தமிழ்நாட்டில் அனைத்து பஸ் நிலையங்கள் கார், கப்பல், விமான பயணத்தின் போது சிலருக்கு வயிற்றை பிரட்டும், குமட்டல் வரும், சிலர் வாந்தியும் எடுப்பது உண்டு. இதற்கு முக்கிய காரணம், நமது உணர்வு கருவிகளான, கண் மற்றும் உள்காது. சிலருக்கு கண்ணை மூடிக்கொண்டு நடக்க முடியாது கீழே விழுந்து விடுவார்கள். கண் மூடி இருக்கும் போது நமது சென்ஸ் ஆப் பேலன்ஸ் என்பது நமது உள் காதில் இருக்கும் ”வெஸ்டிபுலர்” எனும் ஒரு சிறப்பு உறுப்பு. அதில் மூன்று மெல்லிய குழாய்கள் ஒன்றுக்கு ஒன்று 90 டிகிரியில் இணைக்கப்பட்டு இருக்கும். அதன் உள்புற சுவற்றில் மிக நுண்ணிய முடி போன்ற உணர்வு நரம்புகள் இருக்கும். மேலும் உள்புறம் ஒரு திரவமும் இருக்கும். நமது தலையின் அசைவின் போது திரவமும் அசையும், திரவத்தின் அசைவால் முடி போல் இருக்கும் உணர்வு நரம்புகள் தூண்டப்பட்டு நாம் படுத்து இருகிறோமா, உட்கார்ந்து இருகிறோமா எனபது போன்ற செய்திகளை மூளைக்கு அனுப்பும், பயணத்தின் போது ஏற்படும் அசைவினால் (பழக்கமின்மையினால்) அது தாறு மாறான செய்திகளை மூளைக்கு அனுப்பும் போது நமக்கு மயக்கமும், குமட்டலும் வரும்.
இதை தவிர்க நிறைய மருந்துகள் உள்ளது. இஞ்சி மிக சிறந்த ஒன்று. இஞ்சி முரப்பா பயணத்திற்கு முன்னும், பயணத்தின் போதும் சாப்பிடலாம்.வயிற்று மந்தம்,செரிமானம், வாந்தி, புளி ஏப்பம், மார்ச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்.இந்த இஞ்சி முரப்பா தரமான சுத்தமாக பேக்கிங் செய்து வணிக ரீதியாக செய்தல் இந்த சாக்லேட் இன்னும் வரவேற்ப்பு இருக்கும்.
இஞ்சி முரப்பா தேவையானவை:
இஞ்சி - கால் கிலோ,
வெல்லம் - கால் கிலோ.
நெய் தேவைக்கு
செய்முறை: இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும். வெல்லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.
கட்டமைப்பு, முதலீடு
சமையலறை போதுமானது. கடலைத்தோல் அல்லது மரத்தூள் போட்டு எரிக்கப்படும் அடுப்பு (ரூ.10 ஆயிரம்).
ரெடிமேடாக அடுப்பு உள்ளது. அல்லது அதை கட்டி கொடுப்பவர்களும் உள்ளனர். மரத்தூள், கடலை தோல் ஆகியவற்றை எல்லா ஊரிலும் சப்ளை செய்பவர்கள் உள்ளனர். இதர பொருட்களை ஹார்டுவேர்ஸ், மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வாங்கி கொள்ளலாம்.
தரக்கட்டுப்பாடு!
எல்லாத் தொழிலுக்கும் தரம் முக்கியம் என்றாலும், சிப்ஸ் தயாரிப்பு என்பது உணவு சம்பந்தப்பட்ட தொழில் என்பதால் கூடுதல் அக்கறையோடு தரமாகவும், சுகாதாரமாகவும் செய்ய வேண்டும். இத் தொழிலைத் தொடங்கும்முன் உணவு பதப்படுத்தல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெற வேண்டும். ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழைப் பெறுவதுபோல, உங்கள் தயாரிப்புக்கு பி.ஐ.எஸ். (பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்) தரச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அதன் மூலம் உங்கள் தயாரிப்பு மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரிக்கும்.
சந்தை வாய்ப்பு!
எந்த இடத்திலும் இந்த தொழிலைத் தொடங்கலாம் என்பது இதற்கிருக்கும் தனிச் சிறப்பு. நல்ல வருமானம் தரக்கூடிய, பரவலான வியாபாரத்தைக் கொண்ட தொழில் என்பதால் உள்ளூர் அளவிலான தயாரிப்பாளர்கள் இதில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். சில்லறை வியாபாரம் மட்டுமல்லாமல், பள்ளி மற்றும் கல்லூரி கேன்டீன்கள், ஓட்டல்கள், மதுபான விடுதிகள், ரயில்வே மற்றும் விமான கேட்டரிங் ஒப்பந்தம் என பல இடங்களிலும் மொத்த விற்பனைக்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பெரிய பிராண்டட் நிறுவனங் கள் இருந்தாலும் தரமாகவும், சுவையாகவும் இருக்கும் பட்சத்தில் மக்கள் தேடி வந்து வாங்கிச் செல்கிற நிலை இருக்கிறது.
வேலையாட்கள்!
தயாரிக்கத் தெரிந்தவர்கள்- 2
பேக்கிங் வேலையாட்கள்- 2
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1
பின்னர் இந்த இஞ்சி முரப்பா பிளாஸ்டிக் கவரில் நன்றாக பேக்கிங் எல்லா சில்லறை வியாபாரிகளிடம், தமிழ்நாட்டில் அனைத்து பஸ் நிலையங்களில் சிறு குறு வியாபாரிகளிடம்மும் கொடுக்கலாம்.மற்றும் வெளி நாட்டிக்கு ஏற்றுமதி செய்யலாம்.
ஏற்றுமதி வணிகத்தில் எந்த ஒரு பொருளுக்கும் தரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அந்த பொருளுக்கான பேக்கிங்கும் மிக மிக முக்கியம்.
இன்றைய உலகில் பேக்கிங் என்பதையே நான் ஒரு கலையகத்தான் கருதுகிறேன். ஆம் ! ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிலும் சேர்க்கப்படாத ஒரு கலை, இந்த பேக்கிங் கலை.
உதாரணத்திற்கு, வெறும் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிப்ஸ் பாக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் சிப்ஸின் அளவோ வெறும் இருபது கிராமகத்தான் இருக்கும். ஆனால்,அதன் பேக்கிங் முறையைப் பாருங்கள்.
அந்த இருபது கிராம் சிப்ஸினை அடைக்கப் பயன்படுத்தும் பாக்கெட்டில் காற்றை நிரப்பி பேக்கிங் செய்கிறார்கள். இதுதான் பேக்கிங் கலை என்பது.
நீங்கள் ஏற்றுமதி செய்ய தேர்ந்தேடுத்துள்ளது எந்த பொருளாய் இருந்தாலும் சரி, இறக்குமதியாலரை தொடர்பு கொள்வதற்கு முன் முதலில் அந்தப் பொருளைப்பற்றிய ‘அனைத்து விபரங்களையும்’தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இதில், அனைத்து விபரங்களையும் என்பது அந்த பொருளுக்கான பேக்கிங் முறையையும் சேர்த்துத்தான்.
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வகையான பேக்கிங் முறைகள் கடைபிடிக்கப் படுகின்றன. எவ்வளவுதான் நீங்கள் தரத்தோடு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பினாலும், அவை சரியான முறையில் எவ்வித சேதமும் இன்றி இறக்குமதியாலரை சென்றடைய வேண்டும்.
அப்போதுதான் உங்களுக்கு குறிப்பிட்டபடி பணம் வந்து சேரும். இல்லையெனில், நீங்கள் அனுப்பிய பொருட்கள் சேதமடைந்து விட்டதாகக் கூறி இறக்குமதியாளர் ஒப்பந்தம் செய்த பணத்தை விட குறைத்துதான் கொடுப்பார்.
மேலும், நீங்கள் அனுப்பிய பொருட்கள் அதிக அளவு சேதம் அடைந்திருக்கும் பட்சத்தில் அந்தப் பொருளை அவர் நிராகரிக்கக் கூட வாய்ப்புண்டு. அவ்வாறு ஏதேனும் நிகழும் பட்சத்தில் இழப்பு என்னவோ உங்களுக்குத்தான்.
இப்போது உங்களின் நம்பிக்கை சற்று குறைந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. தெரிந்தும் உங்களை பயமுறுத்துவதற்காக நான் இதை சொல்லவில்லை. இதுதான் உண்மை.
காரணம், உங்களிடம் இதை தெரியப்படுத்த வேண்டிய கடமை நமது தளத்திற்கு நிறையவே இருக்கிறது.
ஏற்றுமதி வணிகம் என்றில்லாமல் எந்த ஒரு தொழிலும் இறங்கும் முன், முதலில் அவற்றைப் பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு எப்போதும் வெற்றியை தேடித்தரும்.
எனவே, மீண்டும் சொல்கிறேன். மற்றதைப் போலவே பேக்கிங் விஷயத்திலும் சற்றுக் கவனமாகவே இருங்கள்.
பொதுவாக நீங்கள் அனுப்பப் போகும் பொருட்களுக்கான பேக்கிங் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இறக்குமதியாலரே சொல்லி விடுவார்.
இருப்பினும் நீங்கள் எந்த முறையில் பேக்கிங் செய்யப் போகிறீர்கள் என்பதை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்போதுதான் உங்களது பொருளை எந்த வித சேதமுமின்றி உங்களது இறக்குமதியாலருக்கு நீங்கள் அனுப்ப முடியும். அதற்கான வழிமுறைதானே எனக்கு தெரியவில்லை என்கிறீர்களா ? கவலை வேண்டாம்.
நமக்கு உதவுவதற்காகவே நமது இந்திய அரசால் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு அமைப்புதான் Indian Institute
of Packaging .
வெளி நாட்டிக்கு அனுப்பும் போது
கீழ் கண்ட முகவரி தொடர்பு கொள்ளவும்
Address:
NativeSpecial.com
Tambaram, Chennai
NativeSpecial.com
Tambaram, Chennai
Telephone:
9962076566
9962076566
1 comments:
இஞ்சி முரப்பான் மொத்த விற்பனை செய்வது எப்படி..?
Post a Comment