*தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய் கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.
*கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரிலாம்.
*நாம் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கலாம்.
இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுகலாம்.
*ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும்.
*ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
*பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.
தங்க முலாம் பூச்சு
*வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம்.
*ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.
தயாரிக்கும் முறை
*வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா.
*கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு.
*இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத்தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.
டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு
கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.
2 comments:
GIVE ME A CONTACT NO PLZ
தாங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment