வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கிமூலம் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சிறுதொழில் துறை இணையமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேலையில்லாமல் திண்டாடிவரும் இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் செய்வதற்கு பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி மூலம் ரூ.25 லட்சம் வரை கடனுதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் சிறுதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ.25 லட்சம் கடனுதவிக்கு மறு உத்தரவாதம் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது. 630 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தொழில் செய்ய முன்வரும் இளைஞர்களுக்கு தேவையான கடன் உள்ளிட்ட உதவிகளை 3 மாதங்களில் செய்து தரவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 3 மாதங்களில் திட்டம் தொடங்கி, முடிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன்பெறும் இளம்தொழில் முனைவோர்களுக்கு கிராமப்புறங்களில் 35 சதம் மற்றும் நகர்ப்புறங்களில் 25 சதம் மானியம் அளிக்கப்படும். அதாவது ரூ.25 லட்சம் கடன் பெற்றால், அதில் ரூ.7 லட்சத்தை திரும்பச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.
Thnxs:http://dinamani.com/india/article1423461.ece
0 comments:
Post a Comment