இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, May 3, 2014

பஞ்சலோக நகைகளில் பிசியாகலாமா

busy in Panchaloha  jewelryபெண்களின் விருப்பப் பட்டியலில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு அடுத்த இடம் பஞ்சலோக நகைகளுக்குத்தான். கவரிங் நகைகளைப்  போல பத்தே  நாட்களில் பல் இளிக்காது. பளீரென மின்னி, தன்னைப் போலி எனக் காட்டிக் கொள்ளாது. தங்கத்தோடு தங்கமாக  சமர்த்தாகப் பொருந்திப்  போவதுதான் பஞ்சலோக நகைகளின் சிறப்பம்சமே. ஐம்பொன் என்றும் அழைக்கப்படுகிற இந்த பஞ்சலோக  நகை விற்பனையில் பிசியாக  இருக்கிறார்  சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி!

‘‘என்னோட சொந்த உபயோகத்துக்காக வாங்கின பஞ்சலோக நகைகளைப் பார்த்துட்டு, நிறைய பேர் அவங்களுக்கும் அதே மாதிரி  வேணும்னு  கேட்டாங்க. அப்ப அந்த நகைகளை வாங்கி, வீட்லயே வச்சு விற்பனை பண்ணிட்டிருந்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது  தெரிஞ்சதும், நாமே ஏன்  செய்து விற்கக் கூடாதுனு தோணினது. முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, இப்ப தனியா கடையே வச்சு  விற்பனை பண்ற அளவுக்கு  வளர்ந்திருக்கேன். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்புனு அஞ்சு விதமான உலோகங்கள் கலந்து  செய்யறதாலதான் இது பஞ்சலோக நகை.

உடம்புல உள்ள சூட்டைக் குறைச்சு, டென்ஷன் இல்லாம வைக்கும். மோதிரம், தோடு, வளையல், சங்கிலி, கொலுசு, ஆரம், அட்டி கைனு எல்லா  அயிட்டங்களும் உண்டு. சிலது சுத்தமான ஐம்பொன்லயும், சிலது கவரிங் கலந்தும் வரும். தங்க நகைகளுக்கு  இணையா கல், நவரத்தினம் பதிக்கிறது  வரைக்கும் எல்லாம் இதுலயும் பண்ண முடியும்’’ என்கிறார் காந்திமதி. ‘‘ஐம்பொன் நகை களுக்கான மெட்டீரியல் முழுமை செய்யப்படாத  வடிவத்துலதான் கிடைக்கும். அதை வாங்கி, பஃப்பிங் மெஷின்ல ஃபைல் பண்ணி,  பாலீஷ் ஏத்தி, சரியான வடிவத்துக்குக் கொண்டு வரணும்.

முழுமை செய்யப்படாத நகைகள், பஃப்பிங் மெஷின், மோட்டார், பிரஷ், புஷ்... எல்லாத்துக்கும் சேர்த்து ரூ.7,500 முதல் 10 ஆயிரம்  வரை முதலீடு  தேவை...’’‘‘ஒரு நாளைக்கு ஒரே ஆளா வேலை பார்த்தா, 25 முதல் 50 பீஸ் வரைக்கும் பண்ணலாம். உதவிக்கு ஆள்  இருந்தா 200-300 பீஸ்  வரைக்கும் பண்ண முடியும். குறைந்தது 25 ரூபாய்லேருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் அயிட்டங்கள் இருக்கு.  30 சதவிகித லாபம் பார்க்கலாம்’’  என்கிறவரிடம் 2 நாள் பயிற்சியில் இந்தத் தொழிலின் நுணுக்கங்களை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (98404 30258)

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites