பொற்செல்வியின் நகை கலெக்ஷனில் தோடு, ஜிமிக்கி, வளையல், செயின், பிரேஸ்லெட், மோதிரம், கொலுசு என எல்லாம் இருக்கின்றன. பார்ப்பதற்கு ஆடம்பரமாகக் காட்சியளிக்கிற அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தால், கனமின்றி இருக்கின்றன. ‘‘அத்தனையும் பேப்பர் ஜுவல்லரி’’ என அசத்தல் பதில் தருகிறார் பொற்செல்வி. நம்ப முடியவில்லை. அத்தனை நேர்த்தி... அத்தனை கலர்ஃபுல்!
‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். குடும்பச் சூழல் காரணமா வேலைக்குப் போக முடியலை. எம்பிராய்டரி, ஃபேஷன் ஜுவல்லரினு நிறைய கத்துக்கிட்டேன். அதுல பேப்பர் ஜுவல்லரியும் ஒண்ணு. அதிக முதலீடு தேவைப்படாத தொழிலா இருந்ததால அதையே இப்ப முழுநேர பிசினஸா பண்ணிட்டிருக்கேன்’’ என்கிற பொற்செல்வி, கற்பனையும் கலர்களோடு விளையாடும் திறனும் இருப்பவர்களுக்கு இந்தத் துறையில் பெரிய லாபம் காத்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.‘‘தங்கம், வெள்ளியை விரும்பாத காலேஜ் பொண்ணுங்களுக்கும் சரி, சிம்பிளான ஜுவல்ஸ் போட நினைக்கிற வேலைக்குப் போறவங்களுக்கும் சரி, பேப்பர் ஜுவல்லரிதான் சரியான சாய்ஸ். செய்யறதும் சுலபம்.
ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா நாலஞ்சு செட் வச்சுக்கலாம். 25 முதல் 30 ஷேப்ஸ் பண்ணலாம். ‘பேப்பர் நகையா? வியர்வையோ, தண்ணியோ பட்டா பாழாயிடாதா‘ங்கிற சந்தேகம் வர்றது சகஜம். அப்படி நடக்காம இருக்க நகைகள் மேல வார்னிஷ் கொடுக்கலாம். தோடு, ஜிமிக்கி, பிரேஸ்லெட், வளையல், பென்டென்ட் வச்ச செயின், மோதிரம், கொலுசுனு சாதாரண ஜுவல்லரியில கிடைக்கிற எல்லாத்தையும் பேப்பர்ல பண்ண முடியும். பார்க்கிறதுக்கு பேப்பர் நகைகள் மாதிரியே தெரியாது’’ என்கிறவர், 500 ரூபாய் முதலீட்டில் பேப்பர் ஜுவல்லரி பிசினஸில் இறங்கலாம் என நம்பிக்கை தருகிறார்.
‘‘குவில்லிங் ஸ்ட்ரிப்புகள் (வேற வேற அளவுகளில்), குவில்லிங் செட், பசை, தோடுக்கான கொக்கி, செயினுக்கான கயிறு மற்றும் ஸ்பிரிங், பிளெயின் வளையல், கொலுசுக்கான ஹூக், மோதிரத்துக்கான பேஸ், டிசைன்களுக்காக குவில்லிங் புத்தகம்னு எல்லாத்துக்கும் சேர்த்து 500 ரூபாய் முதலீடு போதும். குவில்லிங் பேப்பர் ஸ்ட்ரிப்பா கிடைக்கும். ஒரு செட்ல 100 ஸ்ட்ரிப்ஸ் இருக்கும். அதுல 5 முதல் 9 செட் பேப்பர் ஜுவல்ஸ் பண்ணலாம். ஒரு நாளைக்கு 3 செட் நகைகளை முழுமையா முடிக்கலாம். அளவு, டிசைனை பொறுத்து இந்த நகைகளை 20 ரூபாய்லேருந்து 300 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம்’’ என்கிற பொற்செல்வியிடம், ஒரே நாள் பயிற்சியில் பேப்பர் ஜுவல்லரி கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,500 ரூபாய். 91763 29517

0 comments:
Post a Comment