இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, August 11, 2016

பூ தலையணை

நீங்கதான் முதலாளியம்மா! 

வீ ட்டு அலங்காரப் பொருட்களிலும் அவ்வப்போது சீசன் மாறும். அந்த வகையில் வட்டமாக, சதுரமாக, நீள் வட்டமாக வீட்டின் மூலைகளை அலங்கரித்த குஷன் தலையணைகளுக்கான மவுசு சற்றே மாறி, இப்போது பூ டிசைன்களில் வருகிற தலையணைகள்தான் ஃபேஷன். சூரியகாந்தி டிசைனில், ரோஜா டிசைனில்... இன்னும் விரும்பிய டிசைன்களில் எல்லாம் இதை உருவாக்கலாம் என்கிறார் சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ராணி.    
``கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரை குஷன் தலையணைகள் ரொம்பப் பிரபலமா இருந்தது. சாட்டின் துணிகள்ல கலர் கலரா, எல்லா வடிவங்கள்லயும் பண்ற அந்தத் தலையணைகளை வீட்ல சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியெல்லாம் உபயோகிக்கலாம். இப்ப அதுக்குப் பதிலா பூ தலையணை ஃபேஷனாக ஆரம்பிச்சிருக்கு. இதையும் வீட்டுக்குள்ள அழகுக்காக எங்கே வேணா வைக்கலாம். குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம்...’’ என்கிறார் ராணி.
பாலியஸ்டர், காட்டன், டர்கிஷ் துணி, வெல்வெட், ஃபெல்ட் என எந்தத் துணியிலும் இந்தத் தலையணைகளை தைக்கலாம். ஒரு தலையணைக்கு 2 மீட்டர் துணி வேண்டும். துணிக்கு 200 ரூபாயும், உள்ளே ஸ்டஃபிங் செய்கிற ைநலான் பஞ்சு மற்றும் இதரப் பொருட்களுக்கு 200 ரூபாயும் செலவாகும். கையிலும் மெஷினிலும் தைக்கலாம்.
``அடிப்படையான கட்டிங் முறையும் தையலும் பிடிபட்டுட்டாலே, ஒரே நாள்ல 4 தலையணைகள் வரைகூட தச்சிடலாம். ஒரு தலையணையை 700 ரூபாய் வரை விற்கலாம். உள்ளே நைலான் பஞ்சு வைக்கிறதால, அழுக்கானாலும் துவைச்சு பயன்படுத்த முடியும். எல்லா கலர் காம்பினேஷன்லயும் பண்ண முடியும்கிறது இன்னொரு சிறப்பு...’’ என்கிற ராணியிடம் 2 நாள் பயிற்சியில் இந்தப் பூ தலையணைகளை டிசைன் செய்யக் கற்றுக் கொள்ளலாம். 3 டிசைன்கள் கற்றுக் கொள்ள தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 1000 ரூபாய். ஒரு டிசைனுக்கு 600 ரூபாய்.
பூ தலையணையை குழந்தைகளை தூங்க வைக்கிறப்ப ரெண்டு பக்கங்கள்லயும் பாதுகாப்புக்காக வைக்கலாம். காருக்குள்ளே வைக்கலாம். சோஃபா மேல, காருக்குள்ள, தரையில உட்காரும்போது திண்டு மாதிரியும் உபயோகிக்கலாம்...

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites