இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 22, 2013

பெண்கள் ஏன் வேலைக்குப் போகணும்?

Why do women go to work?சௌந்தர்யா ராஜேஷ் நிறுவனர் - தலைவர், 
அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ் 

‘அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ்’, ‘ஃப்ளெக்ஸி கேரியர்ஸ்’, ‘அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட்’ ஆகிய நிறுவனங்களின் ஆணிவேர் -சௌந்தர்யா. வெற்றிகரமான பிசினஸ் பெண்மணி ‘‘சொந்த ஊரு புதுச்சேரி. பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். புரொபஸர்  ஆகணும்னு ஆசை.  அப்பா சந்திரசேகருக்கு என்னை பிஸினஸ்ல பெரிய ஆளாக்கணும்னு ஆசை. அவருக்காகவே எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு எழுதினேன். செலக்ட்  ஆனேன். புதுச்சேரி பல்கலைக்கழகத்துல எம்.பி.ஏ. அக்கவுன்ட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் கோர்ஸ். 

‘எம்.பி.ஏ. படிக்குறவங்க பெரிய ஜீனியஸ்’னு நினைச்ச காலகட்டம் அது. மேனேஜ்மென்ட் பாடத்துல கத்துக்குற முதல் விஷயம் டீம்  வொர்க். ஒரு  விஷயத்தை தலைமைப் பண்போட எப்படி அணுகணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஒரு கம்பெனியை ஆரம்பிச்சு,  திறம்பட நடத்துற வித்தையை  இதில கத்துக்கிட்டேன். இடையில எனக்கும் ராஜேஷுக்கும் கல்யாணம். திருமணத்துக்குப் பிறகு தனி யார் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். 

குழந்தை பிறந்த பிறகு முழுநேர வேலைக்குப் போற சூழல் அமையல. அதனாலதான் பிசினஸ்ல இறங்கலாம்னு முடிவு பண்ணினேன்.  முதல்  முயற்சியா ‘அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ்’ நிறுவனத்தை 2005ல ஆரம்பிச்சேன். வேலைவாய்ப்பு தேடுறவங்களுக்கு வழிகாட் டுற வேலை.  திறமையான ஆட்களைத் தேடும் பெரிய நிறுவனங்கள் ஒரு பக்கம். படிப்புக்கு ஏத்த சம்பளம் வேணும்னு வேலை தேடு றவங்க இன்னொரு பக்கம். 


இந்த ரெண்டு தரப்பினரையும் இணைக்கும் வேலை... ஐ.டி. நிறுவனங்கள், பேங்க், தனியார் நிறுவனங்கள்னு எல்லாத் துறைகளிலும்  வேலை  வாய்ப்புகளை உருவாக்கித் தர்றோம். நேஷனல் சேம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் ஆய்வுப்படி 2011ல், ‘இந்திய அளவில்  வேலைக்குச் செல்லும்  பெண்கள் 28 சதவிகிதம் மட்டும்தான்’. 

‘திருமணம், குழந்தைகள்னு செட்டில் ஆன பிறகு 49 சதவிகிதம் பெண்கள் வேலைக்குப் போறதை விட்டுறாங்க’ன்னு சொல்லுது Centre  for  Strategicand International Studies  ஆய்வு. கல்யாணத்துக்குப் பிறகு,  வேலைக்குப் போக முடியாத பெண்களுக்காக ‘விருப்ப நேரத்தில் வேலை  செய்யும் முறை’யை அறிமுகப்படுத்தினேன். இந்தியாவில்  முதல்முறையாக இந்த முறை ஆரம்பிக்கப்பட்டது என்பதால் பெரிய அளவில் வரவேற்பு  கிடைச்சது. 

வீட்டுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயத்துல இருந்த பெண்கள் வெளிய வர ஆரம்பிச்சாங்க. பெண்கள் வேலைக்கு  போகாம இருந்தா  உளவியல் ரீதியான பிரச்னைகள் வரும். அதிலிருந்து விடுபட பெண்களுக்கு வேலை அவசியம்னு புரிய வச்சோம்.  நான் உருவாக்கின நிறுவனம்  மூலமா 30 ஆயிரம் பேருக்கு மேல வேலை வாங்கிக் கொடுத்தது சந்தோஷமா இருக்கு...’’ - கண்களில்  மின்னல் தெறிக்கச் சொல்கிறார் சௌந்தர்யா  ராஜேஷ். 

பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க வேண்டுமா?


சிகிஜி /  ஙீகிஜி / விகிஜி ஆகிய பொது நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், ரேங்க் அடிப்படையில் உயர்ந்த மேனேஜ்மென்ட்  கல்வி  நிறுவனமான ஐ.ஐ.எம்.மில் (Indian Institute of Management) படிக்க தகுதி பெறுவார்கள். பிசினஸ்  ஸ்கூல்களில் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை  வைத்தும், குழு விவாதம், நேர்காணல் சோதனைகளில் தனித்தன்மைக்கேற்பவும் அனு மதிக்கப்படுகிறார்கள். 

பி.ஜி. டிப்ளமோ கோர்ஸாகவும் மேனேஜ்மென்ட் படிப்பு வழங்கப்படுகிறது. நிர்வாகம், மனித வளம் என சிறப்புப் படிப்புகளை தேர்ந் தெடுக்கலாம். 2  வருடப் படிப்பு. பல்கலைக்கழக கல்லூரிகளில் 2 வருட எம்.பி.ஏ. படிப்பை வழங்குகிறார்கள். ஏதேனும் ஒரு பாடப்பி ரிவில் இளங்கலை பட்டம்  அவசியம். குறிப்பாக, கணிதத்தில் தேவையான அறிவு இருக்க வேண்டும். 

சென்னையில் ‘லயோலா இன்ஸ்டிடியூட் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’, ‘ஐ.ஐ.டி.’, ‘ஐ.எஃப்.எம்.ஆர்.’, ‘கிரேட் லேக்ஸ்’, திருச்சி யில்  ‘பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’, கோவையில் ‘பி.எஸ்.ஜி.’, ‘அம்ரிதா ஸ்கூல் ஆஃப் பிஸினஸ்’, மதுரையில்  தியாகராஜர் ஸ்கூல்  ஆஃப் மேனேஜ்மென்ட்’ ஆகிய பிசினஸ் ஸ்கூல்கள் இருக்கின்றன. சில பல்கலைக்கழகங்களில் இளங்கலையில்  பி.பி.ஏ. (பேச்சிலர் ஆஃப் பிஸினஸ்  அட்மினிஸ்ட்ரேஷன்) கோர்ஸ் கிடைக்கிறது. 

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. டூரிஸம் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. பேங்கிங் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சிறப்புப் படிப்புகள்  உள்ளன.  ஹைதராபாத் ‘மேனேஜ்’ நிறுவனத்தில் விவசாய நிர்வாகம் படிப்பு இருக்கிறது. அரசுக் கலைக் கல்லூரிகளில் (வருடத்திற்கு)  ரூ.40 ஆயிரம், அரசு  பொறியியல் கல்லூரிகளில் ரூ. 60 முதல் 70 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

தனியார் கல்லூரிகளில் கட்டணம் 2 மடங்கு அதிகம். தமிழகத்தில் உள்ள பிஸினஸ் ஸ்கூல்களில் வருடத்திற்கு ரூ. 3 லட்சம் வரை  கட்டணம்.  மிமிவி போன்ற பெரிய நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் முதல் கட்டணம்  கிமிசிஜிணி அங்கீகாரம் பெற்ற  நிறுவனமா,  வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருகிறார்களா என்பதை விசாரித்துச் சேர்வது நல்லது.

No. 10, Raja Nagar, ECR Road, Neelangarai, Chennai - 600041. Ph: 044-42941100/1200
Chennai - Head Office
'Udyog Gruhaa'
No. 10, Raja Nagar, EC Road,
Neelangarai,
Chennai - 600041.
Phone: 044-42941100 / 1200
email: info@avtarcc.com
Bangalore 
9/A, 13th Cross Street,
Jayamahal Extn
Bangalore - 560046
Tel: 080- 64510124 / 25
email: blr@avtarcc.com

 Coimbatore
No.69/143, Ravindranath Layout,
N.V.N Street,
New Sidhapudur,
Coimbatore - 641004
Tel: 0422- 4218640 / 4230800
email: cbe@avtarcc.com

Mumbai
506, Krishna Greenland - Vastu, Bldg,
5, Kasarvadavli,
Ghodbunder Road,
Thane West,
Mumbai - 400607
Phone: 022-65329111 / 65329112
Email: mumbai@avtarcc.com

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites