இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Tuesday, November 1, 2011

இறைவனின் பாடைப்புகள் இயற்கையின் எழிலில்



 

ஆண் குயில்
குயில் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது அதன் குரல்தான். ஆனால் அந்தக் குயிலுக்குள் ஒரு குள்ள நரித் தனம் ஒளிந்திருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும் ?
மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும்.
பெண் குயில்
சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும்.
சூதறியாத காகம் குயிலின் முட்டையயும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும்.
ஓன்று கவனித்திருக்கிறீர்களா? குயில் சாதாரணமாக அதிகாலையிலும் மாலையிலும் கூவும். அப்போது முதலில் ஒரு குயில் கூவும். அதைக் கேட்டு மற்றொரு குயில் சற்று தூரத்தில் இருந்து தன் குரல் எழுப்பும். இதைக் கேட்ட மூன்றாவது குயில் இன்னும் கொஞ்ச தூரத்திலிருந்து பாட ஆரம்பிக்கும். பின் முதல் குயில் மீண்டும் தன் குரலை எழுப்பும். இப்படியே பந்தயங்களில் - ரிலே ரேஸ் என்பார்களே - அதுபோல பல குயில்கள் சேர்ந்து தங்களது இசைக் கச்சேரியை நடத்தும்.
செவிலித் தாய் தந்தை காகமல்லாது வேறு ஏதாவது சிறு பறவையாக இருந்தால் குயில் குஞ்சு வளர வளர செவிலிகளின் உண்மைக் குழந்தைகள் நசுங்கியே இறந்துவிடும். சிலசமயம் உணவளிக்கும் சிறு பறவை குயில் குஞ்சின் மீதே வந்திறங்கி உணவளிக்கும்.
தாய் சிறிது சேய் பெரிது

குயில்களில் பல வகை உண்டு. குரல் கேட்டு நாம் மகிழும் குயில் ஒன்று. இது கொஞ்சும் குயில் என்றால் ற்றொரு குயிலின் பெயர் கெஞ்சும் குயில் (Plaintive cuckoo).
அக்கூ ... அக்கூ ...” என்று கூவும் இப்பறவையை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தன் அக்காவை நினைத்து அழுவதாக நம்பும் நம் மக்கள் இதனை அக்கூ பக்ஷி என்றழைப்பார்கள்.




அக்கூ பக்ஷி

கொண்டைக் குயில்


பைடு க்ரெஸ்டெட் குக்கூஎன்றொரு குயில் உண்டு. இது கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். தலையில் கொண்டை போன்று சில சிறகுகள் இருக்கும் இப் பறவைக்கு.

மரங்கள் அடர்ந்த கிராமப் புறங்களில் வேறு ஒரு குயிலினைக் காணலாம். அதன் பெயர் என்ன தெரியுமா ?

(மூளைக் காய்ச்சல் பறவை )
அதன் பெயர் வேட்டையாடும் குயில் அல்லது மூளைக் காய்ச்சல் பறவை (Hawk cuckoo or the Brain fever bird). இதற்கு இப்பெயர் வரக் காரணம் இது எழுப்பும் ஒலிதான். இது கத்தும் போது, ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... ப்ரெய்ன் ஃபீவர்.... என்பது போலக் கத்தும். அவ்வாறு கத்தும்போது இப்பறவை தன் ஒலி அளவு, ஸ்தாயி (volume and pitch) இரண்டையும் உயர்த்திக் கொண்டே போகும். பிறகு சட்டென்று நிறுத்தி விட்டு சில நிமிஷ இடைவெளிக்குப் பின் மறுபடி முதலிலிருந்து தொடங்கும்.
சாதாரணமாக ரோமம் அடர்ந்த ( Hairy caterpillars ) கம்பளிப் பூச்சியை பறவைகள் உண்ணாது. காரணம் உங்களுக்கே தெரியும். தப்பித் தவறி நம்மேல் பட்டு விட்டால் எப்படி அரிக்கும் உடல் பூராவும் ? ஆனால் இந்தப் பறவையோ கம்பளிப் பூச்சியயை சர்வ சுதந்திர மாக உண்ணும். (இதை நேரில் பார்த்து ஆச்சரியப்படும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு முறை கிட்டியது.)


குரல் இனிமை படைத்த இசை பாடும் குயில். இந்தக் குயிலில் தான் எத்தனை விந்தைகளை வைத்திருக்கிறான் இறைவன் !

(வண்ணப் படங்கள் கூகிள் மற்றும் விகிபீடியா இணய தளங்களிலிருந்து)
  
தூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் சொல்லியிருந்தேன்ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின் ஒரு பெண் பறவை ஜோடி சேர்ந்தவுடன் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி ஜோடிகள் சேர்த்துக் கொள்ளும் என்று.
அதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane  என்று அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.
கொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷிஇந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாதுவட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.
வால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள                  இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதுஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும்கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.
கிரௌன்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில்இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும்கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும்இப்பறவை இடும் இரண்டு முட்டையினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான்குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.
கிரௌன்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ, பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீட்டர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா ?  அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌன்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்பும்அதன் பின்னரும் அதிக உயரத்தில் பறக்காது.
பல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வதில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.                                       

வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி

இறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள் எத்தனை காட்சிகள் !!!
                                          
                        (வண்ணப் படங்கள் கூகிள் இணய தளத்தில் இருந்து)

 

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்: தூக்கணாங் குருவி
            
    மேலே:  தூக்கணாங் குருவி – பெண் பறவை 
கீழே: தூக்கணாங் குருவி - ஆண் பறவை
பறவைகளில் தையல்காரர் இருந்தால் அவர் தைப்பதற்குத் துணி வேண்டாமா? துணி என்றால் அதை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் வேண்டுமே. அவர்தான் ஆங்கிலத்தில் Weaver Bird என்று அழைக்கப்படும் தூக்கணாங் குருவி. இந்தக் குருவி ஏன் வீவர் பேர்ட் என்று அழைக்கப் படுகிறது தெரியுமா? இது தன் கூட்டை நெற்பயிரின் இலைகளை நார் நாராகக் கீழித்து எடுத்துக் கொண்டு வந்து பின்னித் தயார் செய்யும். கிராமப் புறங்களிலும் இருப்புப் பாதை அருகிலும் உள்ள நீர் நிலைகளுக்கு மேலாக உள்ள கிளைகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இக்கூடுகள்.
ஆரம்பத்தில் சுண்டு விரல் பருமனில் இருக்கும் இக்கூடுகள் நடுவில் ஒரு பந்து போன்று விரிந்து பின் அதன் ஒரு பக்கத்திலிருந்து ஒரு குழாயாக மாறும். கீழ் நோக்கி இருக்கும் இக்குழாய்தான் கூட்டிற்குள் செல்லும் வழி.
கூட்டினைப் பின்னுவது ஆண் பறவை. பின்னி முடியும் தருவாயில் ஆண் பறவை கூட்டின் மீது அமர்ந்து இறக்கைகளை வேகமாக அடித்தபடி “கிச் கிச் கிச் கிச்......சீ..........”. என தன் குரலை எழுப்பும். துணை தேடி. ஒரு பெண் பறவை கூட்டைப் பார்த்து ஒப்புதல் அளித்து, பின் கூட்டின் உட்புறத்தை பஞ்சு, மெல்லிய காய்ந்த வேர், சருகு இவற்றைக் கொண்டு, முட்டையிட்டு குஞ்சு பொரிக்க லாயக்காக இடம் தயார் செய்யும். மனைவி கிடைத்த ஆண் பறவை பக்கத்திலேயே மேலும் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ என்று கூடுகளைத் தயார் செய்து மேலும் மேலும் துணைகளைத் தேடிக்கொள்ளும்! பொல்லாத பறவை!
(பாதி கட்டப் பட்ட கூண்டினைப் பார்வையிடுகிறது பெண் பறவை. ஓலையில் உட்கார்ந்திருப்பது ஆண் பறவை.)
தூக்கணாங் குருவிகளில் திருடர்களும் உண்டு. ஒரு குருவி கஷ்டப் பட்டு நார் கிழித்துக்கொண்டு வந்து கூட்டினைப் பின்னும்போது மற்றொரு குருவி கடைசியாகப் பின்னப்பட்ட நாரினைத் திருடிச் சென்று தனது கூட்டைப் பின்னும். (இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.)
உருவத்திலும் பருமனிலும் சிட்டுக் குருவி போன்று இருக்கும் இப்பறவை உண்பதிலும் சிட்டுக் குருவி போன்றே தானியங்களைத் தின்னும். நெற் கதிர்கள் முற்றி இருக்கும் தருவாயில் கூட்டம் கூட்டமாக வந்து அவற்றைத் தின்று நஷ்டம் விளைவிக்கும்.
தூக்கணாங் குருவிக்கு முக்கிய எதிரி பாம்பு. மரத்தின் வழியே வந்து கூட்டிற்குள் சென்று குஞ்சுகளைத் தின்றுவிடும். சில சமயம் பளு தாங்க முடியாமல்கூடும் குஞ்சுகளும் பாம்புமாகத் தண்ணீரில் விழுந்து பாம்பு குஞ்சுகளைத் தின்று விழுங்கியபின் கரை ஏறிவிடும். அதனால் தானோ என்னவோ ஒரே சமயத்தில் பல குடும்பங்களைத் தயார் செய்கிறது இப்பறவை.

தூக்கணங் குருவிக்கு மற்றொரு பெயர் பாயாஎன்பது. ஒருக்கால் ஹிந்தி பெயரோ என்னவோ!
தூக்கணாங் குருவிக்கு நேர் எதிர் Sarus Crane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் நாரை இனத்தைச் சேர்ந்த கிரவுன்ச பக்ஷி. இப்பறவை பற்றிப் பின்னர்பார்ப்போம்.
இறைவன் படைத்துள்ள இயற்கையில் தான் எத்தனை எத்தனை விநோதங்கள்!
                                                                      - நடராஜன் கல்பட்டு
                    (வண்ணப் படங்கள் மட்டும் விகிபீடியா இணய தளத்திலிருந்து)

  1. வண்ணாத்திக் குருவி
ஆங்கிலத்தில் 'Magpie Robin' என்றழைக்கப் படும் குருவியின் தமிழ்ப் பெயர் தான் வண்ணாத்திக் குருவி.  வண்ணாத்திக்கும் இந்தக் குருவிக்கும் என்ன சம்பந்தம்வண்ணாத்தியிடம் வெளுத்து இஸ்திரி செய்து வாங்கிய வெள்ளை கருப்பு உடையினை தரித்துள்ளார்ப் போன்ற நிறம் உடையதால் தான் இக்குருவிக்கு இப்பெயரோஅல்லது வண்ணத்துக் குருவி என்ற பெயர் நாளடைவில் வண்ணாத்திக் குருவி ஆயிற்றோ?
           
வண்ணாத்திக் குருவி நாம் வாழும் இடங்களில் காணப் படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைக் காண முடியும்.  மற்ற மாதங்களில் இது மரங்கள் அடர்ந்த இடங்களுக்குச் சென்றுவிடும்.  பிப்ரவரி மாதம் ப்ரகாசமான கருப்பு வெள்ளை உடை தரித்த ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து தனது இசைப் பயிற்சியை ஆரம்பிக்கும்.  முதலில் ஸ்ருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் ஸ்வரங்கள் போகப் போக காதுக்கினிய கீதங்களாக மாறும்.  ஸ்ருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய ராதையும் தோன்றுவாள்.  ராதை வேறு யாரும் இல்லை.  சற்றே பழுப்பேறிய கருப்பு வெள்ளை உடை அணிந்த பெண் வண்ணாத்திக் குருவி   தான்.  இரு குருவிகளும் ஒன்றை ஒன்று துரத்திப் பிடித்து விளையாடும். 
   
                                       ( என் குரல் புடிச்சிருக்கா ? )
இருவர் சந்தோஷமாக இருந்தால் வில்லனுக்குப் பிடிக்காது அல்லவாஎங்கிருந்தோ மற்றொரு ஆண் பறவை இவர்கள் விளையாட்டில் குறுக்கிடும்.  இரு ஆண்களுக்கு இடையே சண்டை நடக்கும்.  வில்லன் தோற்று ஓட இரு பறவைகளும் தங்களது குடும்ப வேலையைக் கவனிக்க ஆரம்பிக்கும், அதாவது வீடு, இல்லை இல்லை, கூடு கட்ட ஆரம்பிக்கும்.
வில்லன் மற்றொரு வண்ணாத்திக் குருவியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.  நீங்களாகக் கூட இருக்கலாம்.  ஆண் குருவி இசை மழை எழுப்பிக்கொண்டு இருக்கும் பொது நீங்கள் அதைப் போலவே சீட்டி அடித்துப் பாருங்கள்.  அது உங்களையும் தாக்கும்

ாம் எழுப்பிய இசை அதன் காதுகளுக்கு நாராசமாக இருந்ததாலா அல்லது நம்மையும் ஒரு வில்லனாக நினைத்துவிட்டதாலா என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். சொந்த அனுபவத்தில்
தான் இதைச்சொல்கிறேன்.
வண்ணாத்திக் குருவி தன் கூட்டினை மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ அமைக்கும்.  கூடு காய்ந்த வேர்கள்,புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை (pad) ஆகும்.  செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும்.  குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும்.
வண்ணாத்திக் குருவியை 1965 ல் படம் பிடித்தபோது ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் இதோ.
பங்களூரில் விதான சௌதா அருகே ஜன நடமாட்டம் நிறைந்த தெரு ஒன்றில் ஒரு மரப் பொந்தில் வண்ணாத்திக் குருவி ஒன்றின் கூட்டினைக் கண்டு  நானும் எனது இரண்டு சகாக்களுமாக படம் பிடிக்க  ஆரம்பித்தோம்.  அலுவகங்களுக்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் எங்களைக் கன்னடத்தில், "என்னங்க, என்ன செஞ்சிகிட்டு இருக்கீங்க?" என்று கேட்டனர்.  நாங்களும் பொறுமையாக பதில் அளித்து வந்தோம்.  மூன்றாவது நாள் ஒருவர் அதே கேள்வியைக் கேட்க மற்றொருவர், "விடுப்பா.  அவங்க பயித்தியம்னு நினைக்கிறேன்.  அந்த மரப் பொந்தயே நாள் பூரா பாத்துகிட்டு நிக்கறாங்க" என்றாரே பார்க்க வேண்டும்!
வண்ணாத்திக் குருவியைக் கண்டால் கவனமாகப் பாருங்கள்.  அதன் ஆடை அழகிலும், குரலிலும் நீங்களும் மயங்கிப் போய் இவற்றை அளித்த ஆண்டவனைக் கட்டாயம் காண்பீர்கள்.
                                                                                 நடராஜன் கல்பட்டு

தையல்காரக்குருவி

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்:
2   தையல்காரக்குருவி
தையல்காரக்குருவி (Orthotomus sutorious) ஆண் பறவை (http://en.wikipedia.org/wiki/Image:Orthotomus_sutorius.jpg)
மனிதர்களில்மட்டும் தானா தையல்காரர்கள்பறவைகளில் இல்லையாஏன் இல்லை.  ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் "கிவீ...கிவீ..." என்று கணீரென  ஒரு குருவியின் குரல் கேட்கிறதாசற்று கூர்ந்து கவனியுங்கள்.  பறவையின தையல்காரரை உங்களால் பார்க்க முடியும்.  அதுதான் 'Tailor bird' என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படும் தையல்காரக்   குருவி. 
குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத் தட்ட இரு மடங்காக.  (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)
இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?
சற்றே அகலமான இலயினைத் தேர்ந்தெடுத்து அதனை பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும்.  பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும்.  தனது கூறிய அலகினைக் கொண்டு இலயின் விளிபில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதை பின் தட்டையாக்கும்.  இவ்வாறு செய்வதால் 'ரிவெட்' அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும்.  ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும்காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை  தயார் செய்யும். (குருவிக்கு பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிரீர்களாகுப்பை மேட்டிலிருந்துதான்) 
இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடு படும்.
 
(குஞ்சுகளுக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)
தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவைகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.
தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்பதற்கு வெகு அழகாக இருக்கும்.  இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோல செய்துகொண்டு தூங்கும்.  இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத் தான்.
(எங்களுக்குத் தூக்கமா வருது)
நாம் தூங்க ஆரம்பிக்கும் போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும்.  சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும் போது மிகவும் பிடித்த பொருளை கையில் வைத்துக் கொண்டிருக்கும்.  ஆனால் தூக்கம் வந்த சற்று  நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டு படுக்கையில் விழுந்துவிடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும்.  அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது. 
இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!

பிரியா நட்பு

 சின்ன சின்ன கதை பேசி
சிரித்து மகிழ்வதற்காய்
சென்ற பல பொழுதுகளில்
சேர்ந்திருந்தோம் நாம்...!

சொந்தபந்தம் எதுவுமின்றி
சொந்த கதை பல பேசி
நித்தம் நித்தம் நீண்ட தூரம்
நினைவுகள் பல பகிர்ந்தோம்...!

நோய்வுற்ற நேரத்திலே
நேரம் காலம் பார்க்காது
நேர்த்தியுடன் என்னருகே
நீ இருந்தாய் ஆறுதலாய்...!

உன் சுமைகள் உட் புதைந்தே
என் பாரம் தோள் தாங்கி
ஏற்றம் காண்பதற்காய்
என்னுடனே உழைக்கின்றாய்...!

சோதனைகள் சூழ்ந்து வர
வேதனையால் வேலியிட்டாய்
விளைபயிராம் நட்பிதனை
பாதகமேது இன்றி
பாதுகாப்பதற்காய்...!

பாசமென்னும் பாத்திரத்தில்
வேசமென்னும் உடையணிந்து,
வெறுப்புடனே கதை பேசி
வெட்டி செல்ல நினைத்தாலும்
ஒட்டியே போகிறது
ஓரிடத்தில் உன் பேச்சு...!

உலகங்கள் பல தாண்டி,
உருவங்கள் தடுமாறி,
உறவேதும் இல்லாது,
உள்ளத்து உணர்வாய்,
இணைந்திட்ட எம் நட்பு.
உயிர் பிரியும் வரை பிரியாது..!
.......................>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.................
நினைக்கும் பொழுதிகளில்
கண்முன் தோன்றி
தவிக்கும் பொழுதுகளில்
தலை தடவி
ஆறுதல் சொல்லி
பாசம் என்னும்
செடியை வளர்த்து
சொந்தம் என்னும்
உறவை கொடுத்து
இன்பம் என்னும்
உணர்வை கொடுத்து
உயிரிலும் மேலான
நட்பைக் கொடுத்து
நட்சத்திரமாக
பிரகாசிக்கும் தோழியே
நீ வேண்டும் என்
வாழ்வின் எல்லை வரை...
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
 பகலினை விழுங்கி
இரவினை பிரசவிக்கும்
இயற்கையின்
விந்தையான நேரத்தில்
சில்லென்று வீசும் காற்று
கரையினை தொட்டு
ஆர்ப்பரிக்கும்
அலைகளின் ஓசை
புதர்களின் மறைவில்
காதலர்களின்
முத்தத்தின் சத்தம்
அங்காங்கே காதல் ஜோடிகள்
இருவர் மட்டும் வெட்டவெளியில்..
அவன் பக்கத்தில் அவள் 
கண்ணீரை அருவியாக கொட்டுகிறாள்
சமுகம் அவர்களை ஏளனம் செய்தது
கள்ள காதல் என்று..
யாருக்கு புரியும் - அவள்
கண்ணீரின் வெளிப்பாடு
ஆழமான நட்பு என்று...
**************************************************************************************

