அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ் வால்டன். 18 வயது இளம் பெண்ணான இவர் 20 அடி நீளத்திற்கு நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இவரது இடது கையில் 10 அடி 2 அங்குல நீளத்திற்கு நகங்கள் வளர்ந்துள்ளன. வலது கையில் 9 அடி 7 அங்குல நீளத்திற்கு நகங்கள் இருக்கின்றன. இது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்டன் கூறும்போது, “நகங்கள் வளர்ப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டேன். ஆனாலும் என் வேலைகளை நானே செய்ததால் நகங்கள் வளைந்து, நெளிந்து வளர்ந்துள்ளன. எல்லாவிதமான சுத்தம் செய்தலையும் நான் வெறுக்கிறேன். ஆனாலும் நகங்களை சுத்தம் செய்ய வேண்டியதாய் இருக்கிறது. அதனால் அதை செய்து விடுகிறேன். நகங்களை அலங்கரிக்கும் `மேக்அப்`களில் அதிகம் கவனம் செலுத்துவேன்” என்கிறார். இவர் பாடகரும் கூட.
இதற்கு முன் உலகிலேயே நீளமான நகங்களுக்கு சொந்தக்காரர் என்ற சாதனைக்குரியவராக திகழ்ந்தவர் லீ ரெட்மாண்ட். சால்ட் லேக் சிட்டியை சேர்ந்த அவர் மொத்தம் 28 அடி நீளத்திற்கு நகங்களை வளர்த்திருந்தார். ஆனால் ஒரு விபத்தில் நகங்கள் முறிந்து போனதால் அவரது சாதனையும் தகர்ந்து போனது. வால்டன் தற்போது அந்த இடத்துக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

0 comments:
Post a Comment