பேட்டையில் கல்செக்கு எண்ணெய் உற்பத்தி - பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் குடும்பம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருநெல்வேலி சுத்தமல்லி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது மாடுகள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது.
தற்போது சுத்தமல்லி பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சீனிவாசன் ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மாடுகள் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
இது குறித்து சீனிவாசன் கூறுகையில்... கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை. என்றும் தமிழக அரசு இத்தொழிலுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை கொடுத்தும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் எண்ணைக்கு சந்தையில் வரி விலக்கு அளிக்கவும் வேண்டும் என கூறினார்.
திருநெல்வேலி பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பிரசித்தி பெற்றிருந்த கல்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் வழக்கொழிந்து வருவது குறித்து இத்தொழிலில் பல தலைமுறைகளாக ஈடுபட்டுள்ளவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இத்தொழிலில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், உரிய அங்கீகாரம் அளிக்கவும் அரசுத்துறைகள் முன்வர வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருநெல்வேலி பேட்டையில் செக்கடித்தெரு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை மாடுகளை பயன்படுத்தி கல்செக்குகளை இயக்கி எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கும் தொழில் பிரதானமாக நடைபெற்று வந்தது. இப்போது இயந்திரங்கள் மூலம் செக்குகளை இயக்கி எண்ணெய் உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் தற்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரமயமான இக்காலத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பல வகை எண்ணெய்கள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனாலும் செக்கு எண்ணெய்க்கான மகிமை குறையவில்லை. அதற்கான தேவை இன்றும் உள்ளது. ஆனால், இயற்கை முறையில் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆட்கள் குறைந்துவிட்டனர்.
செக்கடித் தெரு
தற்போது பேட்டையில் செக்கடி தெரு பகுதியில் ஓரிருவர் மட்டுமே செக்கு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் மாடசாமி என்ற அன்பழகன் (62). ஏழாவது தலைமுறையாக இத்தொழிலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இவர் மின்மோட்டார் மூலம் கல்செக்கை இயக்கி எண்ணெய் உற்பத்தி செய்கிறார்.
கல்செக்கு எண்ணெய் உற்பத்தி குறித்து மாடசாமி கூறியதாவது: கல்செக்கை மாடுகள் மூலம் சிறிது சிறிதாக இயக்குவதால் எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது. கல் செக்கில் நல்லெண்ணெயை எடுப்பது லேசான காரியமில்லை. சித்த மருந்து தயாரிப்பதுபோல் சிரத்தையான வேலை.
நூதனமான படைப்பு
கல் செக்கு ஒரு நூதனமான படைப்பு. ஒரே கல்லில் குடைக்கா ளான் வடிவில் குடைந்து அடியில் வட்ட வடிவிலான ஆரக்கற்களை அமைத்திருப்பார்கள். அந்த செக்கின் நடுவில் சுற்றிச்சுழல வாகை மரத்தில் இருந்து செய்யப்பட்ட உலக்கை பொருத்தப்படும். கொக்கி எனப்படும் பெயரில் மரத்தாலான ஒரு ஸ்டே அதை தாங்கி நிற்கும். அதன் கீழ்பகுதி நீண்ட கம்பாலான பலகையால் செக்கின் அடிவாரத்தில் இணைக்கப் பட்டிருக்கும். இந்த பலகையில் அமர்ந்துதான் மாடுகளை பொருத்தி செக்கை ஓட்டுவர்.
எட்டு எள்ளுக்கு ஒரு சொட்டு என்பார்கள். இதை எள்ளிலிருந்து கிடைக்க வேண்டிய எண்ணெயின் அளவாக கொள்ளலாம். இப்போது கல்செக்குகளை இயந்திரங்கள் மூலம் இயக்கும் தொழில்நுட்பத்தை கையாண்டு இத்தொழிலை தொடர்ந்து வருகிறோம்.
கேரளாவில் வரவேற்பு
தற்போது கல்செக்கு மூலம் தயாரிக்கப்படும் நல்லெண்ணெயை ஆயுர்வேத மருத்துவத்துக்காக கேரளத்திலிருந்து வருபவர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின் றனர்.
கல்செக்குகளில் எண்ணெய் தயாரிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் யோசனையை காதி கிராம தொழில்கள் துறை அதிகாரிகளிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித் தோம். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். ஆனால், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னமும் கல்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது என்றார் அவர்.
0 comments:
Post a Comment