டும். பின்பு 20 x 10 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மணல், மண் மற்றும் தொழு எரு ஆகியவற்றை கலந்து நிரப்பி 3 மாதம் ஆன நாற்றுக்களை பாத்திகளில் இருந்து பிடுங்கி எடுத்து நட்டு பராமரிக்கவேண்டும். நிழலுக்கு சிறிய பந்தல் ஒன்றை அமைக்கவேண்டும்.
நடவு : 50 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் கொண்ட குழிகளை 3 x 3 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். குழிகளில் நன்கு மக்கிய தொழு உரத்தை வளமான மேல் மண்ணுடன் சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். ஒரு வருட வயதுள்ள நாற்றுகளை நட வேண்டும். இளஞ்செடியின் துரித வளர்ச்சிக்கு நிழல் அமைப்பது மிகவும் அவசியம்.
நீர் நிர்வாகம்
கோடைக்காலங்களில் தேவை ஏற்படும் போது கட்டாயம் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உரங்களை கீழ்க்கண்ட தருணங்களில், அளவுகளில் இடவேண்டும்.
உரங்கள்
|
முதல் வருடம்
|
வருடத்திற்கு ஒரு முறை அதிகப்படுத்த வேண்டிய உர அளவு
|
பத்து வருடம் முதல்
|
தொழு உரம்
|
-
|
2 கிலோ
|
20 கிலோ
|
தழைச்சத்து
|
20 கிராம்
|
20 கிராம்
|
200 கிராம்
|
மணிச்சத்து
|
18 கிராம்
|
18 கிராம்
|
180 கிராம்
|
சாம்பல்சத்து
|
25 கிராம்
|
25 கிராம்
|
250 கிராம்
|
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
தேவைப்படும் போது களை எடுத்து தோட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நட்ட இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து செடிகளை 15 செ.மீ உயரத்தில் வெட்டி மண் கொண்டு மூஎ விடவேண்டும். இதனால் அடிப்பாகத்தில் இருந்து பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். இவ்வாறு வளரும் ஒவ்வொரு பக்கக் கிளையையும் வெட்டி மண் போட்டு மூடி மேன் மேலும் பக்கக் கிளைகள் தோன்றபத் செய்யவேண்டும். இவ்வாறு செய்வதால் 4-5 வருடங்களில் செடிகள் பட்டை உரிக்கத் தகுந்த பல இளம் கிளைகளை உடைய ஒரு குத்துச் செடியாக வளர்ந்துவிடும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பான் : கட்டுப்படுத்த, தண்டு மற்றும் கிளைகளில் கார்பரில் 50 சதம் 2 கிராமை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மாதத்திற்கு ஒரு முறை மேற்ப்பூச்சுப் போன்று தடவவேண்டும். இலைக்கடிக்கும் புழு, எறும்பு மற்றும கரையான்களின் சேதத்தை தடுக்க லிண்டேன் தூவவும், மருந்து 1.3 சதம் தூவவேண்டும்.
காபி சிகப்பு துளைப்பான் : இதனை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 1 மி.லி. / ஓட்டை என்ற அளவில் கலந்து தண்டில் உட்செலுத்த வேண்டும். இதனை உட்செலுத்துவதற்கும் அறுவடைக்கும் 20 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
இலை உண்ணும் புழுக்கள், சிகப்பு எறும்புகள் மற்றும் கரையான்கள் : 1.3% மிதைல் பாரத்தியான் தூவ வேண்டும்.
நோய்கள்:இலை உண்ணும் புழுக்கள், சிகப்பு எறும்புகள் மற்றும் கரையான்கள் : 1.3% மிதைல் பாரத்தியான் தூவ வேண்டும்.
இலைப்புள்ளி நோய் :ஒரு சதவீத போர்டோக் கலவை அல்லது 0.25 % காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளிக்கவேண்டும்.
அறுவடை : நட்ட 4-5 ஆண்டு முதல் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். மே மாதத்தில் ஒரு முறையும், நவம்பர் மாதத்தில் ஒரு முறையும் 15.2 மீட்டர் நீளமும், 2-2.5 செ.மீ கனமும் வளர்ந்து உள்ள குச்சகளை வெட்டவேண்டும். பின் இவற்றிலிருந்து பட்டை உரிப்பதெற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கத்தியைக் கொண்டு பட்டையை சீராக உரித்தெடுக்க வேண்டும். உரித்த பட்டைகள் 2-5 நாட்கள் உலர்த்தி சேமிக்கவேண்டும். உரித்த பட்டைகளை 295 நாட்கள் உலர்த்தி சேமிக்கவேண்டும். உரித்த பட்டைகளை 2-5 நாட்கள் உலர்த்தி சேமிக்கவேண்டும். கிளைகளை வெட்டிய அன்றே பட்டை உரிக்கவேண்டும். நுனியிலுள்ள இளம் குச்சிகள் மற்றும் இலைகளிலிருந்து இலவங்க எண்ணெய் எடுக்கலாம்.
இலவங்க பட்டை | இலவங்க பட்டை குச்சிகள் |
மகசூல் : ஒரு குத்துச் செடியிலிருந்து 100 கிராம் உலர்ந்த பட்டை, ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 35 கிலோ இலவங்க எண்ணெய் கிடைக்கும்.
0 comments:
Post a Comment