காளான் தாய்வித்து மற்றும் படுக்கை வித்து தயாரிப்பு
காளான் வளர்ப்பில் “காளான் வித்து” உற்பத்தி செய்தல் தலையாய ஒன்று. திசு வளர்ப்பு நுணுக்கத்தால் பெட்ரித் தட்டு அல்லது சோதனைக் குழாயில் வளர்க்கப்பட்டுள்ள மூலவித்தைக் கொண்டு தாய் வித்து பின் அதிலிருந்து படுக்கை வித்தும் தயாரிக்கப்படுகின்றன. பிரித்தெடுத்த காளான் பூசண மூலவித்தை சோளம் போன்ற தானியங்கில் வளரச் செய்து அவற்றைத் தாய் வித்தாகப் பயன்படுத்தலாம். ஒருமுறை இவ்வாறு உற்பத்தி செய்த தாய் வித்துப்புட்டிகளிலிருந்து இரண்டு முறை படுக்கை வித்துத் தயாரிக்கலாம். ஒரு தாய் வித்துப்புட்டியிலிருந்து பலமுறை தொடர்ந்து வித்துப் பெருக்கம் செய்தால் பூசணத்தின் வீரியம் குறைந்து காளான் விளைச்சல் பாதிக்கப்படும்.காளான் தாய் வித்து அல்லது படுக்கை வித்துத் தயாரிக்கத் தரமான சோளத்தைத் தண்ணீர் விட்டு அலசி நல்ல சோளத்தைத் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் கொதித்து சோளம் வேகும் நிலையில் ஒன்றிரண்டு சோளங்கள் வெடிக்க ஆரம்பிக்கும் போதோ அல்லது சோளத்தை விரல்களுக்கிடையில் வைத்து நசுக்கினால் மெதுவாக நகங்கும் நிலை வந்தவுடனோ வேக வைப்பதை நிறுத்தி விட வேண்டும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு வேகவைத்த சோளத்தைச் சாக்குப் படுதாவில் பரப்பி ஈரம் போக உலர்த்த வேண்டும். உலர் எடை அடிப்படையில் ஒரு கிலோ சோளத்திற்கு 20 கிராம் கால்சியம் கார்பனேட் தூளை வேக வைத்து ஈரம் போக்கிய சோளத்துடன் நன்கு கலந்துவிட வேண்டும்.
இந்நிலையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வேக வைத்த சோளத்தின் ஈரப்பதமாகும். சோளம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் கையிலெடுக்கும் போது பொல பொலவென்று இருக்க வேண்டும். காளான் வித்து தயாரிப்பதற்க 150 காஜ%( பருமனும் 11”X15” அளவு உள்ள பாலி புரபலீன் பைகளைப் பயன்படுத்த வேண்டும். பின்பு கால்சியம் கார்பனேட் கலந்த சோளத்தை பாலிபுரபலீன் பைகளில் 300 கிராம் அளவில் நிரப்பி வாய்பாகத்தை ஈரம் உறிஞ்சாத பஞ்சினால் அடைத்துப் பின்பு ஒரு காகிதத் துண்டினால் பஞ்சடைப்பானை மூடிச் சணல் நூல் கொண்டு கட்டி விட வேண்டும்.
பின்பு இவ்வாறு தயாரிக்கப்பட்ட பைகளை அழுத்த வெப்ப மூட்டி என்று சொல்லக் கூடிய ஆட்டோகிளேவில் வைத்து 20 ராத்தல் நீராவி அழுத்தத்தில் இரண்டு மணி நேரம் வைத்துத் தொற்று நீக்கம் செய்ய வேண்டும். புட்டிகளின் சூடு ஆறிய பிறகு அவற்றைத் தாய்வித்து அல்லது படுக்கை வித்துத் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
தொற்று நீக்கம் செய்யப்பட்ட சோளம் நிறைந்த புட்டிகளைத் தொற்று நீ்க்கம் செய்யப்பட்ட திசு வளர்ப்பறையினுள் வைக்க வேண்டும். பிறகு பெட்ரித் தட்டில் அல்லது சோதனைக் குழாயில் வளர்த்துள்ள காளான் பூசணத்தைத் தொற்று நீ்க்கம் செய்யப்பட்ட கம்பி மூலம் துண்டுகளாக வெட்டி சோளம் நிறைந்த புட்டிகளுக்கு மாற்ற வேண்டும். ஒரு புட்டிக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் வீதம் இட்டு புட்டிகளை மீண்டும் அதே பஞ்சடைப்பானால் மூடிவிட வேண்டும். ஒரு பெட்ரித்தட்டிலுள்ள பூசணத்திலிருந்து சுமார் 10 தாய் வித்துப் பைகள் வரை தயாரிக்கலாம். ஒரு சோதனைக் குழாயில் உள்ள பூசணத்திலிருந்த இரண்டு தாய் வித்துப்பைகள் தயாரிக்கலாம். இப்புட்டிகளைத் தனியறையில் வைத்து பூசணத்தை வளரச் செய்ய வேண்டும்.
சுமார் 15 நாட்களில் வித்துப் பை முழுவதும் பூசணம் பரவி வெண்மையாகக் காணப்படும். அதன் பின் 3 முதல் 5 நாட்களில் பூசண வளர்ச்சி நிறைவுற்றவுடன் இவற்றைத் தாய் வித்துப் புட்டிகளாகப் பயன்படுத்தலாம்.ஒரு தாய் வித்துப் பையிலிருந்து சுமார் 30 படுக்கை வித்துப் பைகள் வரை தயாரிக்கலாம். இதற்கு நன்கு வளர்ந்த தாய்வித்துப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். தாய் வித்துப் புட்டியிலிருந்து படுக்கை வித்துத் தயாரிக்க இருவர் தேவை. இதையும் திசு வளர்ப்பறையில் தான் செய்ய வேண்டும். ஒரு ஆள் தாய்வித்துப் பை இடது கையில் எடுத்துக் கொண்டு வித்துப் பை மூடியுள்ள பஞ்சடைப்பானை வலது கை விரல்களுக்கிடையே பிடித்துத் திறந்தவுடன் வித்துப்பை வாய்ப் பகுதியைச் சூடாக்க வேண்டும். நுனிப்பகுதி வளைந்த இரும்புக் கம்பி ஒன்றைச் சூடாக்கித் தொற்று நீக்கம் செய்த பிறகு அக்கம்பியால் தாய்வித்துப் புட்டியிலுள்ள வித்துக்களைக் கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது ஆள் படுக்கை வித்து தயாரிப்புக்காக வைத்துள்ள கிளறி விட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது ஆள் படுக்கை வித்து தயாரிப்புக்காக வைத்துள்ள பையை இடது கையில் எடுத்து வலது கையால் பையை மூடியு்ளள பஞ்சடைப்பானை நீக்கி வாய்ப்பகுதியைச் சூடாக்கிய பிறகு எரியும் புன்சன் பர்னருக்கு அருகில் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போது தாய்வித்துப் பையை வைத்திருப்பவர் கிளறி வைத்துள்ள வித்தினை சுமார் 10 கிராம் அளவுக்குப் புதிதாகத் தயாரித்து வைத்துள்ள வித்துப்பை வாய்க்குள் சாய்த்துக் கொட்டிவிட வேண்டும். உடனடியாக படுக்கை வித்துப் புட்டியைச் சூடாக்கி அதே பஞ்சினால் மூடி வைக்க வேண்டும். வேறு நுண்ணுயிரிகள் உட்செல்லாமல் இருக்க அனைத்துச் செயல்முறைகளையும் எரியும் புன்சன் பர்னருக்கு அருகிலேயே செய்ய வேண்டும்.
காளான் பூசணமிட்ட படுக்கை வித்துப்பைகளை வேறொரு அறைக்குள் வைத்துவிட வேண்டும். சுமார் 15 நாட்களில் வித்துப்பை முழுவதும் காளான் பூசணம் நன்கு பரவியிருப்பதைக் காணலாம். பின் 18 முதல் 20 நாட்கள் வளர்ந்த வித்துப்பை காளான் படுக்கை தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். வித்துப்பைகள் தயாரித்திலிருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்துவது சிறந்தது. பாலபுரபைலீன் பைகள் அதிக வெப்பத்தைக் தாங்கக் கூடியவை. தொற்று நீக்கம் செய்யும்போது உருகிவிடாது பயன்படுத்தலாம். வித்துப் பைக்கு வாய்ப் பகுதியாக சுமார் 3 செ.மீ. விட்டமும் 2 செ.மீ. உயரமும் உள்ள பி.வி.சி. பைப்பில் செய்த வளையங்களையும் பயன்படுத்தலாம். பாலிபுரபைலின் பையின் வாய் பகுதியைக் குவித்து வளையத்தினுள்ள செலுத்தி சுமார் 3 செ.மீட்டர் உயரத்திற்கு பையை வெளியே இழுத்து வாய்ப்பகுதியை விரித்துவிட்டு வளையத்தையொட்டி வெளிப்புறமாகக் கீழ்நோக்கி மடித்து விட வேண்டும். இப்போது பையின் அமைப்பு ஒரு கண்ணாடிப் புட்டி போன்றிருக்கும்.
காளான் வித்து உற்பத்தியில் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்
- வித்து தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படும் சோளம் தரமானதாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்காதவாறும் இருத்தல் வேண்டும்.
- சோளம் அரை வேக்காடாக மட்டுமே வேக வைக்க வேண்டும். அதிக நேரம் வேக வைத்தல் குழைந்து போவதோடு இதில் தயாரித்த வித்துக்கள் துர் நாற்றம் வீசும்.
- வித்துப்பைகளின் வாய் பகுதியை அடைக்க ஈரம் உறிஞ்சா பஞ்சுவை காற்று புகா வண்ணம் அடைக்க வேண்டும்.
- தொற்று நீக்கம் செய்யும் போது வெப்பமூட்டியின் இராத்தம் அழுத்தம் மற்றும் புட்டிகளை உள்ளே வைத்திருக்கும் நேரம் ஆகியவைகளை சரியான அளவில் கணக்கிட்டு செயல்படுத்தபட வேண்டும்.
- தொற்று நீக்கிய ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பூசணத்தை உட்செலுத்தி வித்த உற்பத்திக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ஒரு தாய் வித்திலிருந்து இரண்டு தலைமுறைக்கு மேல் வித்துப் பெருக்கம் மேற்கொள்ளப்படக் கூடாது.
- வித்துப்பைகளின் மேல் காளான் இரகம் மற்றும், தயாரித்த தேதி போன்றவைகளை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
- வேற்றுப் பூசணம் தாக்கிய வித்துப்பைகள் மஞ்சள், பச்சை கருப்பு மற்றும் ஊதா நிறங்களுடன் காணப்படும். அவ்வித்துப் பைகளை உடனே அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும். வித்துப்பையை பிரித்தவுடன் காளான் மணம் வீசப்பட வேண்டும். இதுவே நல்ல விதை என்பதைக் குறிக்கும். மாறாக புளித்த வாடை வீசும் வித்துக்களை அகற்றிவிட வேண்டும்.
- வித்துக்களை தயாரித்து ஒரு மாத காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும். அதிக நாள் பட்ட வித்துக்கள் மஞ்சள் நிறத்துடன் ஆடை படர்ந்து இருக்கும். இதனை உபயோகித்தால் மகசூல் குறையும்.
- வித்து தயாரிக்கும் அறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் பார்மலின் திரவத்தை 1:2 என்ற விகித்தில் கலந்து புகையூட்டம் ஏற்படுத்தினால் வித்துப்பைகளில் வேற்று பூசணம் படர்வதை தவிர்க்கலாம்.
தாய்க் காளான் வித்து தயாரிக்கும் முறை
0 comments:
Post a Comment