 அன்பாக கவிதை கேட்டாய் ...
ஆசையாய் எழுத அமர்ந்தேன்
இன்ப நினைவுகள் பொங்கின
ஈட்டியாக குத்தியது சோகம்
உடனே தடுமாறியது மனம்
ஊமையாய் அழுதது இதயம்
எப்படி இனி கவிதை எழுத........
ஏனடி உனக்கு பிடிவாதம்
ஐயம் வேணாம் ஆயுசுக்கும் நீ தான்
ஒரு நாளும் மறவேன் உன்னை
ஓர் நாள் மறந்தால் ஓடி வா கல்றைக்கு
பவ்வியமாக தூங்கும் என் உடல்
உன் நினைவுகளோடு......!

எழுதியவர் அருந்தா.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர்
கொண்டு பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க
மலரும் மலரல்ல - உன்
மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை
காதல்...

ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..

நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள்
என் இதயம்....

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக
மாற வேண்டும் என்றால்
நட்பை நேசி - நான்
உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...

தோழியே என் இரு விழிகள்
ஓர் இதயம் தவம் இருப்பது
உன் வரவுக்காகவே.....

என் அன்னை

சுமையாக வந்த என்னை
சுகமாக ஏற்ற தாயே
உன்னை உருக்கி என்னை
வடித்த சிற்பி நீயே
உன் பசியை மறந்து
என் பசியை போக்கியவளே
நாம் அம்மா என்று அழைக்கையில்
அடிவயிறு குளிர்ந்தவளே
முதல் அடி  எடுத்து வைக்கையில்
என்னை ஆயிரம் முத்தமிட்டு
அரங்கேற்றம் செய்தவளே
உனக்கு அபிஷேகம் செய்தாலும்
என் அன்னை உனக்கு
நான் செய்யும் நன்றி
போதாதம்மா.....
.....................................................................................................................................................................
 அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும்
என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னோரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்.

பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டு சென்றதேனம்மா?

நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ?
பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை எனக்கு..

பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...

என்னால் நடிக்க கூட முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் நிரந்தரமாக......
.............................................................................................................................................................................
 

கருவில் தாங்கி
உருவினில் உயிர் பெற
உழைத்தவள் அம்மா
உயிர் எழுத்தின்
உண்மை பெயர்
அம்மா

பிரியாமல் இருப்பதற்காய்
பிரிவை வரமாய் கேட்கிறேன்
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு.... 
.....................................................................................................................................................................................

பத்து மாதம் சுமந்து
பரணியிலே பெற்றெடுத்து
பாலூட்டி தாலாட்டி...
பக்குவமாய் வளர்த்திடுவாய்...

பிள்ளை உள்ளம் தானறிந்து
ப்ரியமுடன் நடந்திடுவாயம்மா
கொஞ்சும் மழலை மொழியினிலே
இன்பத்தை காண்பாயம்மா.....

பச்சிளம் குழந்தயாய்
மண்ணில் தவழும் போது
பார்த்து ரசித்தவண்ணம்
அள்ளி அணைத்திடுவாயம்மா...

அன்னையே உன் அன்புக்கு
நிகர் ஏதம்மா.....
நீர் அடித்து நீர் விலகிடுமா?
உன் அன்பு என் நெஞ்சில்
என்றும் விலகிடாகதம்மா....
................................................................................................................................................................

 அன்பை ஊட்டிய அன்னையே - என்
ஆசைகளையும் தீரத்தயம்மா...
இனிய வாழ்வை தந்தாயே- இறைவன்
ஈசன் அவன் அருளாளே.....

உண்மை பேச கற்றுதந்தாய் - என்னை
ஊரறிய வாழ வைத்தாய்
என் உயிர் தாயே - எனக்கு
ஏழ்மையிலும் கல்வி அறிவை ஊட்டினாய்

ஜயமில்லாத வாழ்வு என்னவென்று- அரவணைத்து
அன்புடனே கற்று தந்தாய்
ஒவ்வொரு இரவும் நான் தூங்க
தாலாட்டு நீ படித்தாய்
ஓங்கி அழும் என் குரல் கேட்டு
ஓடி வந்து தூக்கி அணைப்பாய்
ஒளவை பாட்டி கதை சொல்லி
ஆகாரம் ஊட்டி வளர்த்தாய்
அன்னையே உன் அன்புக்கு
ஏங்குகிறேன் இன்று ...
.......................................................................................................................................................................

நினைவில் உன்முகம் மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு!

மீண்டும்
ஒருமுறை மறுமுறை
வாழ்திட வேண்டும் - உன்
மடியில் எனக்கு மரணமும்
வேண்டும்.

கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் - என்
கண்ணீர் துடைத்த கைகளையிழந்தேன்

எத்தனை பிறவிகள் எடுப்பினும்
அத்தனை பிறவியும் தாயாக வந்துவிடு...

அரை தசாப்பதம்
ஆகியும் கூட - நேற்று
வாழ்ந்தாற்போல்
இன்னும் நெஞ்சில் சில நினைவுகள்....

வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு.......

பட்டு மடியில்
தாலாட்டு....

செல்லம் என்ற
சிறு அணைப்பு.....

சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்

மற்றவர் இல்லை - தாயே!
பெற்றவள் உன் தூயன்புக்கு நிகர்.....

முத்தம்

 கனவில் நீ
ஈரப்படுத்திச் சென்ற
என் உதடுகளில்
உன் அன்பு முத்தங்கள்
இன்னும் காயவில்லை

உன்னோடு
நான் கடந்துவந்த
பாதைகளைத் திரும்பிப்
பார்க்கிறேன்

சில சந்தர்ப்பங்களில்
வலித்தாலும்
நீ அவ்வப்போது
தந்த சின்னச் சின்ன
சில்மிஷங்கள்
இன்னும் இதமாக
என்னை உயிர்பிக்கின்றது

அன்புக்குரியவளே
இத்தனையும் தந்த
உன்னால் என்னை விட்டு
எப்படி பிரிந்து இருக்க
முடிந்தது...

வாழ்கை பயணம்

மனித வாழ்வில்
எண்ணில் அடங்கா ஆசைகளை
எண்ணி எண்ணி வடிவமைத்தாலும்
மாற்றம் என்னும் சொல்லை
மாற்றியே செல்கின்றது
வாழ்க்கை.

கற்பபை வாசலில் இருந்து
துளிர்விடும் தருணம் முதல்
நான்கு கால்களில்
ஊர்வலமாக செல்லும் வரையில்
எத்தனை உறவுகள் 
பாச வலையில்
பாலம் அமைக்கின்றன...

தாயின் வடிவில்...
தந்தையின் வடிவில்...
சகோதர வடிவில்...
காதல் வடிவில்...
நட்பின் வடிவில் என...
விரிந்தே செல்கின்றது
வாழ்க்கை பயணம்...

சந்திப்பவர்கள் எல்லாம்
கூடவே இருப்பார்கள் என
சிந்திக்கும் வேளையில்
வாழ்க்கைப் பயணத்தின்
ஒவ்வொரு நிறுத்ததிலும்
ஒவ்வொருவராக மறைந்து 
போகின்றார்கள்....
இல்லை இல்லை
மறந்தும் போகின்றார்கள்...

உறவுகள் இன்றி
உயிர் துடிக்கும் 
உறவு ஒன்று - இங்கே
தொடங்கிய பயணம்
முடிவினை நோக்கி
காலியான வண்டியாய்
தனித்தே பயணிக்கின்றது
அடுத்த நிறுத்தத்தை நோக்கி

மௌனம்

கொஞ்சி கொஞ்சி பேசும் வஞ்சிகொடியே உன்னில் தஞ்சம் கொள்ள உன் நெஞ்சில் ஓர் இடம் தருவாயோ?

மௌனம்


உன் சுட்டுவிரல் 
காட்டும் திசை நோக்கி
பாய்ந்தோடும் என் மனசு - இன்று
கற்களிலும் முட்களில்
சிக்கி தவிக்கும் நிலையினை
நீ அறியாயோ...

நேற்றுவரை நீ
என்னோடு இருந்த
பசுமையான நினைவுகள்
இன்று பற்றி எரிகின்றது
ஆயிரம் எரிமலையாய்..
நெருப்பாற்றை கடக்கும்
நிலையறியாது தவிக்கும் 
என் நிலை அறியாயோ...

என் வாழ்வின் வெற்றிகள்
உன் உத்தரவின்றி
என்னை முத்தமிட்டதில்லையே..
 இன்று
சாபங்களே வரமாய்
தோல்விகளே நிரந்தமாய்
வலியே வாழ்வாய்
துடி துடிக்கும்
அபலையின் அழு குரல்
உன்னை தீண்டவில்லையா?

என் வாழ்வில்
வசந்தங்கள் வீசிட
வரமாய் யாசிக்கிறேன்
கலைந்து விடு
உன் மெளனத்தை..

அதுக்காக பயந்துட்டே இருந்தா எப்படி ..வாழ முடியாதுங்க... விழிப்புணர்வோடு இருப்போம்....

ஏங்க இப்படியெல்லாம் பண்றாங்க ? - எச்சரிக்கை அவசியம்...


( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை )
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....


ஒரு பெண் :
நான் பொறந்தது ஏழ்மையான குடும்பத்துல. எனக்கு படிக்கனும்னு ஆசை. ஃப்ளஸ் டூ முடிச்சதும் மேல படிக்கனும்னு சொன்னேன்.

ஆனா, 'காசில்லை, வீட்டுலயே இரு'ன்னு சொல்லிட்டாங்க
அந்த சமயத்துல பேப்பர்ல ஒரு விளம்பரம். 'படிப்பும் தரோம் வேலையும் தரோம்'னு. ஃபிளஸ்டூ படித்த கிராமத்துப் பெண்களுக்கு முன்னுரிமை'னு போட்டிருந்தாங்க.

நான் வீட்டுல சொல்லி, அவங்க கொடுத்திருந்த நம்பருக்கு போன் பண்ணினோம். ரொம்ப தன்மையா பேசினாங்க. 'பார்ட் டைமா வேலை பார்த்துக்கிட்டே நர்சு படிப்பு படிக்கலாம், சம்பளமும் கிடைக்கும்'னு சொன்னாங்க. நானும் அப்பாவும் போனோம். நல்லா பேசுனாங்க.

ஒரு லேடிஸ் ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்து ரூம் அங்க இருக்கு
தங்கிங்கன்னு சொன்னாங்க.
' நர்சிங் காலேஜ்ல சேர்க்கிறோம்னு சொன்னாங்க. எங்கப்பாவுக்கு சந்தோசம்.

நல்ல இடத்துல பொண்ணை விட்டிருக்கோம்னு
நிம்மதியா வீட்டுக்கு கிளம்பிப் போனாரு.

ரெண்டாவது நாள் ராத்திரி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துச்சு.

எனக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சு என் உடைகளை அகற்றி படமெடுத்துட்டாங்க.

அடுத்த நாள் காலையில ஒரு பொண்ணு அந்த படத்தை என்கிட்ட காட்டினா.

நாங்க சொல்ற மாதிரி செய்யலைன்னா இதை வெளில எல்லார்கிட்டேயும் காட்டுவேன்'ன்னு மிரட்டினா.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே. வெளியில சொல்ல முடியல.

பயம், அழுகை அழுகையா வந்தது. மூணு நாள் அழுதேன்.

அந்தப் பொண்ணு என்னை தேத்திற மாதிரி பேசினா. கொஞ்சம் பணம் கொடுத்தா.

 அப்பறம் தான் என்னை வெளியில தொழிலுக்கு அனுப்ப ஆரம்பிச்சாங்க.
எங்க போனாலும் கூட ரெண்டு மூணு பேர் வருவாங்க.


இது யாருக்கும் தெரியாது. வேலைக்குப் போற மாதிரி போயிட்டு வருவோம்.

வீட்டுல நான் வேலைப் பார்த்துக்கிட்டே படிக்கிறேன்னு நினைக்கிறாங்க. என்னை மாதிரி நிறைய பெண்கள் இப்படி ஏமாந்திருக்காங்க.

இப்படி விளம்பரம் கொடுத்து ஏமாத்தறது மட்டுமில்லாம வேற சில வழிகளிலும் அப்பாவிப் பெண்களை ஏமாத்துறாங்க.

ஏழ்மையான பெண்கள் படிக்கும் கல்லூரிப் பக்கம் இருக்கும் டெலிபோன் பூத்களில் இதற்கென ஏஜெண்டுகள் இருப்பார்கள்.

அவர்கள் அங்கு வரும் பெண்களை வசியம் செய்து இந்த வலைக்குள் சிக்க வைத்துவிடுவார்கள்.

ஒரு முறை சிக்கினால் வெளியே வர இயலாது. வாழ்க்கை வீதிக்கு வந்துவிடும். எங்களுடனே பல கல்லூரிப் பெண்கள் பார்ட் டைமாக இந்த தொழிலை செய்துகொண்டிருக்கிறார்கள்.


இந்த தொழிலுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது.. அவ்வப்போது வீட்டிற்குச் சென்று ஓரிரு நாள் இருந்துவிட்டு வருவேன்.

அவர்களுக்கு நான் வேலை பார்த்துக்கொண்டே நர்சிங் படிப்பதாக எண்ணம்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் அதிகம் விசாரிப்பதில்லை.

நான் கொடுக்கும் பணம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது(விரக்தியாய் சிரிக்கிறார்) எனக்கும் இந்த வாழ்க்கை பணம் எல்லாம் பழகிடுச்சு. அடிமையாயிடுச்சு.


இனிமே எனக்கு வாழ்க்கை இல்லை' என்று சொல்லும்போது கண்களில் நீர்துளிகள்.

=====================================================================

அதே போல் டீக்கடைக்கு டீ குடிக்க வந்த பையனிடம் ஒரு நபர் நைசாக பேசி பழகி டீ வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த பையனும் அவருடன் சகஜமாக பழகி டீயை வாங்கி குடித்திருக்கிறான்... -கட்-
அந்த பையன் கண்விழித்து பார்க்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறான்.. உடனே ஏதோ ஒரு ஆயுதம் பின்னால் தாக்கப்பட... மயக்கம் ஆகிவிட்டான்.. மீண்டும் கண்விழித்து பார்க்கையில் ஒரு ரூமில் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறான்.

