
“நானும் கணவரும் ஆசிரியர்களா வேலை பார்த்திட்டிருந்தோம். எங்களோட மகள் டெனிஸ், பிபிஏ முடிச்சிட்டு, ஒரு நிறுவனத்துல வேலை பார்த்திட்டிருந்தா. திடீர்னு ஒருநாள், அவ என்கிட்ட வந்து, ‘நீங்க வேலையை விட்ருங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து டிஸ்போசபிள் மெட்டீரியல் தயாரிக்கிற ஒரு பிசினஸ் தொடங்கலாம்’னு சொன்னப்ப, எனக்கு பயங்கர அதிர்ச்சி. 16 வருஷமா பார்த் திட்டிருக்கிற வேலையை விடறதாவதுன்னு நான் மறுத்தேன்.
கிட்டத்தட்ட மூணு மாசம் எங்க வீட்ல இந்தப் பிரச்னையைப் பத்தின வாக்குவாதம் தொடர்ந்தது. ஒருவழியா என்னை சம்மதிக்க வச்சிட்டா. வேலை பார்த்த ஸ்கூல்ல போய் ராஜினாமா கடிதம் கொடுத்தப்ப, ‘உனக்கென்ன பைத்தியமா? நல்ல, கவுரவமான வேலையை விட்டுட்டு, ஜட்டி, பிரா பிசினஸ் பண்ணப் போறியா’ன்னு கிண்டல் பண்ணினாங்க. என் மகளோட பிடிவாதமும் நம் பிக்கையும் என்னை மாத்திட்டதால என்னால ஒண்ணும் பண்ண முடியலை. வெறும் 500 ரூபாய்தான் முதலீடா கொடுத்தேன்.
அதை வச்சு என் மகள், ராத்திரி, பகலா கண் விழிச்சு, ஏகப்பட்ட டிசைன்களை உருவாக்கினதைப் பார்த்தப்ப, எனக்குள்ளயும் நம் பிக்கை துளிர்க்க ஆரம்பிச்சது. எங்க வீட்ல பிரேமான்னு ஒரு அம்மா வேலை பார்த்தாங்க. என் மகளை வளர்த்ததுல அவங்களுக் குப் பெரிய பங்குண்டு. டயப்பட்டீஸ் அதிகமானதுல அவங்களுக்கு ஒரு காலை எடுக்க வேண்டிய நிலைமை. இனிமே எங்களுக்கு உங்களால எந்த உதவியும் இல்லைன்னு அவங்க மருமகன், அவங்களை வீட்டை விட்டுத் துரத்திட்டான்.
‘என்னை ஏதாவது ஒரு ஹோம்ல சேர்த்து விடுங்க’ன்னு வந்து நின்னப்ப என் மகளுக்கு மனசு தாங்கலை. ‘நாம பிசினஸ் ஆரம்பிச்சா, இவங்களை மாதிரிப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து உதவின மாதிரியும் இருக்குமே...’ன்னு சொல்ல, பிரேமாவையே முதல் ஊழியரா வச்சு, ‘ட்ரீம் வீவர்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினோம். இப்பவும் அவங்க எங்ககூட இருக்காங்க...’’ - நெகிழ்ச்சியான அறி முகத்துடன் பேசுகிறார் ஷெரில்.
‘‘பிசினஸ் தொடங்கறதுன்னு முடிவெடுத்தாலும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் ரொம்பவே சவாலா இருந்தது. மிடில் கிளாஸ் குடும்பத் தைச் சேர்ந்த எங்களால எடுத்த உடனேயே பெரிய முதலீடு போட முடியலை. ஒரே ஒரு தையல் மெஷின், சில மீட்டர் துணியோட தான் துணிஞ்சு இறங்கினோம். ஒரு விபத்துல கணவரைப் பறிகொடுத்துட்டு, விவரம் தெரியாத வயசுல ரெண்டு சின்னக் குழந்தைங் களை வச்சுக்கிட்டுத் தவிச்ச ஒரு பெண் அறிமுகமானாங்க.
அவங்களுக்கு என் மகள் தையலும் டிசைனிங்கும் கத்துக்கொடுத்து, வேலையும் கொடுத்தா. டிஸ்போசபிள் உடைகளுக்கான சாம் பிளை எடுத்துக்கிட்டு, நானும் மகளும் சென்னையில உள்ள அத்தனை பியூட்டி பார்லர்களுக்கும் ஏறி இறங்கினோம். பல பேர் எங்க ளையோ, எங்க சாம்பிளையோ பார்க்கக்கூட தயாரா இல்லை. வேலையை விடறேன்னு சொன்னப்ப, எங்க பள்ளிக்கூடத்துல சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வரும். மனசு வலிக்கும். ‘தப்பு பண்ணிட்டோமோ’ன்னு மனசுக்குள்ள அழுதிருக்கேன்.
‘பயப்படாதேம்மா... நிச்சயம் ஜெயிச்சிடுவோம்’னு தைரியம் சொன்னது என் மகள். ரெண்டு வருஷப் போராட்டத்துக்குப் பிறகு முதல் ஆர்டர் கிடைச்சது. மறுபடி நம்பிக்கை எட்டிப் பார்த்தது. முதல் ஆர்டர்ல வந்த லாபத்துல இன்னொரு மெஷின் வாங்கினோம். மெல்ல மெல்ல பரவலா ஆர்டர் வர ஆரம்பிச்சது. பாரதிய யுவ சக்தி டிரஸ்ட் அமைப்போட வழிகாட்டுதல் மூலமா, பேங்க் லோன் கிடைச்சது. பிசினஸை இன்னும் விரிவாக்கினோம்.
இன்னிக்கு சென்னையில உள்ள பெரும்பாலான ஆஸ்பத்திரிகளுக்கும், பியூட்டி பார்லர்களுக்கும், ஸ்பா சென்டர்களுக்கும் நாங்கதான் டிஸ்போசபிள் அயிட்டங்களை சப்ளை பண்றோம். ஹிந்துஸ்தான் லீவரோட ஆயுஷ், சஞ்சீவனம், ஆரோக்யா உள்ளிட்ட பெரிய நிறு வனங்களும் அதுல அடக்கம். வேற எங்கேயும் வேலை பார்க்க முடியாதவங்களுக்கு எங்க கம்பெனியில வேலை கொடுத்திருக்கோம். கை, கால் நல்லா இருக்கிறவங்க, எங்க வேணா பொழைச்சுக்குவாங்க.
முடியாதவங்களைத்தான் நாம கைதூக்கி விடணுங்கிறதை ஒரு கொள்கையாவே வச்சிருக்கோம். சென்னையில பிசினஸ் ஓரளவு வள ர்ந்ததும், என் மகள் துபாய்க்கு போயிட்டா. அங்கேயும் எங்க தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு. சர்வதேச மார்க்கெட்டை பிடிக்கணுங்கிற அவளோட ஆசையும் நிறைவேறிடுச்சு. ‘நம்ம கனவு ஒருநாள் நனவாகும்... பாருங்க’ன்னு சொல்லித்தான், எங்க நிறுவ னத்துக்கு ‘ட்ரீம் வீவர்ஸ்’னே பேர் வச்சா என் மகள். அது இப்ப நிறைவேறிடுச்சு...’’ - ஷெரிலின் வார்த்தைகளில் அத்தனை பூரிப்பு!
Address:
|
|
Bharatiya Yuva Shakti Trust
C/o, Confederation of Indian Industry (CII) 98/1, Velachery Main Road Guindy Chennai - 600042 Tel : 044-42444521 (AVK) , 044-42444505 (telefax), 044-42444555 (CII Board Line) e-mail: byst.chennai@cii.in Contact Person: Mr. Baskaran |
- ஆர்.வைதேகி
நன்றி குங்குமம்தோழி
0 comments:
Post a Comment