கத்தியை காட்டி மிரட்டப் பட்டு உணவு ஊட்டப்பட்டிருக்கிறான்.. தினமும் ஒருவர் வந்து இன்சக்சன் போட்டிருக்கிறார்.... தொடர்ந்து 15 நாள் போட்டிருக்கிறார் .. பதினைந்தாவது நாள் நெருங்க பையனின் மார்பகம் வளர ஆரம்பிக்கிறது... கடைசியில் சிறு வலி கூட இல்லாமல் அவனது பிறப்புறுப்பு அறுக்கப்படுகிறது.. ... அவன் திருநங்கையாக மாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்.....

( இதெல்லாம் நடந்தது மும்பையில்) ஒரு திருவிழா சமயத்தில் அந்த பையன் தப்பித்து மீண்டும் அவனது ஊருக்கு வந்திருக்கிறான்.. அவனுடைய பெற்றவர்களுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை . நாந்தாம்மா உன் புள்ள அப்படி என்று சொல்லி கதறி அழுதிருக்கிறான்.

தனது பையனை தெருவே நின்று வேடிக்கை பார்க்க...
அவமானம் தாள முடியாமல் குடும்பமே அழுதுதீர்த்தது...
பையன் மனமுடைந்து எல்லாரும் தூங்கிய நேரத்தில் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி இறந்துவிட்டான்...


=====================================================================

தற்பொழுது இணையத்தில் சாட்டிங்கின் மூலம் முகம் தெரியாத பல நபர்கள் பலரோடு பழகிவருகின்றனர்... அந்த பழக்கம் நல்ல விதமாக அமைந்துவிட்டால் பரவாயில்லை இல்லை என்றால் இவர் கதி தான்...

ஒருவர் சாட்டிங்கில் கேர்ள் பிரண்ட் கிடைத்தவுடன் சந்தோசமாக பழகி வந்திருக்கிறார்...உல்லாசமாக இருக்கலாம் வா என அவள் கூப்பிட இவரும் பணத்துடன் சென்றிருக்கிறார்...

சென்ற நேரம் இரவு 7 மணி .வர சொன்ன இடத்திற்கு முன்னதாகவே சென்று நின்றிருக்கிறார்... கார் வந்து நின்று ஒரு பெண் கூப்பிடவும். இவரும் புரிந்துகொண்டு சந்தோசமாக சென்று காரில் ஏறிருக்கிறார்...

கார் விரைந்திருக்கிறது... பிறகு தான் கவனித்திருக்கிறார்..தன்னிடம் பேசியது திருநங்கை என உணர்கிறார்....இவர் காரை நிப்பாட்ட சொல்ல...கார் நிக்காமல் சென்று ஒரு இருட்டான இடத்தில் நிற்கிறது..

அங்கே காத்திருந்த ரவுடிகள் இவரிடம் உள்ள பணம் நகை விலை மதிப்புள்ள செல்போன் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அடித்து துரத்திருக்கின்றனர்.....  (காவல் துறையில் புகார் செய்து பிறகு... அவர்களை பிடித்துவிட்டனர் காவல் துறையினர்)

======================================================================
ஒரு நிமிசம்:

இன்று இணையதளத்தில் சாதாரணமாக எந்த வேர்டையாவது போட்டு தேடினால் ஏகப்பட்ட ஆபாச தளங்கள் வருகிறது.. அதுவும் நாம் உன்னதமாக நினைக்கும் உறவுகளின் பெயர்களை கொச்சைப்படுத்தி நிறைய கதைகளும் படங்களும், காணொளிகளும்...வருகிறது..

இன்றைய சூழ்நிலையில் 6 வது , 7 வது படிக்கும் சிறுவர்களுக்கு எளிதாக இணையத்தை கையாள கூடிய திறமை இருக்கிறது.... இப்படி இணையத்தில் இது போன்று உறவுகளை கொச்சைப்படுத்தும் கதைகள் அவர்கள் கண்ணிற்க்கு ப்டும்போது அவர்கள் வாழ்க்கை தடம்புரண்டு கேள்விக்குறியாகி விடாதா... இப்படியே போனால் .. எதிர்கால சந்ததியரின் நிலை என்ன? நினைத்தாலே வேதனையை தருகிறது.

===============================================================

நண்பர்களே இது போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் பயமுறுத்த சொல்ல வில்லை..நாம் மிகவும் விழிப்புடன் எச்சரிக்கையாக வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்......  நீங்களும் இது போன்ற சம்பவங்கள் கேள்விப் பட்டிருந்தால்..கருத்துக்களில் தெரியபடுத்தவும் அன்பர்களே.... விசயம் தெரிந்து ஏனையவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

============================================================
அதுக்காக பயந்துட்டே இருந்தா எப்படி ..வாழ முடியாதுங்க... விழிப்புணர்வோடு இருப்போம்....



அட நம்ம அண்ணே இன்னும் பயம் தெளியாம இருக்காரு... அவரையும் தெளிய வச்சிட்டு போங்க....
========================================================================
உங்கள் பிரியமானவன்,

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites